AGALYAAVIN PARISU - 24 அகல்யாவின் பரிசு - 24

 அகல்யாவின் பரிசு - 24

                                    ல்பனா காற்றோடு கரைந்து போன செய்தி அகல்யாவை இடியென உலுக்கியது. கண்ணீரும் கம்பளையுமாய் அவளையும் அறியாமல் அலறி அடித்து ஓடிச்சென்று அவர்களின் உடலின் மேல் ஒரு மலர் வளையம் இட்டு பக்கத்தில் நின்றவாறே மனதுக்குள் மௌனக்கண்ணீர் வடித்தாள். எல்லா சடங்கும் முடிந்து அவர் வாழ்ந்த அந்த வீடு வெறுமையானது. ஒரு நாள் மாலை நினைவுகளின் பாரத்தால் மனஅமைதி வேண்டி அகல்யா ,கல்பனா இருந்த அறையில் அவர் படத்தின் முன்பு அமர்ந்து மானசீகமாக பேசிக்கொண்டிருந்த வேளை, விஜய் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினான். அகல்யா ! அகல்யா! என்று படபடப்போடு வந்தவன், அகல்யாவை கண்டவுடன் முகம் மலர்ந்தான். அகல்யா உனக்கு ஒரு குட் நியூஸ் என்றான். அகல்யா அவனை ஏறிட்டு பார்த்து சொல்லுங்க விஜய் என்றாள்  சுரத்தேயில்லாமல். அகல்யா , இப்ப நான் சொல்ற விஷயம் கேட்டா நீ ரொம்ப சந்தோஷப்படுவே என்றான். அகல்யா அவனை நோக்கி புருவம் சுருக்கி சொல்லுங்க சீக்கிரம் என்றாள்.


விஜய் விவரிக்க ஆரம்பித்தான். அகல்யா அதை கேட்டு மலைத்து போனாள். கல்பனாவிற்குத்தான் அவள் மேல் எத்துணை அன்பு?!!. ஆம். கல்பனா தனது  சுயமுயற்சியினால் சம்பாதித்த ரூபாய் 25 கோடியை அகல்யாவின் பெயரில் எழுதி, அதை நலிந்த மக்களின் நல்வாழ்விற்காக பயன்படுத்தும்படி வேண்டிக்கொண்டு அவள் பெயரில் பணத்தை போட்டுவைத்திருந்தது தபாலில் விஜய்க்கு வந்த லெட்டரில் எழுதப்பட்டிருந்தது. 

அகல்யா நம்ப முடியாமல் தவித்தாள். கல்பனாவின் கருணையையும் , நம்பிக்கையும் கண்டு மேல் சிலிர்த்தாள். அவளது வாழ்வில் அவளை விடவும் அவள் மீது அதிக நம்பிக்கை வைத்தது கல்பனாவாகத்தான் இருக்கமுடியும். அதை  நினைத்து நினைத்து தேம்பிய அகல்யாவை, சமாதானப்படுத்த விஜய் நெருங்கியபோது, அவளையும் அறியாமல் அவன் நெஞ்ஜில் சாய்ந்து அழ தொடங்கினாள் அகல்யா.

அதிரிபுதிரியாய் இந்த செய்தி காட்டு தீயை போல் எங்கும் பரவ, அகல்யாவின் மகன் கண்ணனின் வளர்ப்பு தந்தையான கோகுலநாதனின் கண்கள் பிரகாசமாய் விரிந்தது. கோகுலநாதன் இப்பொழுது கோகுல்நாத் ஆகியிருந்தார். நரை தட்டிய முடி, கண்களில் தங்கநிற பிரேம் போட்ட கண்ணாடி, வெள்ளை வேட்டி சட்டை என்று ஒரு பெரிய மந்திரியின் இலக்கணத்தோடு வலம் வந்து கொண்டிருந்தார். மந்திரியாக வேண்டும் என்றால் ஒரு பெருந்தொகையை செலவு செய்ய வேண்டிய நிர்பந்தம். ஆனால் அவரிடம் அவ்வளவு பணம் இல்லை. எப்படி பணம் புரட்டுவது என்ற நினைவில் உழன்ற அவருக்கு அகல்யாவின் சொத்தின் மேல் பெரும் ஆசை வந்தது, கூடவே ஒரு திட்டமும்உருவானது. அதை எண்ணி பார்த்து மகிழ்ந்து, பணத்தை அடையப்போகும் மகிழ்ச்சியில் மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.


கண்ணனின் வளர்ப்பு தாயார் மரணப்படுக்கையில் இருந்த பொழுது கண்ணனிடம் எல்லா உண்மைகளையும் தெரிவித்துவிட்டு உயிர் விட்டு விட்டார். கண்ணன் மிகவும் மனமுடைந்து அகல்யாவை காண வேண்டும் என்ற ஆவலில் இருந்தான். நல்ல நேரத்திற்காக காத்திருந்தான்.

அந்த வேளையும் விரைவில் வந்தது ......

தொடரும்.






  









Comments

Popular posts from this blog

AGALYAAVIN PARISU - 26 அகல்யாவின் பரிசு - 26

AGALYAAVIN PARISU - 25 அகல்யாவின் பரிசு - 25

PALLI PARUVAM