AGALYAAVIN PARISU - 23 அகல்யாவின் பரிசு - 23
அகல்யாவின் பரிசு - 23 அத்தனை எண்ணங்களும் பலவித உணர்வுகளை அவளுள் ஏற்படுத்த அகல்யா தனது தந்தையின் மரணம் அறிந்து மிகவும் துக்கப்பட்டாள். காதற்ற ஊசியும் வாரதுகாண் கடைவழிக்கே என்பது தனது தந்தையின் வாழ்வில் எவ்வளவு பொருந்திப்போய்விட்டது, எதனை படையவில்லை அவர், பணம் இருந்தது, பதவி இருந்தது, சுற்றம் இருந்தது, நல்ல பெயர் நாட்டில் இருந்தது, மனைவி இல்லை எனினும் பெற்ற அன்னைபோல் பார்த்துக்கொள்ள நல்ல உறவும் நல்ல மகளும் இருந்தது. எல்லாம் இருந்தும் , ஏதும் இல்லா அனாதைபோல் எங்கோபோய் உயிர் நீத்த காரணம், தான் என்பதை நினைத்த மாத்திரத்தில் அகல்யா தன்னையும் மறந்து ஓ வென்று பஸ்சிலேயே அழ தொடங்கினாள். எல்லோரும் வெறித்து பார்க்க அவளுக்கு அது பொருட்டாக தெரியவில்லை. பெற்ற மகன், தாய் இருக்கும் போதே வேறொருவர் மகனாக வளர்வதும், அவனை கண்டு அவனை தொட்டு தழுவி கட்டிக்கொள்ள உரிமை இல்லாமலும், தனது உறவை தெரியப்படுத்திக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பமும் இல்லாததும், இப்படி ஒரு சூழ்நிலை அமைந்ததை அவளால் தாங்கிக்கொள்ளவேமுடியவில்லை. மீண்டும் ஓ வென்று கதறி அழ பஸ்சில் உள்ள அனைவரும் அவள் மேல் பரிதாபம் கொண்டனர். இப்படியே ...