AGALYAAVIN PARISU - 29 அகல்யாவின் பரிசு - 29
அகல்யாவின் பரிசு - 29 கண்ணனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. சீனுவிற்கு செய்தி அனுப்பி அவனை மறுநாள் அம்பாசமுத்ரத்திற்கு வரச்சொல்லிருந்தான். தீவிர மருத்துவ சிகிச்சைக்குப்பின் அகல்யா ஓரளவு தெம்புற்றிருந்தாள். கண் விழித்த அவளை சுற்றி சீனு, கண்ணன் , பாரிஜாதம், மைதிலி , கோகுல்நாத் , ஆருஷி (விஜய்யின் தாயார்) மற்றும் கண்ணனுக்கு வேண்டப்பட்ட நண்பர்கள் இருவர் அவளை சுற்றி நின்றிருந்தனர். முதலில் அகல்யா ஆருஷிக்கு வணக்கம் சொல்லி , விஜய் எப்படி இருக்கிறார் என்று கேட்க , கால் வீக்கத்தால் நடக்க முடியாதலால் அவன் வரவில்லை, மற்றபடி ஏதும் அபாயம் இல்லை, நான் மட்டும் வந்தேன் உன்னை பார்க்க என்றார். அகல்யாவிற்கு தர்மசங்கடமாக இருந்தது. கண்ணனிடம் ஆருஷி என்ன சொல்லியிருப்பார், நினைக்கவே அவளுக்கு சற்று உறுத்தியது கோகுல்நாத் கனைத்தவாறே கண்ணா புறப்படு கோவிலுக்கு என்று கூற, கண்ணன் அகல்யாவை பார்க்க, அகல்யா சீனுவை பார்க்க, சீனு , அகல்யாவிடம் பயப்படாமே வந்து உண்மையா சொல்லு அகல்யா. இப்போ எல்லாரும் பெரியவங்க ஆயிட்டாங்க , புரிஞ்சிப்பாங்க என்றான் விட்டேத்தியாய். ஐயோ இது சத்தியம் அல்லவா, என்னவெ...