நெற்றியடி
நெற்றியடி சி லநேரம் வெள்ளையரில் என்னஉண்டென்று வியந்ததுண்டு அவர்களது சீரும் சிறப்போ, பாத்தியதையோ, சலுகையோ அல்லது அதிகாரமோ !! எதுவாயினும் எல்லாமே ஏதுவானது அவர்களுக்கு. பொலிவிழந்து போராடவோ, வாளேந்தி போரிடவோ தேவையிருந்ததில்லை!!! வரலாறு - அது எப்போதோ ஒருமுறை சரியாக எழுதப்படுகிறது!! மூண்ட போரும், பெற்ற வெற்றிகளும் மின்னலாம் ஆனால் அவை பொன்னல்ல, அவை உண்மையுமல்ல, இன்னும் பல,, சாவின் முத்தம், சர்வாதிகாரம், என்று எத்தனையோ வெற்றிகள் வெள்ளையரை பலமாக்கும் ஊக்கிகள். எதிர்ப்போருக்கு நீடிக்கும் நீண்ட , கடின போருக்கான சவால்கள். நானும் வெள்ளையனே , இந்த ஒரு வீச்சத்தில், என் மனை பெண்டிற்க்கு அவர்களை விடவும் வலிமையில். இயற்கையின் சலுகையால் அடைந்த ஆணாதிக்க பலத்தின் வேகம் என் மனை பெண்டிரை அவர்தம் நியாயஉரிமைக்கும் போரிடவைக்கும். நானும் ஒரு ஆயுதமாய் ஆகிப்போனேன் !! அடிக்க, வளைக்க, நசுக்க , பொடிப்பொடியாக்கவென்று. என் பெண்டிற்கு துயரிழைக்கும் இவ்வெள்ளையனை முதலில் கொன்று பின்னரே போரிட்டு வாகை சூட வேண்டும் வெள்ளையனை வென்று.