AGALYAAVIN PARISU - 19 அகல்யாவின் பரிசு - 19
அகல்யாவின் பரிசு - 19
தாயின் மனமாற்றம் தனயனுக்கும் பெருத்த ஆச்சர்யம்!! அகல்யாவின் மீது இன்னும் அன்பு அதிகமானது. மாற்றத்தை விரும்பியது மனம். விவாதிக்க நினைத்தது நிஜம், ஆனால் வந்து விழுந்த செய்தியோ விஷம்.ஆம்!!!. சொத்து முழுவதும் அறக்கட்டளைக்கு ஒதுக்குவது என்ற அகல்யாவின் முடிவு சீனுவிற்கு கொடுத்தது பயம். அகல்யாவிடம் விவாதித்தான். வாழ்க்கை எனும் வழக்கை குடும்ப மன்றத்தில் ஏற்றினான். வாழ்வாங்கு வாழும் வளமையை அடையும் குறி ஒன்றே கொள்கையாக வாதித்தான். அகல்யா மனதுக்குள் சிரித்துக்கொண்டாள் . விந்தையான உலகம். அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் மனிதர்களில் ஒருவனாக சீனு மாறிப்போனது அவளுக்கு ஏமாற்றமே!!.
அகல்யா தீர்மானம் எடுத்து முடித்திருந்தாள். சீனுவை அவன் தாய் வேறு விதமாக திசை திருப்புவது பணத்திற்காக மட்டும் அல்ல, அது அவளின் சமுதாய சிந்தனைகளுக்கான சாவுமணி என்பதே நிதர்சனம் என்று. ஆதலால் இப்பொழுது சீனுவின் துணை கண்டிப்பாக தேவை என்பதை உணர்ந்திருந்தாள். ஆதற்காக சீனுவை மெல்ல சீண்டினாள். என்ன சீனு எங்க அப்பா சொத்து மேல ஆசைப்படறீங்களா என்றாள். சீனு சற்று தடுமாறியவன், இல்லை அகல், உனக்காக வாயை கட்டி வயிற்றை கட்டி உன் அப்பா சேர்த்த இந்த சொத்து; நீ; உன் குடும்பத்தார் அனுபவிக்காமல் போனால் அவர் மனம் சாந்தி அடையுமா என்று எதிர் கேள்வியிட்டு மடக்கினான். உனது தொண்டுள்ளமானது தொண்டு செய்ய தேவையானவற்றை தானே தேடவேண்டுமேயொழிய தந்தை பணத்தை தானம் செய்வதில் அல்ல என்று சற்று அழுத்தம் கொடுத்து தன் அதிருப்தியையும் பதிவிட்டான். அகல்யா சமயோசிதமாக யோசித்து, சரியாக சொன்னாய் சீனு , நீ சொல்வது தான் முற்றிலும் உண்மை. நான் இந்த சொத்துக்களை தவிர்த்து தொண்டு செய்ய நானே நிதி திரட்டி அதில் அறக்கட்டளையை ஆரம்பிக்கிறேன் என்றாள் . தாயிற்கு தகவல் போயிற்று. தாய் தான் எறிந்த கல்லில் ஒரு மாங்காய் வீழ்ந்ததாக நினைத்தாள். அகல்யாவின் சமயோஜிதம் அப்போது அவளுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. அடுத்து அகல்யாவை விலக்கி வைக்கும் குறியை நோக்கி காய் நகர்த்தினாள். ராஜலிங்கத்தை சந்தித்து நிலைமையை கூறி மேற்கொண்டு செய்யவேண்டியதை ஆலோசித்தாள். நீ என் தங்கை என்பதை இப்போது தான் நிரூபித்திருக்கிறாய் என்று கூறி சிரித்தார். தாய்க்கு நாராயணசாமி நீடிய உதவிகள் மனதில் நிழலாடினாலும், அகல்யாவின் மேல் ஏற்பட்டிருக்கும் வெறுப்பானது அதை ஓரங்கட்டியது. ராஜலிங்கம் சொல்லியவற்றை செய்து விடுவது என்று முடிவெடுத்தாள் .
நாட்கள் நகர்ந்தது. ராஜலிங்கம் இப்போது தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயலாளர் ஆகியிருந்தார். அகல்யா தான் செய்து வந்து பொதுப்பணியில் கிராமத்து மக்களின் தேவைகளை ஓரளவு சரி செய்யத்தொடங்கியிருந்தாள். அவளுக்கு அங்கே நல்ல பெயர். காமுகன் இப்போது அகல்யாவை நினைத்து கவலைப்பட துவங்கினான். அவளின் செல்வாக்கு அவன் தவறுகளுக்கு எழுதப்படும் மரண சாசனம். இவளை இன்னும் வளர விடக்கூடாது என்பது அவனின் தீர்மானம்,ராஜலிங்கம் சூது வினையை தாயின் மூலம் எய்தான். அகல்யாவை நாற்புறமும் சூது கவ்வியது.
அன்பிற்கினிய மகனுக்கு "கண்ணன்" என்று பெயர் சூட்டி மகிழ்ந்தாள் அகல்யா. தாயும் , சீனுவும், சுற்றமும், நட்பும் வாழ்த்தினர். ராஜலிங்கம் எரிச்சலானார். பெயர்சூட்டு விழாவன்று அகல்யா தனது புதிய அறக்கட்டளை " ஸ்ரீ நாராயண் ஜி சேவா டிரஸ்ட் " என்ற அறக்கட்டளையை ஆரம்பிப்பதாக அறிவித்தாள். தாயும் , சீனுவும் மனதுக்குள் கருவினார்கள், அன்றலர்ந்த மலராய் அன்பு மலர்தலைக்கண்டு.
வேலை பளுவில் அகல்யா தொடர்ந்த வாரங்களில் மூழ்கிப்போனாள். தாயிடம் இருந்து இடைஞ்சல் ஏற்படுத்தும் அஞ்சல். குலதெய்வம் கோவிலில் வேண்டிக்கொண்ட படியால்,கண்ணனை அழைத்து வருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சீனு துள்ளினான் புறப்பட வேண்டுமென்று தாயின் ஓலை கண்டு.
அகல்யா சொல்லி மாய்ந்தாள் அவளின் வேலைகள் என்னவென்று .
காதில் ஏற்றுக்கொள்ளாமல் கன்றுக்குட்டியாய் அடம் பிடித்தான் அவன்.
காதலின் தாக்கத்தால் பரிதவித்தபடி தணலாய் எரிந்தாள் அவள்.
வருகின்ற துயர் வந்தே தீரும் !! வீழ்கின்ற பொழுது வீழ்ந்தே தீரும் என்பது விதி!!.

சிரித்தாள் !! சிந்தித்தாள் !! முடிவாய் தன்னவனையும் , தனயனையும் தனியே ஊருக்கு அனுப்பிவைத்தாள். விரைந்து வந்து விடும்படி வேண்டுக்கொள் விடுத்து, வழிமேல் விழி போது நித்தமும் காத்திருந்தாள்.
சீனு சென்றான். மாதங்கள் மூன்று கடந்தது. அவனிடம் இருந்து அஞ்சல் வருவது கூட நின்று போய் இருந்தது. அகல்யா சஞ்சலமுற்றாள். என்ன தான் அங்கே நடக்கிறதென்று பார்க்க யாருக்கும் அறிவிக்காமல் தென்காசி புறப்பட்டாள். நேராக தனது வீட்டிற்கு சென்று பார்க்க அங்கே வேறு யாரோ குடியிருந்தார். விசாரித்து விலாசம் அறிந்து சீனுவை காண வந்தவள் அங்கே கண்ட காட்சி அவள் நெஞ்சை சின்னா பின்னமாய் சிதறடித்தது. ஆம் , வீட்டுக்குள் இருந்த ஒரு புகைப்படம் ஒன்றில் சீனுவும் , மைதிலியும் மணமகன் , மணமகளாய் நின்று கொண்டிருந்தனர்.
தொடரும்

Comments
Post a Comment