AGALYAAVIN PARISU - 20 அகல்யாவின் பரிசு - 20

அகல்யாவின் பரிசு - 20

                                 அகல்யா சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்த விபரீதத்தை. அவள் காலுக்கடியில் பூமியே நழுவுவதுபோன்ற ஓர் உணர்வு ஏற்பட , தன்னிலை மறந்து நின்றவளை கதவு திறக்கும் சத்தம் உசுப்பியது. மைதிலி குளியலறையில் இருந்து வெளிப்பட்டாள்.சிவப்போடு மஞ்சளை கலந்த நிறத்தில் மின்னினாள் தாரகையாக. அகல்யாவின் விதியோடு விஷத்தை கலந்தவளாதலால் ஆனாள் சூர்பனகையாக. கொன்றுவிடுமளவு ஆத்திரம் மூள, சென்றுவிடுவென்று மனம் எச்சரித்தது அகல்யாவை. எரிக்கும் விழியால் மைதிலியை பார்த்தவள், அவள் மேனியை எடைபோட்டாள். உள்பாவாடையை மட்டுமே மார்புக்கு குறுக்கில் கட்டியபடி வெளிவந்தவளின் மேனி அழகு, அவள் உன்மத்தத்தில் உழன்று கொண்டிருக்கிறாள் என்பதை பறையடித்தது. சிறுத்த புஜம், பெருத்த தனம், மஞ்சள் பூசியும் மறையாத நகக்கீறல்கள், அவள் கட்டிலறைக் காமயுத்ததின்  கல்வெட்டுச் சான்றுகளாய் திகழ்ந்தது. தடித்த இதழ்களில் கடித்த தழும்புகள், விடைத்த தனங்களின்  அமைப்பு, வெட்டிவிட்ட வாழை கன்றினை நினைவுறுத்த, அகல்யாவிற்கு இப்போது மேனி முழுதும் எரிந்தது. அகன்றுவிட எத்தனித்தவளை அகல்யா என்ற அலறல் குரல் தடுத்து நிறுத்தியது. மைதிலி அவளை கண்டு பேயறைந்தது போலவனானாள். அகல்யா நீ உயிரோடு இருக்கிறாயா? என்று அவளையும் மீறி அவள் உதடுகள் உச்சரிக்க அகல்யாவிற்கு அவள் மேல் தவறேதும் இருக்க வாய்ப்பில்லை என்பதை புரிந்து கொண்டு அவளிடம் பழைய சிநேகிதத்தோடு ஆமாம் மைதிலி இன்னும் இந்த பாழா போன உயிர்  போகமாட்டேங்குது என்றாள் கண்ணீர் மல்க. நீ மறைந்தாய் என்று கூறி, என்னை நிர்பந்தித்து, விபத்தில் காலமான என் கணவரின் கடைசி ஆசையான எனது மறுமணத்தை காரணம் காட்டி, உடனே என்னை சீனுவிற்கு அவர் தாய் கட்டிவைத்து விட்டார்கள் அகல்யா, என் மீது எந்த தவறும் இல்லை என்றாள். நான் உன் வாழ்வில் குறுக்கே வருவேன் என்று என்றுமே நினைத்துகூட பார்த்ததில்லை என்றாள் அழுதுகொண்டே.  அவள் கை கூப்பி அவளிடம் மன்னிக்குமாறு மன்றாட, குற்றவுணர்ச்சியின் மிகுதியால்  நாணம் வற்றி தன் உடல் கச்சை  விலகி தனங்கள் வெளியே நழுவுவது அறியாமல் அகல்யாவை வேண்டிநிற்க, நிலைகுலைக்கும் துயரிலும் நிதானத்தை இழக்காத அகல்யா பதறி சென்று அவள் ஆடையை சரி செய்து அவளை அணைத்துக்கொண்டு உள்ளறைக்குள் அழைத்துச்சென்றாள்.

மைதிலி அகல்யாவின் முன்பேயே கூச்சமில்லாமல் உடை அணிந்தாள். பழைய மைதிலி எப்படி வெட்கப்படுவாள், இப்போது பிரச்சினையின் தீவிரம் இவளை எல்லாவற்றையுமே மறக்கடிக்க விட்டு விட்டதே என்று நினைத்தாள். மைதிலி அதே அந்த ரவிக்கையை எடுத்து அணிந்துகொண்டாள். டக்கு பிடிக்க சொன்ன அதே ரவிக்கை இப்போது அவள் மார்புகளை அடக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தது. இவள் ரவிக்கைக்கு டக்கு பிடித்தாலோ இல்லையோ தன் கணவனை டக்கென்று பிடித்துக்கொண்டாளே என்று ஆதங்கப்பட்டாள்.

அகல்யா: எப்போ கல்யாணம் நடந்தது?
மைதிலி:  இரண்டு அரை மாதங்களுக்கு முன்பு.
அகல்யா: நான் இறந்து விட்டேன் என்று யார் சொன்னார்?
மைதிலி: சீனுவின் தாய்.
அகல்யா: சீனு என்ன சொன்னார்?
மைதிலி: அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. எல்லாமே அவர் அம்மா தான் பேசினார்.அவருக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமே இல்லை.
அகல்யா: என் பிள்ளை எங்கே?
மைதிலி:பிள்ளையா? எனக்கு தெரியாதே.
அகல்யா:என்ன சொல்றே மைதிலி, என் குழந்தய நீ பாக்கவே இல்லையா.
மைதிலி:இல்லை.எனக்கு தெரியாது. அத்தையை தான் கேட்கவேண்டும்.
அகல்யா:எங்கே அவர்கள்?
மைதிலி:இப்போ வந்து விடுவார்கள் என்று கூறிய போதே அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்.

தாய் அதிர்ந்தாள். சீனு மிரண்டான்.

அகல்யா: அத்தை என்ன இது. இப்படி பண்ணியிருக்கீங்க. இது நியாயமா?
தாய் : அகல்யா உன்ன தாய் இல்லாத பொண்ணுன்னு எவ்ளோவோ கரிசனம் காட்டினேன். ஆனால் நீ உன் இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டே. உன்ன மாதிரி பெண் என் மகனுக்கு , என் குடும்பத்துக்கு தேவையில்லைனு முடிவு பண்ணேன். நீ உன் மக்களுக்கு போய் சேவை செய். மைதிலி எங்களுக்கு சேவை செய்யட்டும். உன்னை நாங்கள் ஒதுக்கி வைக்கமாட்டோம். ஆனால் உன் பொது வாழ்க்கையை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. நீ சண்டை போட நினைத்தால் சட்ட ரீதியாக போடு, ஆனால் இப்போது இங்கே இருந்து கிளம்பு. உன் வீடு , உன் ஆஸ்த்தி எல்லாம் உனக்கே திரும்பி விரைவில் வந்து சேரும். ஏதாவது பிரச்சினை பண்ண நினைத்தால் உன் குழந்தை இருக்கும் இடத்தை சொல்லாமலேயே போய்விடுவோம் ஜாக்கிரதை என்று கொக்கரித்தாள்.

அகல்யா அதிர்ந்தாள்.என்ன பெண் இவள். இதனை நாள் பார்த்தவள் நிஜமா அல்லது இன்று காண்பவள் நிஜமா. குஞ்சுகளை காக்க இறக்கையை விரித்து கொத்தவரும் கோழிபோல் என்ன ஒரு ஆக்ரோஷம். தனயனின் நல்வாழ்வுக்காக போராடும் தாய் , தன் சிசுவை என்ன செய்திருப்பாளோ என்று பதறி துடித்தாள்.
அகல்யா:என் குழந்தய பாக்கணும்.
தாய் : உனக்கும் சீனுவுக்கும் எந்த சம்பந்தம் இல்லைனு விடுதலை பத்திரம் கையெழுத்து போட்டால்தான் சொல்லமுடியும்.

அகல்யா சீனுவை ஆதங்கத்தோடு பார்த்தாள், தனக்கு அபயம் அளிப்பான் என்று ஆனால் அவன் அபாயத்தையே அவளுக்கு பரிசளித்தான்.

அகல்யா: சீனு என்ன ஒன்னும் பேச மாட்டேங்கற? நான் உனக்கு வேண்டாமா? அவ்ளோதானா நம்ம வாழ்க்கை? நம்ம குழந்தய எங்கே வச்சிருக்கே. நீ வேணும்னா என்ன வெலக்கி வச்சிடு, ஆனா என்னையும் என் குழந்தயையும் பிரிச்சிடாதே.

சீனு: அகல்யா நடந்த எதுவும் அவங்கவங்க பார்வையிலே நியாயமானது தான். என்னோட மனசு குறுகியது. அதில் அம்மா, மனைவி, குழந்தை, ஒரு நல்ல வியாபாரம், ஊரில் செல்வாக்கு, தேவையான அளவுக்கு பணம் என்று மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியது. உன்ன நான் விரும்பின காலங்களில் நீ எனக்கு ஏற்றவளாய் இருந்தாய். ஆனால் விதி, எப்படியோ வாழ்க்கையை மாற்றி விட்டது. பொது வாழ்விற்கு தயாராகிவிட்ட உன்னை இனி என்னோடு இணைத்து பார்க்க இயலவில்லை.உன் வழி இனி சரி செய்ய முடியாதது. எனக்கு ஒரு வாய்ப்பு தேடி வந்தது. அதை சமயோசிதமாக பயன்படுத்திக்கொண்டேன். உன்னை நான் வெறுக்க வில்லை. என்னோடு இப்போதும் இதே வீட்டில் நீ குடும்பம் நடத்தலாம். அது முடியாது என்றால் உன் வழியில் நீ போகலாம். தடுப்பார் யாருமில்லை. எப்போதும் உறவு என்று எங்களிடம் உரிமையோடு பழகலாம் ஆனால் சொந்தம் கொண்டாட முடியாது. உன் குழந்தை அது என் குழந்தையும் கூட. இனி உனக்கும் அது இடைஞ்சல், எனக்கும் அது இடைஞ்சல் என்பதால் அது வேறு இடத்தில வளர்கிறது. உன்னிடம் இருந்து சட்ட ரீதியாக எங்களை காத்து கொள்ள எனக்கு ஒரு ஆயுதமா இப்போ எனக்கு அது வேணும்.

அகல்யா: சபாஷ் சீனு என்கிற என் புருஷனே, சபாஷ். பெத்த குழந்தையை ஆயுதமா பயன்படுத்தறவன் ஆம்பளை இல்லை அவன் கோழை. நீ ஏன் என் கிட்ட சொல்லிக்காம கல்யாணம் பண்ணனும். தைரியம் இருந்தால் என்னிடம் சொல்லிவிட்டு பண்ணி  இருக்கலாமே . இப்போ புரிந்து போச்சு . நீ ஒரு கோழை. நாலு பேர் கிட்ட சண்டை போட்டு என்னை காப்பாத்தனப்போ நீ வீரன்னு நெனச்சேன், ஆனா இப்போ தான் தெரியுது நீ ஒரு கோழைனு. உன்ன மாதிரி ஒரு கோழையோட எந்த பெண்ணுமே வாழ விரும்பமாட்டாள் சீனு. நான் காதலித்த சீனு செத்துட்டான் நீ வேற யாரோ, யாரோட  வேனா வாழ்ந்துக்கோ , அக்கறையில்ல என்றவாறே ஒரு அலட்சிய புன்னகையை அவள் வீசினாள். சீனு மைதிலியின் முன்பு பேசமுடியாமல் அவமானத்தால் சிவந்து நின்றான்.

ஓராயிரம் எரிமலைகள் வெடித்ததுபோல் நெஞ்சு வலித்தது அகல்யாவிற்கு.
சீனுவை மலை போல் நம்பி வந்தவள் அவன் பேசிய வார்த்தைகளை கேட்டு துவண்டுபோனாள். சீனு அது தன் குழந்தை என்று கூறிய நொடி அகல்யா கூனி குறுகிப்போனாள். தான் சொன்ன பொய்க்கு தான் தனக்கு இப்படியொரு தண்டனையோ என்று நினைத்தாள்.

அகல்யா சத்தமில்லாமல் அங்கே இருந்து விலகினாள். தாய் முகத்தில் புன்முறுவல் பூக்க, சீனு சினத்துடன் அவளை நோக்க, உள்ளே மைதிலி தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்தாள்.

மறுநாள் விடிந்தது அனைவருக்கும். அகல்யாவிற்கு மட்டும் இருள் விலகவேயில்லை. ராஜலிங்கம் வந்தார். பத்திரிக்கை சேதியை உண்மையா என்று விசாரித்தார். அகல்யா புழுவாய் நெளிந்தாள். திரும்ப சென்றுவிடு என்று எச்சரித்து விட்டு சென்றார்.

இனி இங்கே இருப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதால், அன்றிரவே அகல்யா யாருக்கும் தெரியாமல் பம்பாய் புறப்பட்டாள். தீவிரமாக தன்னை தயார் படுத்திக்கொண்டு இவர்களை எல்லாம் ஒரு கை பார்க்கவேண்டும் என்று கங்கணம்கட்டிக்கொண்டாள். தொல்லை ஒழிந்தது என்று அனைவரும் தென்காசியில் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.


தொடரும் ...
























Comments

Popular posts from this blog

AGALYAAVIN PARISU - 26 அகல்யாவின் பரிசு - 26

AGALYAAVIN PARISU - 25 அகல்யாவின் பரிசு - 25

PALLI PARUVAM