AGALYAAVIN PARISU - 18 அகல்யாவின் பரிசு - 18
அகல்யாவின் பரிசு - 18
தாய் மனம் தவித்தது. தறிகெட்டவனா தன் மகன் என துடித்தது. ஆதங்கம் தீர அடித்தாள் மகனை. ஏதுமறியா அப்பாவியவன். அப்பழிச்சுமந்தது அவனின் கருணை. அகல்யா மறித்தாள். அத்தை, அவரை அடிக்கவேண்டாம் வெறுத்து. வேண்டுமென்றால் நான் போய்விடுகிறேன் மரித்து என்றாள் தாய் மனம் இளகினாள் தாயில்லாத பெண் தந்தையும் இழந்து, மானமும் உதிர்ந்து, மலையென துயர் கொண்ட அவள் மனம் எப்பாடுபடும் என்பதை அவளின் அந்த வார்த்தை உணர்த்தியது. வீறிட்டு நோக்கினாள் தாய் விதி வசம் வீழ்ந்துவிட்டவளை. அகல்யா இனி உனை வாழ்விப்பது என் பொறுப்பு. உடனே உனக்கும் சீனுவுக்கும் திருமணம் என்று கூறினாள். அமுதும் தேனும் ஆறாய் பொங்கிபுரையேறச்செய்யவல்ல செய்தி, ஏனோ இப்போது கசந்தது. விரக்தியாய் புன்முறுவல் பூத்து, மன புதரில் மறைத்த புதிர் என்று வெளியாகுமா என்று பயந்து மருங்கினாள் அகல்யா.
நாட்கள் நகர்ந்தன. அழகான ஆண் குழந்தை ஈன்றெடுத்தாள் அகல்யா. சீனு பழைய நிலைமையை எட்டிவிட்டுருந்தான். தொழில் சிறந்தது. வளமை மலர்ந்தது. கடந்த கால கசப்புகளை மறக்க தொடங்கியிருந்தது மனம்.
காலத்தால் ஆறாத காயமும் உண்டோ !! காலம் கற்பிக்காத பாடமும் உண்டோ. அகல்யா இப்போது தன்னிச்சையாக செயல்பட தொடங்கி இருந்தாள். நல்லது எது கேட்டது எது என்று ஆராய்ந்து அவள் வழியில் சென்று கொண்டிருந்தாள். சீனுவும் படு சுறுசுறுப்பாக வணிகத்தை கவனிக்கலானான்.தாய் மனம் மட்டும் ஏனோ தடுமாற துவங்கியது. அகல்யா அரசு சாரா அமைப்பு ஒன்றில் தன்னை இணைத்துக்கொண்டாள். "ஆலன்ந்" கிராம மக்களுக்கு வாழ்வியல் மேம்பாடு பற்றி சிந்தித்து செயலாற்றிக்கொண்டிருந்தாள். வெட்கங்கள் , வேதனைகள், அசிங்கங்கள், அவமானங்கள் அத்தனையையும் சாதனையாக்க செயல் பட்டாள். காலம் கனிந்தது. அவளின் அரசு சாரா அமைப்பு நல்ல பெயர் ஈட்ட அவள் இப்போது அந்த வட்டாரத்தில் பிரபலமாக தொடங்கினாள். தாயின் மனம் தள்ளிப்போக எத்தனித்தது. அகல் விளக்கு போல் அவளின் குடும்பத்திற்கு மட்டும் விளக்கேற்றினால்போதும் என்ற அவள் எண்ணங்களுக்கு எதிராய் அகல்யா கலங்கரை விளக்கமானாள். வேற்றுமை அங்கே வெடித்தது.
நாட்கள் நகர்ந்தன. நாளொரு மேடை, பொழுதொரு விவாதம், நாவன்மையும், அறிவுக்கூர்மையும் கொண்டு வாளேந்தி வெற்றி கண்டாள் பலரின் வாழ்க்கை சிக்கல்களுக்கு. இந்த நிலைமையில் அகல்யாவிற்கு ஒரு சிந்தனை உதித்தது. ஒரு அறக்கட்டளை தன் தந்தையின் பெயரில் ஆரம்பித்து தொண்டு செய்ய வேண்டும் என்று. தாயிடம் கூறினாள் தன் ஆசையை. தாய் தொடங்கினாள் வசையை. வேண்டாம் இந்த விபரீதம். நாம் இன்னும் பொருளாதார ரீதியில் முன்னேற பல படிகள் இருக்கிறது என்றாள்.சீனு அகல்யாவோடு நின்றான். அகல்யா தந்தையின் சொத்துகளை விற்று அதை அறக்கட்டளைக்கு பயன்படுத்த நினைத்திருந்தாள்.
தாய் நொந்துபோனாள். இனி அகல்யா தனது குடும்பத்திற்கு தேவைப்படமாட்டாள் என்று தீர்மானித்தாள். அதற்கான வேலைகளை தொடங்கினாள். அகல்யாவை சீனுவிடம் இருந்து பிரித்து, அவனுக்கு மறுமணம் செய்வித்து அவள் மனம் போல் ஓர் குடும்பம் அமைத்துக்கொள்ள தீவிரமானாள். முதற் கட்டமாக தென்காசிக்கு புறப்பட்டாள். அகல்யா கிராம மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக கைத்தொழில் பல அவர்களுக்கு தீவிரமாக கற்பித்து அதன் மூலமாக தயாரித்த கைவினைப்பொருட்களை நல்ல விலைக்கு வணிகம் செய்விக்கும் முயற்சியில் இருந்தாள்.
அதே நேரத்தில் ராஜலிங்கத்தை அவர் தங்கை சந்தித்தாள். தனது திட்டத்தை அவர் கூற ராஜலிங்கம் சந்தோஷத்தில் நரித்தனமாக ஊளையிட்டார்....
தொடரும்..

Comments
Post a Comment