AGALYAAVIN PARISU - 16 அகல்யாவின் பரிசு - 16
அகல்யாவின் பரிசு - 16 பத்து நாட்கள் கடந்தன. சீனு இன்னமும் படுத்த படுக்கையிலேயே இருந்தான். அகல்யாவிற்கு இப்போது பரவாயில்லை, பழைய நிலைமைக்கு வந்துவிட்டாள். சீனுவிற்கு விஷம் மூளையை தாக்கியதால் அவனுக்கு இப்படி ஓர் நிலைமை. ஆனால் இப்போது கை, கால்களை அசைக்கிறான். அகல்யாவிற்கு நம்பிக்கை துளிர் விட்டது. விரோதிகள் யாரும் அங்கே வராதது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. பாவம் அவள். அது வக்கீலின் நாடகம் என்பது அவளுக்கு புரியவில்லை. ஆம், வக்கீல் தனது போலீஸ் கைக்கூலி, கமிஷனர் அகல்யாவை விரைவில் கண்டுபிடுக்க சொல்லியதை போனில் கூறியஉடனே, ஆட்களை அனுப்பி சீனு சென்ற பைக்கை தேடி , அதை மறைத்து வைக்க சொன்னார். பிறகு அகல்யாவும் , சீனுவும் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் அந்த கிராமத்திலேயே இருக்கும்படி பார்த்துக்கொண்டார். நாராயணசாமிக்கு ருபாய் 50,000 அனுப்பும்படி தந்தி அடித்துவிட்டு காத்திருந்தார். பாவம் நாராயணசாமி இறந்தது தெரியாமல் இலவு காத்த கிளி போல் காத்துக்கிடந்து, கடைசியி...