Posts

Showing posts from 2018

AGALYAAVIN PARISU - 29 அகல்யாவின் பரிசு - 29

அகல்யாவின் பரிசு - 29 கண்ணனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. சீனுவிற்கு செய்தி அனுப்பி அவனை மறுநாள் அம்பாசமுத்ரத்திற்கு வரச்சொல்லிருந்தான். தீவிர மருத்துவ சிகிச்சைக்குப்பின் அகல்யா ஓரளவு தெம்புற்றிருந்தாள். கண் விழித்த அவளை சுற்றி சீனு, கண்ணன் , பாரிஜாதம், மைதிலி , கோகுல்நாத் , ஆருஷி (விஜய்யின் தாயார்) மற்றும் கண்ணனுக்கு வேண்டப்பட்ட நண்பர்கள் இருவர் அவளை சுற்றி நின்றிருந்தனர்.  முதலில் அகல்யா ஆருஷிக்கு வணக்கம் சொல்லி , விஜய் எப்படி இருக்கிறார் என்று கேட்க , கால் வீக்கத்தால் நடக்க முடியாதலால் அவன் வரவில்லை, மற்றபடி ஏதும் அபாயம் இல்லை, நான் மட்டும் வந்தேன் உன்னை பார்க்க என்றார். அகல்யாவிற்கு தர்மசங்கடமாக இருந்தது. கண்ணனிடம் ஆருஷி என்ன சொல்லியிருப்பார், நினைக்கவே அவளுக்கு சற்று உறுத்தியது கோகுல்நாத் கனைத்தவாறே கண்ணா புறப்படு கோவிலுக்கு என்று கூற, கண்ணன் அகல்யாவை பார்க்க, அகல்யா சீனுவை பார்க்க, சீனு , அகல்யாவிடம் பயப்படாமே வந்து உண்மையா சொல்லு அகல்யா. இப்போ எல்லாரும் பெரியவங்க ஆயிட்டாங்க , புரிஞ்சிப்பாங்க என்றான் விட்டேத்தியாய். ஐயோ இது சத்தியம் அல்லவா, என்னவெ...

AGALYAAVIN PARISU - 28 அகல்யாவின் பரிசு - 28

அகல்யாவின் பரிசு - 28 அ கல்யா அந்த நீண்ட நெடிய மாளிகையின் வாயிற்கதவருகே தள்ளாடி தள்ளாடி வந்து நின்றாள். முகத்தில் களைப்பு. பசித்த வயிறு. பாசம் பொங்கும் கண்கள். நரைத்த கீற்று ஆங்காங்கே, முதுமை முளை விட்டிருப்பதை பறைசாற்றியது. டக் ...டக் ...டக். வாயிற்கதவை தட்டினாள். காவற்காரன் கதவிடுக்கின் வழியே திறந்து பார்த்து, யாரம்மா என்ன வேணும் என்று கேட்டான்.இப்போது இதோ அகல்யா அரை மயக்கத்தில் இருக்க கோகுல்நாத் காவலாளி கையில் இருந்த பத்திரத்தை பிடுங்கி படிக்கலானார். அதில் ருபாய் 2 கோடிக்கான கொடை பத்திரமும், தென்காசியில் உள்ள சொத்துக்களையும் கண்ணன் பெயரில் எழுதி வைத்து இருந்தது கண்டு ஆனந்தம் கொண்டார். ஆனால் வெளியே காட்டிக்கொள்ளாமல் அவளை அடிக்க மீதும் போக, வேகமாக குறுக்கிட்ட கண்ணன் அவரிடம் இருந்த பத்திரத்தை பிடுங்கி வெறிகொண்டவனாக கத்தினான். அப்பா அங்கேயே நில்லுங்க. இன்னொரு அடி அவங்கமேல விழுந்தா இந்த பத்திரத்தைகிழித்து போட்டுவிடுவேன் என்றதும், கோகுல்நாத் அவரையும் அறியாமல் நின்றுவிட்டார். அவர் இதை எதிர்பார்கவில்லை. ஹூம் நம்ப ரத்தமா இருந்தா இவ்ளோ முட்டாளா இருப்பானா? என்று மீத...

AGALYAAVIN PARISU - 27 அகல்யாவின் பரிசு - 27

அகல்யாவின் பரிசு - 27  கண்ணா நீ தயவு செய்து இந்த விஷயத்தை பத்தி கேட்காதே. அப்பறம் சொல்றேன் . அதுக்கும் ஒரு நேரம் வரும். அதனாலே இப்போ நீ என்ன பாக்க வந்த சந்தோஷத்தை கொண்டாடுவோம். உன்னை பெற்று எடுத்தேனே தவிர , சில மாதங்கள் பிறகு நீ பிரிந்து விட்டாய். உனக்கு ஒரு வாய் சோறு கூட செய்து கொடுக்கல. அதனாலே உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுப்பா , அதை செய்து தருகிறேன் என்றாள்.கண்ணன் அழுதவாறே அம்மா , அம்மா என்று தேம்பினான். நீண்ட உரையாடல்களின் பின்னே, கண்ணன் அம்மா , அப்பா இப்போது பெரிய பணக்கஷ்டத்தில் இருக்கிறார். உங்கள் டிரஸ்ட் மூலம் கடனாக கொடுத்து உதவ முடிந்தால் பெருமை உங்களோடு சேர்ந்து எனக்கும். கட்டாயம் இல்லை. பணத்துக்காக நான் உங்களை பார்க்க வரவில்லை, அதனால் தப்பாக நினைக்கவேண்டாம் . அகல்யா அவனை ஏறிட்டு பார்த்தாள். கண்ணன் வெகுளி. கோகுல்நாத்தை போல் கயவன் அல்ல என்று உணர்ந்ததே அவளுக்கு சந்தோஷமாய் இருந்தது.   மறுநாள் அகல்யா கண்ணனிடம் , கண்ணா நீ ஊருக்கு போ, நான் ரெண்டு நாள் கழிச்சி என் நண்பர்  திரு விஜய் அவர்களுடன் உங்கள் ஊருக்கு வந்து அங்கே தரேன் என்ற...

AGALYAAVIN PARISU - 26 அகல்யாவின் பரிசு - 26

அகல்யாவின் பரிசு - 26. மறுநாள் கண்ணன் வேலைநிமித்தமாக வெளியே சென்றான். கோகுல்நாத் தூங்கி எழுந்து வெளியே வந்தவருக்கு அதிர்ச்சி. பாரு தேம்பி தேம்பி அழுத வண்ணம் இருந்ததை கண்டு என்னம்மா ஆச்சு என்றார். மாமா !! உங்க பிரச்சினையில் என்னை மிகவும் கடிந்து கொண்டுவிட்டு கோபமாக வெளியே சென்று விட்டார். என்ன உங்கள் பிரச்சினை என்பதை தயவுசெய்து சொல்லிவிடுங்கள் என்று மீண்டும் அழ தொடங்கினாள்.கோகுல்நாத் மெல்ல அவள் அருகில் வந்து, அம்மா இதோ பார் அந்த அசிங்க கதையெல்லாம் நீயும் கேட்காதே, அவனையும் கேட்க முயற்சிக்க வேண்டாம் என்று  தடுத்து விடு, அதை தெரிந்து கொண்டால் உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. மேலும்  அந்த உண்மைகளை தெரிந்துகொள்ள ஆசைப்பட்டால் நான் எனது சொத்து எல்லாவற்றையும் அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வைத்துவிட்டு தற்கொலை செயது கொள்ள வேண்டியதுதான். இதுதான் உங்கள் ஆசை என்றால் தாராளமாக நீங்கள் கேளுங்கள் என்றார். இது என்னடா பிள்ளையார் பிடிக்க குரங்கு முளைத்த கதையாகிறதே என்று நினைத்த பாரு , இல்லை இல்லை வேண்டாம் , வேண்டாம், எங்களுக்கு நீங்கள் தான் முக்கியம் என்று கூறிவிட்டு கண்ணைத...

AGALYAAVIN PARISU - 25 அகல்யாவின் பரிசு - 25

அகல்யாவின் பரிசு - 25                          கண்ணன் தனது தாய் நினைவால் வாடினான். கோகுல்நாத்தை என்ன நடந்தது என்று கேட்க கோகுல்நாத் எல்லாவற்றையும் மழுப்பி தனது திட்டத்தை நிறைவேற்ற முனைப்பானார். டேய் கண்ணா!!  உன்னுடைய அம்மா எப்போவுமே இறந்து போய் தெய்வமா அந்த போட்டோவுலயிருக்காங்களே அவங்கதான். வேறுயாரையாவது அம்மான்னு சொல்லிக்கிட்டு என்கிட்டே வந்தே நான் பொல்லாதவன் ஆகிடுவேன் ஜாக்கிரதை என்றார்.  அப்பா, இவங்க என்ன பெத்த அம்மா இல்லையே  தவிர அவங்கள தவிர அவங்க இடத்துல வேற யாரையும் என்னால வச்சி பாக்க முடியாது. அவங்கள போல ஒரு தெய்வம் என்னை சீராட்டி பாராட்டி வளர்த்தது நான் செய்த புண்ணியம் அப்பா. நான் அதை கேட்கல. என்ன பெத்த தாய் அகல்யா அம்மான்னு சொன்னாங்களே, நீங்களும் அவங்களும் ஏன் பிரிஞ்சீங்க எனக்கு விளக்கமாக சொல்லுங்க என்று கேட்க , கோகுல்நாத் எரிமலையானார். டேய் கண்ணா , அதைப்பற்றி எல்லாம் என்னிடம் கேட்காதே. உனக்கு அது தேவையில்லாத , கடந்தகால விஷயம்.  ஒண்ணு ஞாபகம் வச்சிக்கோ கண்ணா  அகல்யா...

AGALYAAVIN PARISU - 24 அகல்யாவின் பரிசு - 24

 அகல்யாவின் பரிசு - 24                                     க ல்பனா காற்றோடு கரைந்து போன செய்தி அகல்யாவை இடியென உலுக்கியது. கண்ணீரும் கம்பளையுமாய் அவளையும் அறியாமல் அலறி அடித்து ஓடிச்சென்று அவர்களின் உடலின் மேல் ஒரு மலர் வளையம் இட்டு பக்கத்தில் நின்றவாறே மனதுக்குள் மௌனக்கண்ணீர் வடித்தாள். எல்லா சடங்கும் முடிந்து அவர் வாழ்ந்த அந்த வீடு வெறுமையானது. ஒரு நாள் மாலை நினைவுகளின் பாரத்தால் மனஅமைதி வேண்டி அகல்யா ,கல்பனா இருந்த அறையில் அவர் படத்தின் முன்பு அமர்ந்து மானசீகமாக பேசிக்கொண்டிருந்த வேளை, விஜய் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினான். அகல்யா ! அகல்யா! என்று படபடப்போடு வந்தவன், அகல்யாவை கண்டவுடன் முகம் மலர்ந்தான். அகல்யா உனக்கு ஒரு குட் நியூஸ் என்றான். அகல்யா அவனை ஏறிட்டு பார்த்து சொல்லுங்க விஜய் என்றாள்  சுரத்தேயில்லாமல். அகல்யா , இப்ப நான் சொல்ற விஷயம் கேட்டா நீ ரொம்ப சந்தோஷப்படுவே என்றான். அகல்யா அவனை நோக்கி புருவம் சுருக்கி சொல்லுங்க சீக்கிரம் என்றாள். விஜய் விவரிக்க ஆரம்பி...

AGALYAAVIN PARISU - 23 அகல்யாவின் பரிசு - 23

அகல்யாவின் பரிசு - 23 அத்தனை எண்ணங்களும் பலவித உணர்வுகளை அவளுள் ஏற்படுத்த அகல்யா தனது தந்தையின் மரணம் அறிந்து மிகவும் துக்கப்பட்டாள். காதற்ற ஊசியும் வாரதுகாண் கடைவழிக்கே என்பது தனது தந்தையின் வாழ்வில் எவ்வளவு பொருந்திப்போய்விட்டது, எதனை  படையவில்லை அவர், பணம் இருந்தது, பதவி இருந்தது, சுற்றம் இருந்தது, நல்ல பெயர் நாட்டில் இருந்தது, மனைவி இல்லை எனினும் பெற்ற அன்னைபோல் பார்த்துக்கொள்ள நல்ல உறவும் நல்ல மகளும் இருந்தது. எல்லாம் இருந்தும் , ஏதும் இல்லா அனாதைபோல் எங்கோபோய் உயிர் நீத்த காரணம், தான் என்பதை நினைத்த மாத்திரத்தில் அகல்யா தன்னையும் மறந்து ஓ வென்று பஸ்சிலேயே அழ தொடங்கினாள். எல்லோரும் வெறித்து பார்க்க அவளுக்கு அது பொருட்டாக தெரியவில்லை. பெற்ற மகன், தாய் இருக்கும் போதே வேறொருவர் மகனாக வளர்வதும், அவனை கண்டு அவனை தொட்டு தழுவி கட்டிக்கொள்ள உரிமை இல்லாமலும், தனது உறவை தெரியப்படுத்திக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பமும் இல்லாததும், இப்படி ஒரு சூழ்நிலை அமைந்ததை அவளால் தாங்கிக்கொள்ளவேமுடியவில்லை. மீண்டும் ஓ வென்று கதறி அழ பஸ்சில் உள்ள அனைவரும் அவள் மேல் பரிதாபம் கொண்டனர். இப்படியே ...

நெற்றியடி

நெற்றியடி சி லநேரம் வெள்ளையரில் என்னஉண்டென்று வியந்ததுண்டு அவர்களது சீரும் சிறப்போ,  பாத்தியதையோ, சலுகையோ அல்லது அதிகாரமோ !! எதுவாயினும் எல்லாமே ஏதுவானது அவர்களுக்கு. பொலிவிழந்து போராடவோ, வாளேந்தி போரிடவோ தேவையிருந்ததில்லை!!!  வரலாறு  - அது எப்போதோ ஒருமுறை சரியாக எழுதப்படுகிறது!! மூண்ட போரும், பெற்ற வெற்றிகளும் மின்னலாம்  ஆனால் அவை பொன்னல்ல, அவை உண்மையுமல்ல, இன்னும் பல,, சாவின் முத்தம், சர்வாதிகாரம், என்று எத்தனையோ வெற்றிகள் வெள்ளையரை பலமாக்கும் ஊக்கிகள். எதிர்ப்போருக்கு  நீடிக்கும் நீண்ட , கடின போருக்கான சவால்கள். நானும் வெள்ளையனே ,  இந்த ஒரு வீச்சத்தில், என் மனை பெண்டிற்க்கு அவர்களை விடவும் வலிமையில். இயற்கையின் சலுகையால் அடைந்த ஆணாதிக்க பலத்தின் வேகம் என் மனை பெண்டிரை அவர்தம் நியாயஉரிமைக்கும் போரிடவைக்கும். நானும் ஒரு ஆயுதமாய் ஆகிப்போனேன் !! அடிக்க, வளைக்க, நசுக்க , பொடிப்பொடியாக்கவென்று. என் பெண்டிற்கு துயரிழைக்கும் இவ்வெள்ளையனை முதலில் கொன்று பின்னரே போரிட்டு வாகை சூட வேண்டும் வெள்ளையனை வென்று.

AGALYAAVIN PARISU - 22 அகல்யாவின் பரிசு - 22

அகல்யாவின் பரிசு - 22 வாழ்க்கை !!!!!   எதிர்பாராத ஆச்சரியங்களின் கூடு.    என்ன வழங்கும் , எதை பிடுங்கும்  என்பதை  கணிக்கமுடியாத காடு.  அகல்யா அப்படிதான் நினைத்தாள். சீனு ஏன் விலகினான். என்ன குறை இருந்திருக்க முடியும்? யோசித்ததில் , அவனுக்கு என்ன கொடுத்தாள் அகல்யா. அவளைக்கூட முழுமையாக கொடுக்கவில்லை. அவனும் அவளை தொட்டதில்லை. இன்று மைதிலியோடு காமக்காட்டாற்றில் களித்து நீந்திக் கொண்டிருக்கிறான். ஐயோ, இவ்வளவுதானா இவன், இதற்குத்தானா ஆசைப்பட்டான் இவன். சொல்லியிருந்தால் அள்ளி கொடுத்திருப்பேனே என்னையையே , பாவி சொல்லாமல் சென்றுவிட்டான், கொல்லாமல் கொன்றுவிட்டான். அகல்யாவிற்கு மைதிலியை பார்த்த கோலம், அவளின் தழும்புகள் இப்போது அவளுக்குள் விரகம் என்னும் இளமை ஊற்றை உருவாக்கிக்கொண்டிருந்தது. என்னே விந்தை. ஊற்றெடுக்குமாம் விரகம், அதில் உண்டாகுமாம் தாகம். தாகம் தீர வழிஇல்லாத பாலைவன ரோஜா பாவம் பரிதவித்தது. நாட்கள் நகர்ந்தது . ராஜலிங்கத்திடம் இருந்து செய்தி வந்தது. சொத்து பரிவர்த்தனையை சட்டரீதியாக முடித்துக்கொள்ள, அகல்யா உடனே தென்காசிக்...

AGALYAAVIN PARISU - 21 அகல்யாவின் பரிசு - 21

அகல்யாவின் பரிசு - 21                          துவண்டுத்தான் போயிருந்தாள் அகல்யா. கண்கள் அழுது , சிவந்து வற்றி போயிருந்தது. ஏதேதோ நினைவுகள். என்ன பாவம் செய்தேனோ இப்பிறவியை பெற.முதலில் தாய் பிரிந்தாள். அன்புடனே அந்த குறை தெரியாது அப்பா வளர்த்தார். அவருக்கு கைமாறாக அவமானமும், மனக்கஷ்டமுமே கொடுக்கமுடிந்தது. இன்று எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை. அன்பான கணவன் , அனாதையாய் விட்டு சென்றது  கொடுமை. பெற்ற பிள்ளையும் பிரிந்துவிட்டது. மணவாழ்க்கையும் பங்கு போட்டு விட்டார்கள்.மானமான கற்பும் பறிபோனது. என்ன கொடுமை இது. எதற்க்காக இந்த பிறவி என்று ஆழ யோசித்தபோது ஒரு விஷயம் ஊர்ஜிதமானது அகல்யாவுக்கு. அவள் பிறவி எடுத்தது அவளுக்காக வாழ அல்ல. ஆண்டவனின் கணக்குப்படி அவள் பிறர்காகவே படைக்கப்பட்டிருக்கின்ற ஜன்மம் என்பதே அது. முடிவெடுத்தாள். தென்காசியில் உள்ளோரை பழிவாங்கும் எண்ணமும் தளர்ந்துபோனது.சரி இனி நம் ஆசாபாசங்கள் அனைத்தையும் மறந்து விட்டு பொது வாழ்வே தன் வாழ்வாய் மாற்றிக்கொண்டு இயன்ற வரை இவ்வுலகிற்கு சேவை ...

முதிர்கன்னி

முதிர்கன்னி விடிந்தது இரவு!! விலகாத கனவு!! துயிலாமல் துயிலெழுந்தாள் !! ஒளியுதிர்ந்த  இளநிலவாள் !!! சுகமான கதிர் விரித்தான் சூரியவதனன் கதிரான பரியுடேவந்துவிடானென் ராஜகுமாரன் குந்தி குந்தி கவலைப்படும் மந்தி இல்லை நான் சூரியனை மணக்கும் மற்றோர் குந்தி நான்.. கீழ்வானம் கைவிட்டதென்று கலக்கம் இல்லை; இனி மேல்வானம் என்னை அழைக்கும் கவலை இல்லை.!!!

AGALYAAVIN PARISU - 20 அகல்யாவின் பரிசு - 20

அகல்யாவின் பரிசு - 20                                  அகல்யா சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்த விபரீதத்தை. அவள் காலுக்கடியில் பூமியே நழுவுவதுபோன்ற ஓர் உணர்வு ஏற்பட , தன்னிலை மறந்து நின்றவளை கதவு திறக்கும் சத்தம் உசுப்பியது. மைதிலி குளியலறையில் இருந்து வெளிப்பட்டாள்.சிவப்போடு மஞ்சளை கலந்த நிறத்தில் மின்னினாள் தாரகையாக. அகல்யாவின் விதியோடு விஷத்தை கலந்தவளாதலால் ஆனாள் சூர்பனகையாக. கொன்றுவிடுமளவு ஆத்திரம் மூள, சென்றுவிடுவென்று மனம் எச்சரித்தது அகல்யாவை. எரிக்கும் விழியால் மைதிலியை பார்த்தவள், அவள் மேனியை எடைபோட்டாள். உள்பாவாடையை மட்டுமே மார்புக்கு குறுக்கில் கட்டியபடி வெளிவந்தவளின் மேனி அழகு, அவள் உன்மத்தத்தில் உழன்று கொண்டிருக்கிறாள் என்பதை பறையடித்தது. சிறுத்த புஜம், பெருத்த தனம், மஞ்சள் பூசியும் மறையாத நகக்கீறல்கள், அவள் கட்டிலறைக் காமயுத்ததின்  கல்வெட்டுச் சான்றுகளாய் திகழ்ந்தது. தடித்த இதழ்களில் கடித்த தழும்புகள், விடைத்த தனங்களின்  அமைப்பு, வெட்டிவிட்ட வாழை கன்றி...

AGALYAAVIN PARISU - 19 அகல்யாவின் பரிசு - 19

அகல்யாவின் பரிசு - 19                                                   தாயின் மனமாற்றம் தனயனுக்கும் பெருத்த ஆச்சர்யம்!! அகல்யாவின் மீது இன்னும் அன்பு அதிகமானது. மாற்றத்தை விரும்பியது மனம். விவாதிக்க நினைத்தது நிஜம், ஆனால் வந்து விழுந்த செய்தியோ விஷம்.ஆம்!!!. சொத்து முழுவதும் அறக்கட்டளைக்கு ஒதுக்குவது என்ற அகல்யாவின் முடிவு சீனுவிற்கு கொடுத்தது பயம். அகல்யாவிடம் விவாதித்தான். வாழ்க்கை  எனும் வழக்கை குடும்ப மன்றத்தில் ஏற்றினான். வாழ்வாங்கு வாழும் வளமையை அடையும் குறி ஒன்றே கொள்கையாக வாதித்தான். அகல்யா மனதுக்குள் சிரித்துக்கொண்டாள் . விந்தையான உலகம். அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் மனிதர்களில் ஒருவனாக சீனு மாறிப்போனது அவளுக்கு ஏமாற்றமே!!.                                             அகல்யா தீர்மானம் எடுத்து முடித்திருந்தாள். சீனுவை அவன் த...

AGALYAAVIN PARISU - 18 அகல்யாவின் பரிசு - 18

அகல்யாவின் பரிசு - 18                                      தாய் மனம் தவித்தது. தறிகெட்டவனா தன் மகன் என துடித்தது. ஆதங்கம் தீர அடித்தாள் மகனை. ஏதுமறியா அப்பாவியவன். அப்பழிச்சுமந்தது அவனின் கருணை. அகல்யா மறித்தாள். அத்தை, அவரை அடிக்கவேண்டாம் வெறுத்து. வேண்டுமென்றால் நான் போய்விடுகிறேன் மரித்து என்றாள்  தாய் மனம் இளகினாள் தாயில்லாத பெண் தந்தையும் இழந்து, மானமும் உதிர்ந்து,  மலையென துயர் கொண்ட அவள் மனம் எப்பாடுபடும் என்பதை அவளின் அந்த வார்த்தை உணர்த்தியது. வீறிட்டு நோக்கினாள் தாய் விதி வசம் வீழ்ந்துவிட்டவளை. அகல்யா இனி உனை வாழ்விப்பது என் பொறுப்பு. உடனே உனக்கும் சீனுவுக்கும் திருமணம் என்று கூறினாள். அமுதும் தேனும் ஆறாய் பொங்கிபுரையேறச்செய்யவல்ல செய்தி, ஏனோ இப்போது கசந்தது. விரக்தியாய் புன்முறுவல் பூத்து, மன புதரில் மறைத்த புதிர் என்று வெளியாகுமா என்று பயந்து மருங்கினாள் அகல்யா.                            ...

AGALYAAVIN PARISU - 17 அகல்யாவின் பரிசு - 17

அகல்யாவின் பரிசு - 17                                    வானம் தூறியது. தூறிக்கொண்டே இருந்தது. துவண்டு போன அந்த பெண் ஜென்மத்திற்கு துண்டு துணி கிடைக்காதா, தனது மானத்தை காத்து கொள்ள என்று குமுறியது. தனது வலிமையால் நீரூற்று ஒன்றின் மூலமாக அவளின் ஆடைகளை அவளிடம் சேர்த்தது. அகல்யா தத்தி தத்தி , தட்டு தடுமாறி அவைகளை எடுத்து அணிந்தாள். சீனுவை நோக்கி நடந்தாள். சீனு மயக்கம் தெளிந்து இருந்தான், ஆனால் பாவம் வாயெல்லாம் ரத்தம் வடிந்துகொண்டிருந்தது.அகல்யா அவனை உசுப்பி எழுப்பிவிட்டாள். அவளும் எழுந்தாள். இருவரும் குடிசையை நோக்கி நடந்தனர்.                                     மறுநாள் விடிந்தது. அகல்யாவிற்கு மனதும், வாழ்வும் இருண்டது. இழப்பதற்கு இனி என்ன ? உயிர் வரை நினைவால் இனித்தவன், பக்கமிருந்தும், உயிருக்குள் உலை கொதித்தது. இவனுக்கு நாம் இனி தாரமாக முடியுமா. ஏதும் புரியாதவனாய் இருக்கும் இவனிடம் மறைத்து விடல...