AGALYAAVIN PARISU - 30 அகல்யாவின் பரிசு - 30
அகல்யாவின் பரிசு -30 மறுநாள் பொழுது விடிந்தது. இரவு முழுவதும் அழுததால் வீங்கி போன கன்னத்துடனும், சிவந்த கண்களும், அகல்யா இறுக்கமான முகத்துடனும், தீர்மானமான ஓர் முடிவுடனும், கடவுளின் சன்னிதானத்தில் மனசாந்திபெறலாம் என்ற எண்ணத்துடன் கிளம்பினாள். அகத்தியர் அருவிக்கு பரிசலில் செல்ல வேண்டும். பரிசலில் ஏறும் முன்பு கண்ணனுக்கு சொல்லிஅனுப்பிவிட்டு பரிசலில் ஏறினாள். பெற்றால் தான் பிள்ளையா, இல்லை!! என்பதை நிரூபித்து கண்ணனுக்காகவே வாழ்ந்த கோகுலநாதனின் மனைவியின் பெருமை காப்பாற்றப்படவேண்டும். தனது குழந்தை தான் என்று நம்பும் சீனுவிற்கு தான் சீர்கெட்டுஅழிந்ததை கூறி, அவன் இல்லை அப்பன் என்று கூறாமல் அவன் மனநிம்மதியை காக்கவேண்டும் கோகுல்நாத்துக்கு அவரது வரட்டு கௌரவம் காக்கப்படவேண்டும். தான் கூறப்போகும் உண்மையால் கண்ணன் -- கோகுல்நாத் உறவு பாதிக்கப்படக்கூடாது. தன் பிறப்பில் உள்ள அசிங்கத்தை அறிந்து கண்ணன் வேதனையோ தற்கொலையோ செய்துகொள்ளும் எண்ணம் உருவாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இத்தனை வேண்டுதல்களுக்கும் ஒரு விடை வேண்டும் இறைவா என்று மானசீகமாக அந்த திருச்செந்த...