AGALYAAVIN PARISU - 11 அகல்யாவின் பரிசு - 11
அகல்யாவின் பரிசு - 11 நாராயணசாமி பம்பாயில் வசிக்கும் தன் பால்ய நண்பரிடம் பேசி தேவையான வசதிகளை செய்துகொண்டார். புறப்படும் நாளும் வந்தது. முதலில் நாராயணசாமியும் , அகல்யாவும் பயணமானார்கள். ராஜலிங்கத்தின் ஆள் ஒருவனும் அவர்களுடன் அதே வண்டியில் பயணப்பட்டான் .ஒரு வாரம் கழித்து வரும்படி சீனுவிடம் கூறிவிட்டு கிளம்பி இருந்தார் நாராயணசாமி. அகல்யா பாவாடை தாவணியில் பம்பாய் சென்றாள். அவள் தந்தையின் நண்பர் மகள் அவளை முழுவதுமாக மேற்கத்திய உடைகள் அணிய செய்து ஆளையே அடையாளம் காண முடியாத அளவு மாற்றிஇருந்தாள் தற்பொழுது. தந்தையும் மகளும் முதல் இரண்டு நாட்கள் நண்பர் குடும்பத்தோடு ஒரு சில இடங்கள் சென்று சுற்றி பார்த்தார்கள். ராஜலிங்கத்தின் ஆள் பின்தொடர்ந்து வந்து தகவல் அனுப்பிக்கொண்டிருந்தான...