AGALYAAVIN PARISU - 27 அகல்யாவின் பரிசு - 27


அகல்யாவின் பரிசு - 27



 கண்ணா நீ தயவு செய்து இந்த விஷயத்தை பத்தி கேட்காதே. அப்பறம் சொல்றேன் . அதுக்கும் ஒரு நேரம் வரும். அதனாலே இப்போ நீ என்ன பாக்க வந்த சந்தோஷத்தை கொண்டாடுவோம். உன்னை பெற்று எடுத்தேனே தவிர , சில மாதங்கள் பிறகு நீ பிரிந்து விட்டாய். உனக்கு ஒரு வாய் சோறு கூட செய்து கொடுக்கல. அதனாலே உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுப்பா , அதை செய்து தருகிறேன் என்றாள்.கண்ணன் அழுதவாறே அம்மா , அம்மா என்று தேம்பினான்.

நீண்ட உரையாடல்களின் பின்னே, கண்ணன் அம்மா , அப்பா இப்போது பெரிய பணக்கஷ்டத்தில் இருக்கிறார். உங்கள் டிரஸ்ட் மூலம் கடனாக கொடுத்து உதவ முடிந்தால் பெருமை உங்களோடு சேர்ந்து எனக்கும். கட்டாயம் இல்லை. பணத்துக்காக நான் உங்களை பார்க்க வரவில்லை, அதனால் தப்பாக நினைக்கவேண்டாம் . அகல்யா அவனை ஏறிட்டு பார்த்தாள். கண்ணன் வெகுளி. கோகுல்நாத்தை போல் கயவன் அல்ல என்று உணர்ந்ததே அவளுக்கு சந்தோஷமாய் இருந்தது.  

மறுநாள் அகல்யா கண்ணனிடம் , கண்ணா நீ ஊருக்கு போ, நான் ரெண்டு நாள் கழிச்சி என் நண்பர்  திரு விஜய் அவர்களுடன் உங்கள் ஊருக்கு வந்து அங்கே தரேன் என்றாள். ஐயோ வேண்டவே வேண்டாம் அம்மா . நான் உங்களிடம் வாங்கி கொடுத்தால் அப்பா வாங்கிக்கொள்ள மாட்டார். ப்ளீஸ் வேண்டாம் என்றான். ஹோ அப்படியா என்ற அகல்யாவிற்கு மெல்ல அங்குள்ள நிலவரம் புரிய ஆரம்பித்தது. 

சரி கண்ணா , உடனே என்னால அவளவு பணம் எடுக்க முடியாது, எனக்கு ஒரு வாரம் கொடு , நான் கொடுக்கிறேன், ஆனா இது தான் முதலும் கடைசியும். ஒரு தாயா நீ என்கிட்டே கேட்ட முதல் விருப்பத்தை நிறைவேத்ததான் என்னோட பங்கிலிருந்து எடுத்து தரேன் என்றாள். கண்ணன் சந்தோஷமாய் அம்பாசமுத்திரம் புறப்பட்டான்.

அகல்யா மனது ஏனோ சஞ்சலப்பட்டுக்கொண்டே இருந்தது. ஏதோ சரியில்லை என்று ஆழ்மனது சொன்னாலும், என்ன எது என்பது மட்டும் புலப்படவில்லை. விஜய்யை அழைத்து ஆலோசித்தால் ஏதாவது மார்க்கம் கிடைக்குமென்று அவனை வீட்டிற்கு வரச்சொன்னாள்.

விஜய் கிளம்பி வந்த அந்த தருணத்தில் அவனது காரை வழிமறித்து இரண்டு நபர்கள் அவனை எதிர்பாராவண்ணம் தாக்கி நையப்புடைத்துவிட்டு ஓடிவிட்டனர். தகவல் தெரிந்த அகல்யா ஆஸ்பத்திரிக்கு,  பதைபதைத்தவாறு ஓடி சென்று வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தாள்.

அப்போது கோகுல்நாத் அனுப்பியதாக கூறி அவரது கையாள் ஒருவன் வந்து, அகல்யாவிடம் கண்ணன் மிகவும் கவலைக்கிடமான நிலையிலுள்ளான் என்றும், அவளை பார்க்க ஆசைப்படுகிறான் என்றும், இன்னும் ஓரிரு நாள் கூட தாங்காது என்றும் கூற, அகல்யாவிற்கு வானமே இடிந்து தலை மேல் வீழ்ந்தது போல் நிலைகுலைந்துப்போனாள்.

கண்ணன் கேட்ட பணத்தையும் , ஒரு சில சொத்து பத்திரத்தையும் எடுத்துக்கொண்டு, விஜய்யை கவனமாக பார்த்துக்கொள்ளும்படி மருத்துவமனை டாக்டர்களிடம் கூறிவிட்டு உடனேயே மதுரைக்கு விமானம் ஏறினாள்.

அவளது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனித்து கோகுல்நாத்திற்கு தகவல் வர, அவர் உடனே தனது அடியாள்களிடம் கூறி மதுரையிலிருந்து வரும் வழியில் அகல்யாவையும் நன்றாக அடித்து குற்றுயிரும் குலையுயிருமாக அனுப்ப வேண்டும் என்று கூறினார். பிறகு போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிக்கு போன் செய்து, யாரோ தன் மகனை கொலை செய்ய முயற்சி செய்து அவரது மகனை அடித்து போட்டுவிட்டார்கள் என்ற ரீதியில் ஒரு புகாரை பதிவு செய்தார். அவரின் ஒரே எண்ணம், அகல்யா, விஜய், கண்ணன் யாருமே பேசிக்கொள்ளும் சூழலில் இல்லாமல், சுலபமாய் சொத்து கண்ணன் மேல் எழுதப்படவேண்டும் என்று திட்டம் வகுத்திருந்தார்.

எல்லாம் திட்டமிட்டபடியே நடக்க, இப்போது அகல்யாவும் அடிபட்ட நிலையில் ரோட்டோரத்தில் வீழ்ந்துகிடக்க, கண்ணனும் மூர்ச்சையாகும் அளவிற்கு அடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.


எதேச்சையாக மதுரைக்கு வந்து திரும்பும் வேலையில் அகல்யா சீனுவின் கண்ணில்பட, துடித்துப்போன சீனு அவளை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தான்.

அகல்யா சீனுவை வேண்டினாள். சீனு என்னை கண்ணனிடம் அழைத்துப்போக முடியுமா என்று. சீனு அழைத்து செல்ல முடிவெடுத்து வண்டி ஏற்பாடு செய்ய வெளியில் செல்ல, அகல்யாவை தேடி இரண்டு  பேர் மருத்துவமனைக்கு   வந்திருப்பதாக செவிலி சொல்ல, அகல்யா தன்னை மீண்டும் யாரோ கொலை செய்ய முயல்கிறார்கள், இங்கேயே இருந்தால் தப்பமுடியாது என்று உணர்ந்து, மருத்துவமனையிலிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பி சென்றாள். ( இது எல்லாமே கோகுல்நாத்தின் நாடகம் என்பது தெரியாமல்.)

யாரை நம்புவது, யார் கொலை செய்ய முயல்வது, எதற்கு என்ற விவரங்கள் தெரியாமல், அகல்யா தவிக்க, உதவி செய்யும் விஜய்யும் இப்போது உதவமுடியாத நிலையில் இருக்க, அகல்யா கூடுமானவரை யாருக்கும் தனது இருப்பிடம் தெரியாமல் பார்த்துக்கொண்டு பல இடங்களில் பதுங்கி பதுங்கி இடம் மாறி மாறி ஒரு வாரம் கடத்தினாள். உடல் நிலை சற்று தேறிய நிலையில், தனது பத்திரங்களை எடுத்துக்கொண்டு தள்ளாடி தள்ளாடி கண்ணன் வீட்டை நோக்கி நடந்தாள்.

தொடரும்














































































Comments

Popular posts from this blog

AGALYAAVIN PARISU - 26 அகல்யாவின் பரிசு - 26

AGALYAAVIN PARISU - 25 அகல்யாவின் பரிசு - 25

PALLI PARUVAM