AGALYAAVIN PARISU - 28 அகல்யாவின் பரிசு - 28
அகல்யாவின் பரிசு - 28
அகல்யா
அந்த நீண்ட நெடிய மாளிகையின் வாயிற்கதவருகே தள்ளாடி தள்ளாடி வந்து
நின்றாள். முகத்தில் களைப்பு. பசித்த வயிறு. பாசம் பொங்கும் கண்கள். நரைத்த
கீற்று ஆங்காங்கே, முதுமை முளை விட்டிருப்பதை பறைசாற்றியது.
டக்
...டக் ...டக். வாயிற்கதவை தட்டினாள். காவற்காரன் கதவிடுக்கின் வழியே
திறந்து பார்த்து, யாரம்மா என்ன வேணும் என்று கேட்டான்.இப்போது இதோ அகல்யா
அரை மயக்கத்தில் இருக்க கோகுல்நாத் காவலாளி கையில் இருந்த பத்திரத்தை
பிடுங்கி படிக்கலானார். அதில் ருபாய் 2 கோடிக்கான கொடை பத்திரமும்,
தென்காசியில் உள்ள சொத்துக்களையும் கண்ணன் பெயரில் எழுதி வைத்து இருந்தது
கண்டு ஆனந்தம் கொண்டார். ஆனால் வெளியே காட்டிக்கொள்ளாமல் அவளை அடிக்க
மீதும் போக, வேகமாக குறுக்கிட்ட கண்ணன் அவரிடம் இருந்த பத்திரத்தை பிடுங்கி
வெறிகொண்டவனாக கத்தினான்.
அப்பா அங்கேயே நில்லுங்க. இன்னொரு அடி அவங்கமேல விழுந்தா இந்த பத்திரத்தைகிழித்து போட்டுவிடுவேன் என்றதும், கோகுல்நாத் அவரையும் அறியாமல் நின்றுவிட்டார். அவர் இதை எதிர்பார்கவில்லை. ஹூம் நம்ப ரத்தமா இருந்தா இவ்ளோ முட்டாளா இருப்பானா? என்று மீதும் எண்ணிக்கொண்டார்.
கடந்த இருவாரங்களில் சீனுவையும், மைதிலியையும் சந்தித்த கண்ணன், அவர்கள் மூலம் சீனுதான் தனது தந்தை என்பதை தெரிந்துகொண்டிருந்தான். ஆயினும் செஞ்சோற்றுக்கடனாக அதை வெளிப்படுத்தாமல், கோகுல்நாத்துடனேயே இருந்து வந்தான். இப்போது அவனது தாய் பற்று, அவனையும் மீறி அவரை எதிர்த்து பேச வைத்தது.

நிலைமை கைமீறுவதை உணர்ந்த கோகுல்நாத், டேய் கண்ணா இவள் உனக்கு தாய் என்றால், உன்னை பத்து மாதம் உண்மையிலேயே சுமந்து பெற்றவள் என்றால் நமது அகத்தியர் அருவியின் அக்கரையில் உள்ள குலதெய்வ கோவிலில் தெய்வத்தின் முன் சத்தியம் செய்து அவள் மூலமே எல்லா உண்மைகளையும் தெரிந்துகொள். அதற்கு அவள் தயாரா என்று அறைகூவல் விட்டார்.
இதை கேட்ட மாத்திரத்தில் அகல்யா அதிர்ச்சியில் மீண்டும் மயங்கி விழுந்தாள்.
தொடரும்
.
Comments
Post a Comment