AGALYAAVIN PARISU - 29 அகல்யாவின் பரிசு - 29


அகல்யாவின் பரிசு - 29

கண்ணனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. சீனுவிற்கு செய்தி அனுப்பி அவனை மறுநாள் அம்பாசமுத்ரத்திற்கு வரச்சொல்லிருந்தான்.



தீவிர மருத்துவ சிகிச்சைக்குப்பின் அகல்யா ஓரளவு தெம்புற்றிருந்தாள். கண் விழித்த அவளை சுற்றி சீனு, கண்ணன் , பாரிஜாதம், மைதிலி , கோகுல்நாத் , ஆருஷி (விஜய்யின் தாயார்) மற்றும் கண்ணனுக்கு வேண்டப்பட்ட நண்பர்கள் இருவர் அவளை சுற்றி நின்றிருந்தனர்.


 முதலில் அகல்யா ஆருஷிக்கு வணக்கம் சொல்லி , விஜய் எப்படி இருக்கிறார் என்று கேட்க , கால் வீக்கத்தால் நடக்க முடியாதலால் அவன் வரவில்லை, மற்றபடி ஏதும் அபாயம் இல்லை, நான் மட்டும் வந்தேன் உன்னை பார்க்க என்றார்.

அகல்யாவிற்கு தர்மசங்கடமாக இருந்தது. கண்ணனிடம் ஆருஷி என்ன சொல்லியிருப்பார், நினைக்கவே அவளுக்கு சற்று உறுத்தியது

கோகுல்நாத் கனைத்தவாறே கண்ணா புறப்படு கோவிலுக்கு என்று கூற, கண்ணன் அகல்யாவை பார்க்க, அகல்யா சீனுவை பார்க்க, சீனு , அகல்யாவிடம் பயப்படாமே வந்து உண்மையா சொல்லு அகல்யா. இப்போ எல்லாரும் பெரியவங்க ஆயிட்டாங்க , புரிஞ்சிப்பாங்க என்றான் விட்டேத்தியாய்.

ஐயோ இது சத்தியம் அல்லவா, என்னவென்று சொல்வேன், கண்ணனுக்கு அப்பா யார் என்ற உண்மையையா, அது தனக்கே தெரியாத மர்மமாயிற்றே, ஐயோ கடவுளே என்னை ஏன் இப்படி ஒரு இக்கட்டில் சிக்க வைத்தாய் என்று குமுறத்தொடங்கினாள்.

கண்ணா, அதெல்லாம் வேணாம், என்னோட சொத்து முழுதும் உனக்கே, உண்மையெல்லாம் தெரிந்து என்ன பண்ண போறே என்றவரிடம், மைதிலி வந்து, அகல்யா நாங்கள் மிகவும் நொடிந்து போய்விட்டோம் , உண்மையை சொன்னால் எங்களுக்கும் உன் சொத்தில் சிறிது கண்ணன் கொடுப்பான் என்று நம்புகிறோம், தயவுசெய்து சொல் என்றாள்.

கோகுல்நாத் கனைத்தவாறே, கண்ணா உன்னை அடித்து கொல்ல  நினைத்தது சீனுவாகத்தான் இருக்கவேண்டும், சொத்துக்காக, அதனால் எந்த சத்தியமும் வேண்டாம் , உடனே போலீசில் சீனு மேல் புகார் கூறி உள்ளே தள்ளவேண்டும் என்று கூற.அகல்யா அதிர்ந்தாள்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல் வெகுண்டெழுந்தான் சீனு. முதன் முறையாக சீனு தன மகன் என்பதினை அறிந்த அவனுக்கு, சந்தோஷமும் துள்ளியோடியது. ஐயா மரியாதையா பேசுங்க, உங்க மகன் உங்க மகன்னு சொல்லறீங்களே அவன் யார் மகன் தெரியுமா?, நான் பெத்த மகன், அவனையா நான் கொல்லப்போறேன்? என்று பாய்ந்து சென்று கோகுல்நாதை அடிக்க கை ஓங்கினான்.

நிறுத்துங்க !!!  என்று கிறீச்சிட்டாள் அகல்யா. தயவு செய்து எல்லாரும் இங்கிருந்து போய்டுங்க என்ன கொஞ்சம் நிம்மதியா விடுங்க. இப்படியே நீங்க ஒவ்வொருவரும் ஏதேதோ பேசி என்னை சித்திரஹிம்சை பண்ணிங்கன்னா  நானே என்ன     மாய்ச்சிகிட்டு  மேலபோய்டுவேன் என்றாள் விக்கி விக்கி அழுதுகொண்டே.



எல்லோரும் வெளியில் செல்ல , கோகுல்நாத் மட்டும் தனிமையில் வந்து , அகல்யாவிடம், அம்மா உனக்கு நான் எவ்வளவோ கெடுதல் செய்திருக்கிறேன். உன்ன எங்க இனத்து மக்களோட சேரக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தேன். எல்லாம் எதுக்காகம்மா, நான் கண்ணணின் உண்மையான தகப்பன் இல்லை என்பது தெரியக்கூடாது என்ற ஒரே எண்ணம் மட்டுமே. குழந்தையை என் கையில் கொடுத்த ராஜலிங்கம், இந்த குழந்தையை பெற்றது அகல்யா, அவளை எந்த காரணம் கொண்டும் இவனிடம் நெருங்கவிடாதே என்றே சொல்லிக்கொடுத்தார். ஆகையால் என்ன சுயநலத்திற்காக , நான் பிள்ளை பெற தகுதியில்லாதவன் என்ற உண்மையை மறைக்கவே அப்படி நடந்தேன். என்னை மன்னிச்சுடு அம்மா. தயவுசெய்து இத்தனை நாள் நான் கட்டி காத்த ரகசியத்தை எல்லோர் முன்னிலையிலும் போட்டு உடைக்கவேண்டாம் என்று உன் காலை பிடித்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் அம்மா , என் மானத்தை காப்பாற்று என்று வேண்டி கொண்டார்.

அகல்யா அவரிடம், சரிங்க முயற்சி பண்றேன் என்று கூறி அவரை வெளியே போகும்படி கூறி சீனுவை உள்ளே தனியாக வரும்படி சொல்லி அவரை அனுப்பி வைத்தாள்.  சீனு உள்ளே வந்தான். அகல்யா அவன் முகத்தை பார்க்காமல் எங்கோ விட்டதை பார்த்தவாறு, சீனு உங்கள இது வரைக்கும் நான் எனக்காக இது செய்ங்க அது செய்ங்க என்று கேட்டதில்லை. ஆனா நீங்க நான் கேட்காமலேயே நிறைய உதவி செய்துட்டீங்க , ஆனா இப்போ முதல் முறையா நான் உங்கள ஒண்ணு கேட்கப்போறேன், மறுக்காமல் செய்வீர்களா? என்றாள். உன்னையும், உன் வாழ்வையும் என் அம்மா பேச்சை கேட்டு பாழாக்கிவிட்டுட்டேன் என்ற குற்ற உணர்வு எனக்கு எப்போதுமே உண்டு அகல்யா. உனக்கு என்ன உதவி வேணும்னாலும் செய்றேன். இது நம்ம பையன் மேல ஆணை.

அகல்யா வறட்சியாய் சிரித்தாள். சீனு இது வரைக்கும் நீயும் சரி நானும் சரி கண்ணனுக்கு என்ன செய்திருக்கிறோம். காலமெல்லாம் பாடுபட்டு அவனை ஆளாக்கியது கோகுல்நாத்தோட மனைவி தான். இப்போ பொய் அவன் நம்ம பையன் சொன்ன, இறந்து போன அவங்களுக்கு நாம ஏற்படுத்தப்போற களங்கம், இதுவரைக்கும் அவங்க மேல இருந்த அபிப்ராயத்தை எல்லோர் மனசிலும் மாத்திடும். அது (தனது உதடுகளை கடித்துக்கொண்டு) நம்ம குழந்தய இதனை நாள் வளர்த்த அவங்களுக்கு நாம செய்யுற துரோகம் ஆயிடும். இதனால எதனை பேருக்கு எத்தனை பிரச்சினை வருமோ. பெற்றால் தான் பிள்ளையா சீனு, அவர்கள் பெறாமல் பெட்ரா தாய், நான் பெற்றும் ........  கண் கலங்கி விம்ம தொடங்கினாள்.

சீனு அவள் தோளை தொட்டு ஆறுதல் சொல்ல முற்பட, அவன் கையை தட்டிவிட்ட அகல்யா, ஆறுதலை எதிர்பார்த்து இதை சொல்லல சீனு, இந்த உண்மையை நமக்குள்ளவே புதைச்சிடணும்னு உன்ன கேட்டுக்கிறேன். முதலும் முடிவுமா எனக்கு இந்த உதவிய செய்யணும் சீனு, செய்வியா என்று அவனை நோக்கினாள்.

அவளின் இந்த கோரிக்கை அவனை நிலைகுலைய செய்தது. ஆனால் சூழ்நிலையின் தாக்கம் அவளுக்கு ஒப்புகை கொடுக்க மனம் நிர்பந்திக்க, சீனு தன்னையும் அறியாமல் தலையை ஆட்டினான்.

ஆருஷி வந்தார் அடுத்து. அவளை கண்ட மாத்திரத்தில் மிகவும் தீர்க்கமாக அவளை பார்த்த அவர், மெல்ல பேச தொடங்கினார். பேட்டா, உனக்கு இவ்வளவு சோதனைகள் இருக்கும்னு நான் நெனச்சுக்கூட பார்க்கல, உனக்கு அந்த ஆண்டவன் எல்லா சோதனையும் கடக்க தேவையான தைரியத்தையும் , மனோபலமும் கொடுக்கணும்னு நான் வேண்டுகிறேன்.இதுக்கு மேல உன்னை நானோ என் மகனோ தொந்தரவு செய்யமாட்டோம். ஆனா என்னைக்குமே உனக்காக எங்க வீடும் , இதயமும் ஒரு மகாராணியா வரவேற்க காத்திருக்கும். நான் கிளம்பிறேன்மா என்றவளை அகல்யாவின் கரம் பற்றியது. அவள் கண்களில் கண்ணீர் . மெல்ல சரிந்து ஆருஷியின் மடியில் கவிழ்ந்து தேம்பி தேம்பி அழத்தொடங்கினாள். சிறிது நேரம் கழித்து ஆருஷி புறப்பட்டு விட அகல்யா தீவிரமாக யோசிக்க தொடங்கினாள்.

தொடரும்

















































































Comments

Popular posts from this blog

AGALYAAVIN PARISU - 26 அகல்யாவின் பரிசு - 26

AGALYAAVIN PARISU - 25 அகல்யாவின் பரிசு - 25

PALLI PARUVAM