AGALYAAVIN PARISU - 25 அகல்யாவின் பரிசு - 25


அகல்யாவின் பரிசு - 25

                         கண்ணன் தனது தாய் நினைவால் வாடினான். கோகுல்நாத்தை என்ன நடந்தது என்று கேட்க கோகுல்நாத் எல்லாவற்றையும் மழுப்பி தனது திட்டத்தை நிறைவேற்ற முனைப்பானார்.

டேய் கண்ணா!!  உன்னுடைய அம்மா எப்போவுமே இறந்து போய் தெய்வமா அந்த போட்டோவுலயிருக்காங்களே அவங்கதான். வேறுயாரையாவது அம்மான்னு சொல்லிக்கிட்டு என்கிட்டே வந்தே நான் பொல்லாதவன் ஆகிடுவேன் ஜாக்கிரதை என்றார். 

அப்பா, இவங்க என்ன பெத்த அம்மா இல்லையே  தவிர அவங்கள தவிர அவங்க இடத்துல வேற யாரையும் என்னால வச்சி பாக்க முடியாது. அவங்கள போல ஒரு தெய்வம் என்னை சீராட்டி பாராட்டி வளர்த்தது நான் செய்த புண்ணியம் அப்பா. நான் அதை கேட்கல. என்ன பெத்த தாய் அகல்யா அம்மான்னு சொன்னாங்களே, நீங்களும் அவங்களும் ஏன் பிரிஞ்சீங்க எனக்கு விளக்கமாக சொல்லுங்க என்று கேட்க , கோகுல்நாத் எரிமலையானார். டேய் கண்ணா , அதைப்பற்றி எல்லாம் என்னிடம் கேட்காதே. உனக்கு அது தேவையில்லாத , கடந்தகால விஷயம்.  ஒண்ணு ஞாபகம் வச்சிக்கோ கண்ணா  அகல்யாவோடு நீ பேசக்கூடாது, உறவாடக்கூடாது, அப்படி மீறி செய்தால் என்னை உயிரோடு பார்க்க முடியாது என்று கொந்தளித்தார். கண்ணன் எவ்வளவோ மன்றாடினான். அவர் கேட்கவில்லை. மாறாக தனது பணத்தேவையை எடுத்து கூறி அதற்கு ஏதாவது உதவ முடியுமா என்று பார் என்றபடி விறுவிறுவென்று வெளியே சென்று விட்டார்.

கண்ணனின் மனைவி பாரிஜாதம் மெல்ல கண் கலங்கி நின்ற கண்ணனிடம் வந்து அவனை தேற்றினாள். கொஞ்சம் விட்டு தான் பிடிங்க. நாளாக நாளாக அவரே உங்களிடம் உண்மையை எல்லாம் சொல்லுவார் பாருங்க என்றாள். கண்ணன் சொன்னான் , நீ சொல்றது சரிதான் பாரு, ஆனால் அம்மா என்று தெரிந்த பின்பு எப்படி பார்க்காமல் இருப்பது. முதல் முறை பார்த்தபோது; வியர்க்க விறுவிறுக்க அவர்களை விரட்டி வந்தவர்களிடம் இருந்துதப்பித்து ஓடிய நிலையில்  பார்த்தேன் . பிறகு ஒருமுறை தாசில்தார் ஆபிசில் ஒரு வீராங்கனைப்போல் நடந்து வந்து அத்துணை அதிகாரிகளிடமும் போராடிய நிலையில் கண்டேன். அவர் வாழ்வு ஏதோ ஓர் மர்மம் நிறைந்த சங்கடத்தில்தான் போய்க்கொண்டிருக்கிறது என்று மட்டும் புரிகிறது , ஆனால் அப்பா அவர்களிடம் பேச கூட கூடாது என்று சட்டம் போடுகிறார். என்ன செய்ய. நான் அவர்களை பம்பாய் சென்று பார்த்து விடுவது என்று முடிவேபண்ணிவிட்டேன் பாரு. நீயும் எனக்கு உதவி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். பாரு சரிங்க என்றபடி கோகுல்நாத்திடம் இதைப்பற்றி பேசி உண்மைகளை தெரிந்துகொள்ள வேண்டும் சென்று மனதுக்குள் முடிவெடுத்தாள்.

தொடரும்
























































Comments

Popular posts from this blog

AGALYAAVIN PARISU - 26 அகல்யாவின் பரிசு - 26

PALLI PARUVAM