Posts

Showing posts from August, 2018

AGALYAAVIN PARISU - 21 அகல்யாவின் பரிசு - 21

அகல்யாவின் பரிசு - 21                          துவண்டுத்தான் போயிருந்தாள் அகல்யா. கண்கள் அழுது , சிவந்து வற்றி போயிருந்தது. ஏதேதோ நினைவுகள். என்ன பாவம் செய்தேனோ இப்பிறவியை பெற.முதலில் தாய் பிரிந்தாள். அன்புடனே அந்த குறை தெரியாது அப்பா வளர்த்தார். அவருக்கு கைமாறாக அவமானமும், மனக்கஷ்டமுமே கொடுக்கமுடிந்தது. இன்று எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை. அன்பான கணவன் , அனாதையாய் விட்டு சென்றது  கொடுமை. பெற்ற பிள்ளையும் பிரிந்துவிட்டது. மணவாழ்க்கையும் பங்கு போட்டு விட்டார்கள்.மானமான கற்பும் பறிபோனது. என்ன கொடுமை இது. எதற்க்காக இந்த பிறவி என்று ஆழ யோசித்தபோது ஒரு விஷயம் ஊர்ஜிதமானது அகல்யாவுக்கு. அவள் பிறவி எடுத்தது அவளுக்காக வாழ அல்ல. ஆண்டவனின் கணக்குப்படி அவள் பிறர்காகவே படைக்கப்பட்டிருக்கின்ற ஜன்மம் என்பதே அது. முடிவெடுத்தாள். தென்காசியில் உள்ளோரை பழிவாங்கும் எண்ணமும் தளர்ந்துபோனது.சரி இனி நம் ஆசாபாசங்கள் அனைத்தையும் மறந்து விட்டு பொது வாழ்வே தன் வாழ்வாய் மாற்றிக்கொண்டு இயன்ற வரை இவ்வுலகிற்கு சேவை ...

முதிர்கன்னி

முதிர்கன்னி விடிந்தது இரவு!! விலகாத கனவு!! துயிலாமல் துயிலெழுந்தாள் !! ஒளியுதிர்ந்த  இளநிலவாள் !!! சுகமான கதிர் விரித்தான் சூரியவதனன் கதிரான பரியுடேவந்துவிடானென் ராஜகுமாரன் குந்தி குந்தி கவலைப்படும் மந்தி இல்லை நான் சூரியனை மணக்கும் மற்றோர் குந்தி நான்.. கீழ்வானம் கைவிட்டதென்று கலக்கம் இல்லை; இனி மேல்வானம் என்னை அழைக்கும் கவலை இல்லை.!!!

AGALYAAVIN PARISU - 20 அகல்யாவின் பரிசு - 20

அகல்யாவின் பரிசு - 20                                  அகல்யா சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்த விபரீதத்தை. அவள் காலுக்கடியில் பூமியே நழுவுவதுபோன்ற ஓர் உணர்வு ஏற்பட , தன்னிலை மறந்து நின்றவளை கதவு திறக்கும் சத்தம் உசுப்பியது. மைதிலி குளியலறையில் இருந்து வெளிப்பட்டாள்.சிவப்போடு மஞ்சளை கலந்த நிறத்தில் மின்னினாள் தாரகையாக. அகல்யாவின் விதியோடு விஷத்தை கலந்தவளாதலால் ஆனாள் சூர்பனகையாக. கொன்றுவிடுமளவு ஆத்திரம் மூள, சென்றுவிடுவென்று மனம் எச்சரித்தது அகல்யாவை. எரிக்கும் விழியால் மைதிலியை பார்த்தவள், அவள் மேனியை எடைபோட்டாள். உள்பாவாடையை மட்டுமே மார்புக்கு குறுக்கில் கட்டியபடி வெளிவந்தவளின் மேனி அழகு, அவள் உன்மத்தத்தில் உழன்று கொண்டிருக்கிறாள் என்பதை பறையடித்தது. சிறுத்த புஜம், பெருத்த தனம், மஞ்சள் பூசியும் மறையாத நகக்கீறல்கள், அவள் கட்டிலறைக் காமயுத்ததின்  கல்வெட்டுச் சான்றுகளாய் திகழ்ந்தது. தடித்த இதழ்களில் கடித்த தழும்புகள், விடைத்த தனங்களின்  அமைப்பு, வெட்டிவிட்ட வாழை கன்றி...

AGALYAAVIN PARISU - 19 அகல்யாவின் பரிசு - 19

அகல்யாவின் பரிசு - 19                                                   தாயின் மனமாற்றம் தனயனுக்கும் பெருத்த ஆச்சர்யம்!! அகல்யாவின் மீது இன்னும் அன்பு அதிகமானது. மாற்றத்தை விரும்பியது மனம். விவாதிக்க நினைத்தது நிஜம், ஆனால் வந்து விழுந்த செய்தியோ விஷம்.ஆம்!!!. சொத்து முழுவதும் அறக்கட்டளைக்கு ஒதுக்குவது என்ற அகல்யாவின் முடிவு சீனுவிற்கு கொடுத்தது பயம். அகல்யாவிடம் விவாதித்தான். வாழ்க்கை  எனும் வழக்கை குடும்ப மன்றத்தில் ஏற்றினான். வாழ்வாங்கு வாழும் வளமையை அடையும் குறி ஒன்றே கொள்கையாக வாதித்தான். அகல்யா மனதுக்குள் சிரித்துக்கொண்டாள் . விந்தையான உலகம். அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் மனிதர்களில் ஒருவனாக சீனு மாறிப்போனது அவளுக்கு ஏமாற்றமே!!.                                             அகல்யா தீர்மானம் எடுத்து முடித்திருந்தாள். சீனுவை அவன் த...

AGALYAAVIN PARISU - 18 அகல்யாவின் பரிசு - 18

அகல்யாவின் பரிசு - 18                                      தாய் மனம் தவித்தது. தறிகெட்டவனா தன் மகன் என துடித்தது. ஆதங்கம் தீர அடித்தாள் மகனை. ஏதுமறியா அப்பாவியவன். அப்பழிச்சுமந்தது அவனின் கருணை. அகல்யா மறித்தாள். அத்தை, அவரை அடிக்கவேண்டாம் வெறுத்து. வேண்டுமென்றால் நான் போய்விடுகிறேன் மரித்து என்றாள்  தாய் மனம் இளகினாள் தாயில்லாத பெண் தந்தையும் இழந்து, மானமும் உதிர்ந்து,  மலையென துயர் கொண்ட அவள் மனம் எப்பாடுபடும் என்பதை அவளின் அந்த வார்த்தை உணர்த்தியது. வீறிட்டு நோக்கினாள் தாய் விதி வசம் வீழ்ந்துவிட்டவளை. அகல்யா இனி உனை வாழ்விப்பது என் பொறுப்பு. உடனே உனக்கும் சீனுவுக்கும் திருமணம் என்று கூறினாள். அமுதும் தேனும் ஆறாய் பொங்கிபுரையேறச்செய்யவல்ல செய்தி, ஏனோ இப்போது கசந்தது. விரக்தியாய் புன்முறுவல் பூத்து, மன புதரில் மறைத்த புதிர் என்று வெளியாகுமா என்று பயந்து மருங்கினாள் அகல்யா.                            ...

AGALYAAVIN PARISU - 17 அகல்யாவின் பரிசு - 17

அகல்யாவின் பரிசு - 17                                    வானம் தூறியது. தூறிக்கொண்டே இருந்தது. துவண்டு போன அந்த பெண் ஜென்மத்திற்கு துண்டு துணி கிடைக்காதா, தனது மானத்தை காத்து கொள்ள என்று குமுறியது. தனது வலிமையால் நீரூற்று ஒன்றின் மூலமாக அவளின் ஆடைகளை அவளிடம் சேர்த்தது. அகல்யா தத்தி தத்தி , தட்டு தடுமாறி அவைகளை எடுத்து அணிந்தாள். சீனுவை நோக்கி நடந்தாள். சீனு மயக்கம் தெளிந்து இருந்தான், ஆனால் பாவம் வாயெல்லாம் ரத்தம் வடிந்துகொண்டிருந்தது.அகல்யா அவனை உசுப்பி எழுப்பிவிட்டாள். அவளும் எழுந்தாள். இருவரும் குடிசையை நோக்கி நடந்தனர்.                                     மறுநாள் விடிந்தது. அகல்யாவிற்கு மனதும், வாழ்வும் இருண்டது. இழப்பதற்கு இனி என்ன ? உயிர் வரை நினைவால் இனித்தவன், பக்கமிருந்தும், உயிருக்குள் உலை கொதித்தது. இவனுக்கு நாம் இனி தாரமாக முடியுமா. ஏதும் புரியாதவனாய் இருக்கும் இவனிடம் மறைத்து விடல...