AGALYAAVIN PARISU - 23 அகல்யாவின் பரிசு - 23

அகல்யாவின் பரிசு - 23


அத்தனை எண்ணங்களும் பலவித உணர்வுகளை அவளுள் ஏற்படுத்த அகல்யா தனது தந்தையின் மரணம் அறிந்து மிகவும் துக்கப்பட்டாள். காதற்ற ஊசியும் வாரதுகாண் கடைவழிக்கே என்பது தனது தந்தையின் வாழ்வில் எவ்வளவு பொருந்திப்போய்விட்டது, எதனை  படையவில்லை அவர், பணம் இருந்தது, பதவி இருந்தது, சுற்றம் இருந்தது, நல்ல பெயர் நாட்டில் இருந்தது, மனைவி இல்லை எனினும் பெற்ற அன்னைபோல் பார்த்துக்கொள்ள நல்ல உறவும் நல்ல மகளும் இருந்தது. எல்லாம் இருந்தும் , ஏதும் இல்லா அனாதைபோல் எங்கோபோய் உயிர் நீத்த காரணம், தான் என்பதை நினைத்த மாத்திரத்தில் அகல்யா தன்னையும் மறந்து ஓ வென்று பஸ்சிலேயே அழ தொடங்கினாள். எல்லோரும் வெறித்து பார்க்க அவளுக்கு அது பொருட்டாக தெரியவில்லை. பெற்ற மகன், தாய் இருக்கும் போதே வேறொருவர் மகனாக வளர்வதும், அவனை கண்டு அவனை தொட்டு தழுவி கட்டிக்கொள்ள உரிமை இல்லாமலும், தனது உறவை தெரியப்படுத்திக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பமும் இல்லாததும், இப்படி ஒரு சூழ்நிலை அமைந்ததை அவளால் தாங்கிக்கொள்ளவேமுடியவில்லை. மீண்டும் ஓ வென்று கதறி அழ பஸ்சில் உள்ள அனைவரும் அவள் மேல் பரிதாபம் கொண்டனர். இப்படியே கரைந்த சில நிமிடங்களில் தென்காசி வந்தடைய, அகல்யா, வேகவேகமாக ரயில் நிலையம் சென்று பம்பாய் ரயில் ஏறினாள்.

நாட்கள் கரைந்தன. போலீஸ் அகல்யாவை தேடி வந்தது. விஜய் அகல்யாவை தேடி வந்தான். நடந்தவைகளை எல்லாம் ஒன்று விடாமல் அகல்யா விஜய்யிடம் கூறி தன்னை காப்பாற்றும்படி கூறினாள். ராஜலிங்கத்தை அரிவாளால் வெட்டியதை மட்டும் அவள் கூறவே இல்லை. போலீஸ் படையின் பொல்லாத கேள்விகளுக்கு எல்லாம் விஜய்யின் அறிவுரைப்படி பதில் கொடுத்தாள். விஜய்யும் தனது செல்வாக்கை பயன்படுத்தி நியாயத்தை நிலை நிறுத்தி அகல்யாவை முழுமையாக அந்த வழக்கிலிருந்து விடுவித்தான்.

 முழுமையான தீர்ப்புக்கு பின், விஜய் அகல்யாவை பார்க்க சென்றான் கையிலொரு பூங்கொத்துடன். அகல்யா அவனை அன்புடன் வரவேற்றாள். இனி எதிர்காலம் பற்றி நிறைய பேசினாள். விஜய் அவளுக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் தான் இருப்பதாகவும் , உதவிக்கு அழைக்கலாம் என்றும் கூறினான்.

கிராம மக்களின் நல்லாதரவோடு இன்னும் பல சமூக இன்னல்களை எதிர்த்து போராடி வந்தால் அகல்யா. அந்த கிராமத்து பெண் குழந்தைகள் பல, மற்றும் அனைத்து ஆண் பிள்ளைகளும் அவள் முயற்சியால் இன்று படிக்கச்சென்று கொண்டிருக்கிறார்கள். குடும்ப பெண்களுக்கு வாழ்வாதாரமாக கைத்தொழில் பயிற்சி கொடுத்து கொடுத்து அங்கே உற்பத்தி செய்யும் பொருட்களை விற்று கொடுக்கும் ஒரு வசதியை ஏற்படுத்தி அங்குள்ள அபலை பெண்கள் மற்றும் ஆதரவற்ற , கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், என பல பெண்களுக்கு விடிவிளக்காய் அகல்யா அமைந்தாள். நோய்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, மது , புகையிலை தீமைகளை விளம்பரப்படுத்தி, ஆண்கள் சில பேரை திருத்தி நல்வழி படுத்தி இருந்தாள்.

இவளது அறிய சேவைகளுக்கு, மக்கள் நன்றியோடு, சில பல விருதுகளும், அங்கீகாரங்களும் கிடைக்கப்பெற்றன. இவளின் அணுகுமுறை, பழகும் தன்மையால் மிகவும் கவரப்பட்ட விஜய் , தனது வேலை இடத்தை நாசிக் மாவட்டதிற்கு  மாற்றிக்கொண்டு வந்துவிட்டான். அகல்யாவிற்கு ஒரு பெரிய ஆறுதலாக, துணையாக, பாதுகாப்பாக அமைந்தது. இவர்கள் இருவரும் அடிக்கடி பார்த்து பேசி பரஸ்பரம் தங்கள் நட்பை வளர்த்து கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு முறை அகல்யா தனது தந்தை மற்றும் மகன் இருவரும் சந்தித்த சோதனைகளை நினைத்து, அதற்கு தானே காரணமாகிவிட்டோமே என்று அவ்வப்போது அழுது புலம்பினாள். ஒரு நாள் மயக்கமும் உற்றாள். அதீத மனஅழுத்தம் காரணமாக இப்படி ஆனதாக டாக்டர் கூறினார். சில நாட்களுக்கு பிறகு, விஜய் அகல்யாவிடம், ஏன் , எதற்கு என்று கேளாமல், தன்னுடன் புறப்பட்டு வருமாறு கூற, அகல்யாவும் அவனுடன் சென்றாள்.

 விஜய் சென்ற இடம் ஒரு யோகா தியான நிலையம். கல்பனா அதன் உரிமையாளர். அமெரிக்காவில் வாழ்ந்து பிறகு தந்து கணவன் , மகன், உறவுகள் எல்லோரையும் ஒரு சாலை விபத்தில் பறிகொடுத்து, துணை இல்லாத காரணத்தினால் பிறந்த ஊரான இங்கு வந்து ஏதோ யோகா நிலையம் என்ற பெயரில் ஒரு மையம் நடத்தி காலத்தை கடத்தி வரும் ஓர் நல்ல உள்ளம். விஜய் அவரிடம் அகல்யாவை பற்றி எடுத்து சொல்லி இருந்தான். ஆதலால் கல்பனா அகல்யாவை அன்போடு வரவேற்று , நன்கு உபசரித்தாள். பிறகு விஜய் அகல்யாவிடம், மனஅழுத்தத்திற்கு யோகா ஒரு நல்ல வடிகால் என்றும், ஆதலால் கல்பனாவிடம் பயிற்சி எடுக்குமாறு வேண்டிக்கொண்டான். அகல்யாவிற்கு கல்பனாவை மிகவும் பிடித்து போனது. ஆதலால் ஏதும் யோசிக்காமல் சரி என்றாள்.

சிலமாதங்களாக பயிற்சி எடுத்து கல்பனாவோடு மிகவும் நெருங்கி பழகினாள் அகல்யா. தனது மொத்த கதையையும் சொல்லி முடித்திருந்தாள். கல்பனாவும் தனது கதையை சொல்லி அகல்யாவின் வருகைக்கு பின் தான் தனக்கு ஒரு ஆத்மநண்பி கிடைத்திருப்பதாகவும், தனது வாழ்வை இன்னும் பலபேருக்கு பயனுள்ளதாக மாற்ற அகல்யா உதவிட வேண்டும் என்று கூறினார்.அகல்யா இரு விழிகளும் வியப்பில் விரிய என்ன செய்ய வேண்டும் என்று கேட்டாள். இளமையில் தாய் தந்தை இழந்து வறுமையால் அலைக்கழிக்கப்படும் பெண் குழந்தைகளை காக்கும் காப்பகம் ஒன்று நடத்த வேண்டும் என்பது தனது மகனது ஆசை என்றும், அவன் ஆன்மா சாந்தியடைய ஒரு காப்பகம் தொடங்க வேண்டும் என்றார். அகல்யா மிக்க மகிழ்ச்சி அடைந்தாள். கண்டிப்பா நான் என்னால் ஆனா உதவியை செய்கிறேன் என்றாள். நிதி உதவி வேண்டுமா, என்றதற்கு, கல்பனா, விரக்தியாய் சிரித்தார். நிதி வேண்டாம் என்னிடம் உள்ளது, எடுத்து செய்ய உன் போன்ற நல்ல மந்துள்ள, தைரியமான பெண் வேண்டும் , நிர்வாகம் செய்யும் திறனாளர் உன்போல் வேண்டும் என்றார். இத்தனை நாள் அப்படி ஒருவர் கிடைக்காமல் ஏங்கியிருந்தேன். எப்போது உன்னை சந்தித்தேனோ அப்போதே நீதான் இதற்க்கு சரியான ஆள் என்று முடிவுக்கு வந்தேன்.ஆகையால் தயைகூர்ந்து உடனே இதற்கான வேலைகளை ஆரம்பித்து விடு என்று வேண்டிக்கொண்டார்.

அகல்யா விஜய்க்கு நன்றி சொன்னாள். தனது வாழ்வில் தான் சந்தித்த சொற்ப நல்ல உள்ளங்களில் விஐய்யோடு அவரும் ஒருவர் என்று கூறி பரவசப்பட்டாள். கபில் கல்பனா பெண்கள் ஆதரவு மையம் தொடங்கப்பட்டது.

இந்த மைய வேலையில் அகல்யா தன்னை அர்பணித்துக்கொண்டாள் என்றே சொல்லவேண்டும். வெகு சீக்கிரமே இடம் பார்த்து, அங்கீகாரம் பெற்று, குழந்தைகளை சேர்த்து நிர்வகிக்க தொடங்கினாள். கல்பனா உச்சி குளிர்ந்து ஆனந்த  கண்ணீர் விட்டார். தன மகனின் கனவை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் அகல்யாவிற்கு ஒவ்வொரு நொடியும் மானசீகமாக நன்றி சொன்னாள். இப்படியே நாட்கள் மாதங்களாகி, வருடங்களாகியது. மையத்தில் 30 பெண் குழந்தைகள் 1 வயதிலிருந்து 14 வயது வரை இருந்தனர். 

எல்லாம் சரியாக நடைபெற்றுக்கொண்டிருந்த அந்த நேரத்தில் அந்த துயர சம்பவம் நடந்தது. ஆம் , மையத்தின் பெண் குழந்தை ஒன்று ஷில்பா என்று பெயர் கொண்ட அந்த குழந்தை ஒரு நாள் அதிகாலை மையத்தின் மூன்றாவது மைலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பிணமாக கிடந்தாள். போலீஸ் அகல்யாவை கைது செய்து சிறையில் அடைக்க, விஜய்யும், கல்பனாவும் நொறுங்கிப்போனார்கள். தீவிர போலீஸ் விசாரணைக்கு பிறகு, விஜய்யின் உதவியாலும், கொலைக்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்க பட்டு அகல்யா வழக்கிலிருந்து விடுதலையானாள்.

அவளது செய்தி வராத நாளிதல்கள் இல்லை. அவளை தெரியாதவர் இந்தியாவிலேயே இல்லை என்னும் நிலைமை உண்டாகியது. அவளை பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் நாளொரு மேனியாய் மறைய  தொடங்கியது. இப்பொழுது அவளுக்கு நல்ல பெயர் மட்டுமே நிலைத்து  இருக்க , அகல்யா மையத்தை இன்னும் பெரிய அளவில் நடத்த முனைப்பு காட்டினாள். 100  குழந்தைகளுக்கு மேல் இப்போது மையம்  செயல்பட,கல்பனா மிகவும் சந்தோஷப்பட்டார்.

ஒரு நாள் கல்பனா , தனக்கு வயது முதிர்ந்து போய்விட்டது என்றும், வெகு விரைவில் தான் மறைந்துவிடக்கூடும் என்றும் ஆதலால் தனக்கு பின் அகல்யாவிற்கு ஒரு துணை ஏற்படுத்திவிட்டு செல்ல தான் ஆசை படுவதாகவும் கூறினார். அகல்யா விரக்தியை சிரித்தாள். எனக்கு இதனை குழந்தைகளை கொடுத்த உங்களுக்கு இன்னும் நான் துணை இல்லாமல் இருப்பதாக சொல்ல எப்படி மனம் வந்தது என்றாள். அது வேறு, இது வேறு அகல்யா, உனக்கு ஒரு வாழ்க்கை துணை வேண்டும். துணை இல்லாமல் வாழ்வது எவ்வளவு கொடுமை  என்பதை உணர்ந்தவள் நான் . நீ ஹூம் என்று சொன்னால் உனக்கு ஒரு நல்ல துணை கிடைக்க நான் முயற்சிக்கிறேன் என்றார். அகல்யா வெட்டி வேலை இது என்று கூறி அந்த சம்பாஷணைக்கு  முற்று புள்ளி வைக்க  முனைய,அவளுக்கு அது ஆச்சர்யக்குறியை அவளுக்குள் உண்டாக்கியது . ஆம் கல்பனாவின் சொற்கள் அவளை ஆச்சரியத்திற்கு உள்ளாகியது. அது என்னவென்றால் விஜய் உன்னை விரும்புகிறான். உன்னை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான் என்ற அந்த சொற்கள்.

அகல்யாவிற்கு ஏதோ ஒரு பட்டாம்பூச்சி மனதிற்குள் சிறகடித்து பறக்கும் உணர்வு  எழுந்தது. லேசாக எத்தனையோ வருடங்கள் தொலைந்துபோய் இருந்த வெட்கம் அவளிடம் எட்டிப்பார்த்தது. கல்பனா ஒரு தாயை போல் தெரிந்தார். தாயில்லாத அந்த பெண் தனது தாயை , தாய்மையை  ஒரு கணம்  அனுபவித்தாள். அகல்யாவின் கண்களில் நீர் துளிர்த்து அவள் கன்னங்களில் வழிவதை கல்பனா பார்க்க  முடிந்தது. அகல்யா எதை பற்றியும் கவலை கொள்ளாதே. மீதம் உள்ள உன் வாழ்விற்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டு வாழ்வதே புத்திசாலித்தனம் என்றார்.

அகல்யா , விரக்தியாய் ஆமாம் ஜி நான் யாரை கேட்க வேண்டும், என் புருஷனையா அல்ல மகனையோ, எனக்கு தான் யாரும் இருந்தும் இல்லாமல் இருக்கின்றனரே என்று குத்தலாக பேசினாள்.

கல்பனா முகம் வாடியது. அகல்யா உன்னை ஏதாவது தவறாய்  கேட்டிருந்தால் என்னை மன்னித்துவிடு என்று சோகமாக கூற, அகல்யா ஓடி சென்று அம்மா உங்கள் ஒருவர் துணையே எனக்கு போதும் என்று அவர் வாயை மெல்ல மூடினாள். உங்களை என் தாய் போல்தான் நான் இந்த நிமிடம் முதல் பாவிக்கிறேன். என்னை பற்றியும் நினைக்க,என் நல்வாழ்வை பற்றி திட்டமிட எனக்கு ஒரு உன்னத உள்ளம் கிடைத்ததே பெரிய வரம். உங்கள் ஆசை எதுவானாலும் நான் நிறைவேற்றுகிறேன் அம்மா அனால் இது மட்டும் வேண்டாமே என்று கொஞ்சலாய் கூறினாள். விஜய்க்கு நான் என்ன பதில் சொல்ல என்றார். அவரிடம் நானே பேசுகிறேன் நீங்கள் கவலையை விடுங்கள் என்றால் அகல்யா. உனக்கு நீயே வரன் பேசி முடித்துகொள்ளப்போகிறாயா என்று குறும்பாக கூறிவிட்டு கல்பனா விடைபெற்றார்.

அகல்யா புரண்டு படுத்தாள். தூக்கம் வரவில்லை. விஜய்யை ஏற்பதா அல்லது நண்பனாகவே தொடருவதா. இவனும் சீனுவை போல் தன்னிடம் எதாவுது எதிர்பார்க்கின்றனா?  ஆண்களுக்கு வயது வரம்பே இல்லாமல் இந்த எதிர்பார்ப்பு இருக்குமோ? இந்த வயதில் இவை தேவையா. துணை இல்லாமல் வாழ முடியுமா? அவனுக்கு எப்பேர்ப்பட்ட பெண்கள் கிடைப்பார்கள். அவன் என்ன சீனுவை போலவா , படிக்காதவனா , என் மேல் ஆசை இல்லை, இது ஆத்மார்த்தமான காதல். இதை ஏற்பதா , மறுப்பதா . அவன் காயப்படுவானோ? அதன் பின் பேசுவதை , பழகுவதை நிறுத்திவிடுவானோ? அவன் துணை இல்லாமல் போனால் பெரும் இழப்பாகுமே? என்ன செய்வது என்று புரியாமல் அகல்யா தூங்கிப்போனாள்.

மறுநாள் காலை அந்த துயர செய்தி அகல்யாவை நிலைகுலைய செய்தது.


தொடரும்...






Comments