அகல்யாவின் பரிசு - 7
அகல்யாவின் பரிசு - 7 குதூகலமும் கொண்டாட்டமுமாக நாட்கள் நகர்ந்தன. மறுநாள் அவர்கள் வழக்கப்படி தாய் தந்தையர்க்கு மணப்பெண் பாதபூஜை செய்து நன்றி தெரிவிக்கும் சடங்கு. அதற்கு நாராயணசாமியும் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. அகல்யா அப்பாவின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தாள். நாராயணசாமி அன்று காலை தனது கடைக்கு வந்து அன்றைய அலுவல்களை சீக்கிரம் முடித்துவிட்டு கிளம்ப முடிவெடுத்து துரித கதியில் இயங்கிக்கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீநிவாசன், தன் தாய் கொடுத்ததாக கூறி ஒரு தொகையை நாராயணசாமி வசம் ஒப்படைத்தான். ஸ்ரீனிவாசன், மண்ணின் மைந்தர்களுக்கே உரித்தான மாநிறம் கொண்டவன். கலையான முகம். எப்போதும் சிரிப்பு தவழும் உதடுகள். நல்ல கட்டுமஸ்தான உடம்பு. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன். ஆனால் பகுத்தறிவாளன். நல்ல ரசனை உள்ளவன். கவிதை, கலைகளில் ஈடுபாடு கொண்டவன். நம் கதை நாயகன். "என்ன சீனு, வீட்ல எப்படி நிலவரம்"என்றார் நாராயணசாமி. " ஐயா இப்போ ஒண்ணும் தொந்தரவு இல்ல, சுமுகமா தொழில் நடக்குதுங்க"என்றான். நல்லதுப்பா, ராஜலிங்கத்தால இனிமே ஏதும் பிரச்சினை வராது, எல்லாம் நல்லா...