AGALYAAVIN PARISU - 22 அகல்யாவின் பரிசு - 22

அகல்யாவின் பரிசு - 22

வாழ்க்கை !!!!!  

எதிர்பாராத ஆச்சரியங்களின் கூடு.
  
என்ன வழங்கும் , எதை பிடுங்கும்  என்பதை 

கணிக்கமுடியாத காடு. 

அகல்யா அப்படிதான் நினைத்தாள். சீனு ஏன் விலகினான். என்ன குறை இருந்திருக்க முடியும்? யோசித்ததில் , அவனுக்கு என்ன கொடுத்தாள் அகல்யா. அவளைக்கூட முழுமையாக கொடுக்கவில்லை. அவனும் அவளை தொட்டதில்லை. இன்று மைதிலியோடு காமக்காட்டாற்றில் களித்து நீந்திக் கொண்டிருக்கிறான். ஐயோ, இவ்வளவுதானா இவன், இதற்குத்தானா ஆசைப்பட்டான் இவன். சொல்லியிருந்தால் அள்ளி கொடுத்திருப்பேனே என்னையையே , பாவி சொல்லாமல் சென்றுவிட்டான், கொல்லாமல் கொன்றுவிட்டான். அகல்யாவிற்கு மைதிலியை பார்த்த கோலம், அவளின் தழும்புகள் இப்போது அவளுக்குள் விரகம் என்னும் இளமை ஊற்றை உருவாக்கிக்கொண்டிருந்தது. என்னே விந்தை. ஊற்றெடுக்குமாம் விரகம், அதில் உண்டாகுமாம் தாகம். தாகம் தீர வழிஇல்லாத பாலைவன ரோஜா பாவம் பரிதவித்தது.


நாட்கள் நகர்ந்தது . ராஜலிங்கத்திடம் இருந்து செய்தி வந்தது. சொத்து பரிவர்த்தனையை சட்டரீதியாக முடித்துக்கொள்ள, அகல்யா உடனே தென்காசிக்கு வரவேண்டும் என்று. அகல்யா தனது குழுவில் உள்ளோரிடம் இதை தெரியப்படுத்தும் போது அவளுக்கு ஒரு எதிர்பாராத உதவிக்கரம் தேடி வந்தது. அது விஜய் சேனாபதி. 40 வயது முதிர்கண்ணன், பம்பாயில் படித்து ஜில்லாதிகாரி பதவிக்கு முதல் மதிப்பெண்ணில் தேர்வானவன். திருமணமாகாதவன். அழகன். தற்பொழுது திருநெல்வேலியின் ஜில்லாதிகாரியாகி பணியில் இருப்பவன். அவனது தாய்மாமன் அகல்யாவின் குழுவில் ஓர் அங்கத்தினன். செய்தி கேட்டதும் அகல்யா தொலைபேசியில் அவரை தொடர்புகொண்டு ஒரு சில உதவிகளை கேட்டாள்.  அவரும் கண்டிப்பாக செய்கிறேன் என்று உறுதியளித்தார். அவர்களை மராட்டிய மொழி இணைத்துவைத்தது காலத்தின் விந்தையை தவிர வேறு இல்லை.


அகல்யாவும் அவளின் திட்டத்தை வகுத்தாள். ராஜலிங்கமும் தனது சதி திட்டத்தை திறம்பட வகுத்திருந்தார். அகல்யா வரும் தேதியை தெரியப்படுத்திய அடுத்த நொடி ஒரு குரூர பார்வையோடு " வாடி வா, வரேன்னா  போன் செய்யுறே, வருவடி ஆனா திரும்பி போகமாட்டே " என்று சத்தமாய் பிதற்றியவாறே "ஹாஹாஹாஹா" என்று படு பயங்கரமாக சிரிக்கத்தொடங்கினார். 
                                                      ****************************
தென்காசி. சார்-பதிவாளர் அலுவலகம். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொதுஜனமக்கள் யார் வருவது இன்று என்று ஏதும் புரியாமல் விழித்தார்கள். ராஜலிங்கம் போலீசாரிடம் வினவினார். யாருக்காக பந்தோபஸ்து இன்று என. யாரோ மராட்டியத்தில் இருந்து ஒரு அம்மா , பேரு அன்னை அகல்யாவும், அவங்களுக்காக கலெக்டர் ஐயா பந்தோபஸ்து கொடுக்க உத்தரவு போட்டிருக்கார் என்றாரே பார்க்கலாம், ராஜலிங்கத்தின் முகம் பேயறைந்தது போலானது. இவளுக்கு எப்படி இவ்வளவு செல்வாக்கு வந்தது? என்று மூளையை குடைந்து கொண்டிருந்த வேளையில், வேகமாக வந்து கிரீச்சிடும் சப்தத்தோடு வந்து நின்றது ஒரு டாடா சுமோ வண்டி. போலீசார் எல்லோரும் வழி ஏற்படுத்தி வரிசையாக நின்றிருக்க, வெளிர் மெரூன் நிறத்தில் பருத்தி புடவை, கருப்பு ரவிக்கை என்று கணகம்பீரமாய் அகல்யா காரை விட்டு இறங்கினாள். மடிப்பு கலையாத சேலை , முக்கால் கை வரை நீண்ட ரவிக்கை , தொப்புள் தெரிய இறக்கி கட்டிய சேலை, நேர்த்தியாக வாரிய தலைமுடி, அதன் குதிரைவால் கொண்டை, நெற்றியில் பெரிய பொட்டு, முகத்தில் பெரிய மூக்குக்கண்ணாடி, கழுத்தில் ஒரு டாலர் செயின், மெல்லிய கருப்பு பட்டியிட்ட தங்கநிற கைகெடியாரம், குதிகால் செருப்பு  என்று பார்க்க ஒரு மெத்த படித்த மேதாவியை போல் தோன்றினாள் அகல்யா. ராஜலிங்கம் ஒரு நொடி தன்னையும் மறந்து " ஆ" வென்று வாய் பிளந்து அவள் வருவதை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தார்.கோகுலநாதனும், கண்ணனும் கூட அவளை அப்படி வியப்பாக பார்த்து மலைத்தனர்.


அலுவலக வாசலில் வந்தவளை சார்பதிவாளர் வரவேற்று, " அம்மா கலெக்டர் உங்க பதிவை விரைவாய் முடித்து அனுப்பும்படி சொல்லியிருக்கார். உங்களுக்காகதான் காத்திருக்கிறோம் என்றார். ராஜலிங்கத்திற்கு வேர்த்து சட்டையெல்லாம் நனைந்து உடலோடு ஒட்டிக்கொண்டிருந்தது. அகல்யாவின் வக்கீல் பணபரிவர்தனையை பற்றி விசாரிக்க, ராஜலிங்கம் , அகல்யா என்னமா இது, பணம் கரெக்டா உனக்கு வரும், முதலில் பதிவை முடிச்சிட்டு சீனு வீட்டில் உட்கார்ந்து எல்லோர் முன்னிலையிலும் கொடுத்துவிடுகிறேன் என்று கூறினார். அகல்யா மெல்லிய புன்னகையோடு கேட்டாள் " ஐயா , என் சொத்தை இத்தனை நாள்  அனுபவிக்க என் அப்பா ஏதாவது பத்திரம் எழுதி கொடுத்துள்ளாரா? என்று வினவினாள். ராஜலிங்கம் பதறி, பத்திரம் இல்லை, ஆனால் நானும் அவரும் பால்ய சிநேகிதர்கள், அதனால் அவர் காணாமல்போன உடன் நானே அதை பராமரிக்க தொடங்கினேன் , நீயும் இங்க இல்லையேம்மா என்ன பண்றது என்றார். அப்போ உங்களுக்கு என் அப்பா எங்க போனார்னு தெரியாதுன்னு சொல்றீங்க இல்ல, என்றாள். ராஜலிங்கம், விபரீதத்தை உணர்ந்து, உன் குழந்தை மேல சத்தியமா எனக்கு தெரியாது மா என்றார். குழந்தை என்று அழுத்தி சொல்லியதன் அர்த்தத்தை அவள் புரிந்துகொண்டாள். சரி போகட்டும், என் குழந்தை எங்கே என்று கேட்க, அது சீனுவிற்கு தெரியும் ஆனால் எனக்கு எதுவும் தெரியாது என்றார். ஓ! அப்படியா !! நம்ம பேசிக்கிட்டபடி குழந்தையை காட்டுங்க என்றாள். அப்போது ஒரு குரல் " காண்பிக்க முடியாது " என்று ஓங்கி ஒலித்தது. அது சீனுவின் தாய். இதோ பார் அகல்யா, இந்த சொத்து உன்னோடது மட்டும் இல்ல, என் பேரனுக்கும் அதில் உரிமை உண்டு என்று உனக்கு தெரியாதா? அதனாலே பாதி சொத்து என் பேரனுக்கு எழுதி வச்சிடு, அப்போ தான் உன் குழந்தையை பற்றிய விவரம் சொல்லுவோம் என்று கூறினார்.அகல்யா பக்கவாட்டில் நின்ற போலீஸ்ஐ பார்க்க, அவர் நேராக ஒரு விலங்குடன் சீனுவின் தாயாரை நோக்கி நகர்ந்தார். அப்போது சீனு பாய்ந்துவந்து அகல்யாவிடம், அகல்யா இது என்ன வேலை, என் அம்மாவையே நீ கைது செய்ய சொல்வியா, நன்றிகெட்டவளே என்றான். அகல்யா அவனை மெல்ல திரும்பி அலட்சியமாக பார்த்தவள் " ஹஹஹஹஹ" என்று பளீரென்று வாய்விட்டு சிரித்தாள். ஏன் இப்போ வரும் ரோஷம் அன்னைக்கு என்ன ஏமாத்திவிட்டு சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணி கிட்டியே   அப்போ எங்கே போச்சு என்றாள். நான் புகார் கொடுத்தால் உன்னையும் கூட உள்ள தள்ளி முட்டிய பேத்துடுவாங்க மாமா, எப்படி வசதி , என்ன புகார் கொடுக்கட்டுமா? என்றாள் நக்கலாக. சீனுவும் ஒடுங்கினான். ராஜலிங்கம் அகல்யாவிடம், நீ பதிவு பண்ண வந்த மாதிரி தெரியல , பஞ்சாயத்து பண்ண வந்திருக்கேன்னு தெரியுது, ஆனா ஒண்ணு, ஞாபகம் வை கண்ணு, உனக்கு எவ்ளோ செல்வாக்கு இருந்தாலும் இந்த ஊரை விட்டு நீ உயிரோட போக முடியாது, இன்னும் கொஞ்ச நேரத்துல உன் மகன் எமலோகம் போயிடுவான் அப்போ உன் செல்வாக்குல அவனை மீட்டுக்கொள் என்று மெல்லிய குரலில் சொன்னார். அகல்யா பயந்திடுவாள் என்று எதிர்பார்த்த அவருக்கு அதிர்ச்சி. ஐயா உங்கள பெரிய புத்திசாலின்னு நெனச்சேன். நீங்க என்ன இப்படி சின்னபுள்ளத்தனமா பேசறீங்க. என் பையன நான் எப்போவோ என் கைக்குள்ள கொண்டுவந்துட்டேன் என்று கூற, அதிர்ந்த ராஜலிங்கம் நேரே பார்வையை கோகுலநாதனின் மேல் வீச, அங்கே கோகுலநாதனும், கண்ணணும் இருப்பதை கண்டு ஆசுவாசப்பட்டுக்கொண்டார். அங்கிருந்து சென்றுவிடுமாறு சைகை செய்தார். அகல்யா இந்த செயலை கவனிக்க தவறவில்லை. அகல்யா போலீசாரிடம் ஏதோ சொல்ல, சீனு, ராஜலிங்கம் இருவருக்கும் போலீஸ் கைகளில் விலங்கு மாட்ட எத்தனிக்க, ராஜலிங்கம் அடியாட்களுக்கு கண் சிமிட்ட, அவர்கள் கட்சி பெயரில் ஆர்ப்பாட்டம் செய்ய துவங்கினர்.சார்பதிவாளர் பிரச்சினை தீவிரமாகுவது கண்டு, அம்மா என்ன இப்போ பத்திரபதிவு பண்றீங்களா இல்ல உங்க வழக்கை வெளியில வெச்சுக்கிறீங்களா என்று கேட்க, ஐயா என் பையன் மேல சொத்து பதிவு பண்ண எனக்கு;  முதல்ல என் பையன் உயிரோடு இருக்கானா என்று தெரியணும், கொஞ்சம் பொறுங்க என்று கூற, சீனு பொங்கி எழுந்து, இல்லடி உன் பையன் என்னைக்கோ செத்து  போய்ட்டான். இனி அவன் வரமாட்டான் என்று சொல்ல, அகல்யா ஒரு நிமிடம் உறைந்து போனாள். என்ன சொல்றீங்க , நிஜமா ? என்று வினவ, ராஜலிங்கம், மெல்ல அகல்யாவிடம் வந்து, அம்மா உன் மனசு தாங்காது என்று தான் இவ்ளோ நாள் நாங்க சொல்லல. உன்னை விட்டு வந்து தாய்ப்பால் தவிர்த்து வேறு பால் குடித்து, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவன் இறந்துபோய்ட்டான். இதோ அவனோடது மரண சான்றிதழ் என்று காட்டினார். அகல்யா துடித்துப்போனாள். தெய்வமே எனக்கு இருந்த ஒரே சொந்தமும் பிடுங்கிக்கொண்டாயே என்று துவண்டு போனாள். ஆனால் கோகுலநாதனிடம் எதற்கு சைகை செய்தார் என்பது புதிராக இருக்க, அவர்களை அப்போது காணாததால், நாளை இது பற்றி விசாரித்து முடிவெடுக்கலாம் என்று முடிவெடுத்து, மனசு சரியில்ல நாளைக்கு பதிவு செய்யலாம் என்றவாறே களைந்து சென்றாள்.


கண்ணன் எங்கோ நலமாக இருக்கிறான் என்று எண்ணிக்கொண்டிருந்த  வேளையில் அவன் இல்லை என்பதை அவள் மனம் நம்ப மறுத்தது. அவளுக்கு உதவியாக இருக்க கலெக்டர் நியமித்தவரிடம் கோகுலநாதனை பற்றியும் அவர் நடவடிக்கைகளையும் கண்காணித்து அவளுக்கு தெரிவிக்குமாறு வேண்டிக்கொண்டாள். அப்பொழுது ராஜலிங்கத்தின் ஆள் வந்து , அம்மா ஐயா இங்க கிட்ட ஏதோ முக்கியமான விஷயம் பேசணுமாம், அதுவும் உங்க பையனை பற்றியது, அத யார் முன்னாடியும் பேச முடியாது, ரகசியம், அதனால உங்கள சாயங்காலம் அம்பாசமுத்திரம் போற ரோட்ல இருக்கற கருப்பசாமி கோயிலுக்கு தனியா வரச்சொன்னார் என்று கூறி விட்டு சென்றான்.


ராஜலிங்கம் ஏதோ சூது செய்கிறார் என்பதும், தனது தந்தையும் , மகனும் எங்கோ இருக்கிறார்கள் என்பது உண்மை என்று அவள் மனம் நம்பியது. போவோமே, சாயங்காலம் யாருக்கும் தெரியாமல் அவரை பார்க்க போய்தான் பார்ப்போமே என்று முடிவெடுத்தாள்.
                                                                   ************************
கருப்பண்ணசாமி கோயில். தென்காசியில் இருந்து பிரிந்து அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள கோயில். ஊருக்கு சற்று வெளியில் ஆள் அரவமற்ற கோயில். அதன் பின்புறம் தென்காசி ஊருக்கே உரித்தான பிரதான பாதாள கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது. கோவில் பின் புறம் விஷேஷ நாட்களில் மக்கள் கூடி அந்த இடத்தை குப்பையாக்கியும், கால்வாயை உடைத்தும் இருந்தார்கள். பாதாள சாக்கடையின்  கழிவு நீர் கசிவு அங்கே எங்கே பள்ளம் உள்ளது, உடைப்பு உள்ளது என்று தெரியாத அளவு கால்வாயை மூடி மறைத்திருந்தது. 

                                                              **********************************

பொழுது விழுந்தது . அகல்யாவுக்கு பொழுது விடிந்தது. தகவல் அறியும் ஆசையில் எல்லோரிடமும்  மனசு சரி இல்லை ஊருக்கு போவதாக தெரிவித்துவிட்டு கோவிலுக்கு போவதை தெரிவிக்காமல் கிளம்பினாள்.

                                                           ***************************************

ராஜலிங்கம் இருட்டில் ஆட்களை மறைத்து வைத்திருந்தார். தனது சமிக்ஞை வந்தவுடன் அகல்யாவை தீர்த்துக்கட்டவேண்டுமென்று. அகல்யா ஒத்துக்கொண்டு கையொப்பமிட்டாள் நல்லது, இல்லையேல் அவளை கொன்று அவள் ரேகையை எடுத்து சொத்தை மாற்றிக்கொள்வது என்று முடிவெடுத்திருந்தார். தூரத்தில் அகல்யா வருவது தெரிந்தது. அவளோடு அது யார் வருவது. ஆம் அவளோடு சீனு வந்து கொண்டிருந்தான்.

அகல்யா எனக்கு நம்ம கண்ணன் வேணும். அதிகமான கலவியில் இத்தனை நாள் ஈடுபட்டதால் எனக்கு வரக்கூடாத நோய் அந்த இடத்தில வந்துவிட்டது, ஆகையால் எனக்கு இனி குழந்தை பிறக்காது. கண்ணன் இருக்கிறான். உயிரோடு இருக்கிறான். ராஜலிங்கத்திற்கு மட்டுமே தெரியும். உனக்கும் எனக்கும் வாழ்க்கையே மாற்றி போட்ட தொல்லைகளெல்லாமே அந்த ஆள் வேலை தான். ஒரு நாள் குடி போதைல அவன் உளறிட்டான். அவன் நம்ம கண்ணனை கொல்லகூடாதுன்னு தான் அவன் செத்துட்டதாக அங்கே கூறினேன். என்னை மன்னிச்சுடு. வா இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பார்த்துடலாம் என்று கூறிக்கொண்டே அவர்கள் வர, ராஜலிங்கம் தனது ஆள் ஒருவனை கூப்பிட்டு அகல்யாவுடன் வருபவனை அவன் தலையில் அடித்து மயக்கமுற செய்விக்குமாறு கூறினார். அவனும் அப்படியே செய்ய , அகல்யா இருட்டில் பயந்து போய் வேகமாக கோயிலுக்குள் நுழைந்தாள்.

வாம்மா அகல்யா. இன்னையோட உன் கணக்கு முடிய போகுது. உன் மகன் இருக்கிற இடத்தை சொல்றேன் , மொதல்ல இந்த பத்திரத்தில கையெழுத்து போட்டுடு என்றார் ராஜலிங்கம். ராஜலிங்கம் இந்த சொத்து எனக்கு பெருசு இல்ல. எனக்கு பம்பாய்ல இருக்கிற சொத்தே போறும், உனக்கு எல்லாத்தையும் குடுத்துடறேன், சொல்லு , என் அப்பா எங்கே , என் பிள்ளை எங்கே, சொல்லு, சொல்லு என்றாள். முதல்ல கையெழுத்து அப்புறம் உண்மைகள் என்று ராஜலிங்கம் ஹாஹாஹாஹா வென்று இடிஇடித்தது போல் சிரித்தார். அகல்யா தனது கையொப்பத்தை இட்டாள் அனைத்து ஏடுகளிலும்.  ராஜலிங்கம் கொக்கரித்தார். அட பைத்தியக்கார பொண்ணே, சொல்றேன் கேள் என்று அணைத்து உண்மைகளையும் கூற ஆரம்பித்தார். ஒவ்வொன்றாக கூற , அகல்யாவிற்கு வெறி ஏறியது. ராஜலிங்கம் எல்லாம் கூறிய வுடன் தனது ஆட்களை கூப்பிட்டு , ஏய் இவளை தீர்த்துக்கட்டுங்க என்று ஆணையிட்டார். அகல்யாவை நெருங்கிய ஆட்களை சீனு பாய்ந்துவந்து  தடுத்தான். அகல்யா ராஜலிங்கத்தின் கையில் இருந்த காகிதங்களை பறித்து கிழித்தாள். வெகுண்ட ராஜலிங்கம் அகல்யாவை பிடித்து கழுத்தை நெரித்து அவள் தலையை சுவற்றில் மோதினார். சீனு சண்டையிட்ட படியே அகல்யாவின் கைகளில் ஒரு அரிவாளை திணித்தான். பிறகு அவன் அகல்யாவின் கையிலிருந்த காகிதங்களை பறித்துக்கொண்டு வேகமாக எதிர் திசையில் ஓடிட, அவனை துரத்திக்கொண்டு எல்லா அடியாட்களும் தொடர, சீனு அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஓரிடத்தில் ஒளிந்து கொண்டான்.அகல்யா வலியால் துடித்தாள், என்ன நடக்கிறது என்பதே தெரியாத நிலையில் , ராஜலிங்கம் அகல்யாவை அடக்க, அவளின் புடவையை கிழித்து, மார்பகங்களை பிடித்து ரவிக்கையை கிழிக்க முயல, வெறி கொண்ட வேங்கையாய் அகல்யா தன் கையில் இருந்த அரிவாளால் ராஜலிங்கத்தின் கழுத்தில் வெட்ட, ராஜலிங்கம் ஐயோ அம்மா என்று அலறி வெளியே ஓடி , அங்கே இருட்டில் பாதாள சாக்கடையில் வீழ, யாருக்கும் தெரியாதவண்ணம் அவர் உடல் மெல்ல மெல்ல அதில் மூழ்க ஆரம்பித்தது. அகல்யா மருண்டு போனாள். சீனுவை காணாததால் அவனை தேடி இருட்டில் அங்கும் இங்கும் அலைய, திடீரென்று ஒரு கை அவள் வாயை பொத்தியது. அது சீனுவேதான். அகல்யா உன் கையில் இருக்கும் கத்தியை என்னிடம் கொடு, நீ உடனே தென்காசிக்கு சென்று விட்டு , பம்பாய்  சென்று விடு. மேற்கொண்டு செய்யவேண்டியதை அப்போது யோசிக்கலாம் . போய்டு. நிக்காதே என்று ஆணை இட்டான். சீனு அரிவாளை ஒரு துணியில் சுற்றி ரேகைகள் இல்லாதவாறு செய்து வீசியடித்தான் சாக்கடைக்குள் , ஆனால் அது ஒரு பெரிய கல்லில் பட்டு தெறித்து எல்லோரும் காணும்படியாக பாறைக்கடியில் வீழ்ந்தது.தனது  முகத்தை யாரும் பார்க்கும் முன்பு அங்கு இருந்து சீனு வெளியேறிவிட்டான். அகல்யா வேகமாக ஓடி தடுமாறி கோகுலநாதனின் வண்டியில்  மோதினாள். கோகுலநாதன், ஓடி வந்த ராஜலிங்கத்தின் ஆட்களின் கையில் அவளை பிடித்து கொடுக்க முயல, அகல்யா அதற்குள்ளாக தென்காசி நோக்கி பயணித்தாள் இந்நினைவுகளோடு..

                                            ****************************************




















Comments

Popular posts from this blog

AGALYAAVIN PARISU - 26 அகல்யாவின் பரிசு - 26

AGALYAAVIN PARISU - 25 அகல்யாவின் பரிசு - 25

PALLI PARUVAM