Posts

Showing posts from 2019

மழையோடு ஓர் உரையாடல்.

மழையோடு ஓர் உரையாடல். உறக்கம் கலைந்தது! அதிகாலை 4 மணி.!! அத்துணை உயிர்களும் ஆழ்நித்திரையில்!! சடசடவென ஓர் சத்தம்!!! கதவுகளின் இதய துடிப்போ அது! யாரின் அழைப்பு இது!! கதவைத்திறந்தேன் அல்ல கனவுகள் திறந்தேன்!! வெளியில் மழையோ மழை. அழைத்தாயோ மழையே!! என்றேன் "கொட்டி நான் தீரும்முன்பே - கண்  கொட்டாமல் உரையாடிவிடு என்னே!!" ஏற்கப்பட்டது மழையின் அழைப்பு. ************************************* எங்கள் உயிரே! என் உற்சாகமே! ஜீவ நதியே! நதியின் மூலமே!! எங்கிருந்து வருகிறாய் என்றே ஏகினேன்                      உலகெலாம் உணர்ந்தவன்!    ஓதற்கு அரியவன் !!                      தலைபிறந்து வருகிறேன், வளம்போற்ற வருகிறேன்! ஜோதிப்பிழம்பாம் எங்கள் ஈசன், அச்ஜோதியில் எங்கனம் நீர் பிறந்ததென சொல்வாயோ மென்மழையே!                      அணுவுக்குள் உலகம் உண்டு !! கல்லுக்குள் ஈரமும் உண்டு       ...

malarum ninavalai

பொங்கும் பூம்புனல் நெஞ்சுக்குள்                         பூபாளம் இசைக்குதடி! தங்குமோர் பனிச்சுழல் தம்தம்முள்          தனிமைக்கும் துணையானதடி! உலகெங்கும் உதிர்ந்திடினும் நட்பகத்துள்                       ஓர்தனிஉலகம்  சுழலுதடி! தாங்கும் நினைவுகள் நம்மில்                                       தாலாட்டு பாடுதடி ! வண்ணங்கள் சேர்வதினால் இது  வானவில்லோ ! வார்த்தைகளை கூடுவதால் இது கவிகளஞ்சியமோ! வாலிபத்தை தக்கவைக்கும் வாழ்வியலோ !! அனுபவத்தை பகிர்வதால் இது அறிவுக்கழகமோ! அத்தனைக்கும் சேர்ந்தபெயர்தான் இம் " மலரும் நினைவுகளோ"!!

AGALYAAVIN PARISU - 30 அகல்யாவின் பரிசு - 30

அகல்யாவின் பரிசு -30  மறுநாள் பொழுது விடிந்தது. இரவு முழுவதும் அழுததால் வீங்கி போன கன்னத்துடனும், சிவந்த கண்களும், அகல்யா இறுக்கமான முகத்துடனும், தீர்மானமான ஓர் முடிவுடனும், கடவுளின் சன்னிதானத்தில் மனசாந்திபெறலாம் என்ற எண்ணத்துடன் கிளம்பினாள். அகத்தியர் அருவிக்கு பரிசலில் செல்ல வேண்டும். பரிசலில் ஏறும் முன்பு கண்ணனுக்கு சொல்லிஅனுப்பிவிட்டு பரிசலில் ஏறினாள். பெற்றால் தான் பிள்ளையா, இல்லை!! என்பதை நிரூபித்து கண்ணனுக்காகவே வாழ்ந்த கோகுலநாதனின் மனைவியின் பெருமை காப்பாற்றப்படவேண்டும். தனது குழந்தை தான் என்று நம்பும் சீனுவிற்கு தான் சீர்கெட்டுஅழிந்ததை கூறி, அவன் இல்லை அப்பன் என்று கூறாமல் அவன் மனநிம்மதியை காக்கவேண்டும்  கோகுல்நாத்துக்கு அவரது வரட்டு கௌரவம் காக்கப்படவேண்டும். தான் கூறப்போகும் உண்மையால் கண்ணன் -- கோகுல்நாத் உறவு பாதிக்கப்படக்கூடாது. தன் பிறப்பில் உள்ள அசிங்கத்தை அறிந்து கண்ணன் வேதனையோ தற்கொலையோ செய்துகொள்ளும் எண்ணம் உருவாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இத்தனை வேண்டுதல்களுக்கும் ஒரு விடை வேண்டும் இறைவா என்று மானசீகமாக அந்த திருச்செந்த...