AGALYAAVIN PARISU - 26 அகல்யாவின் பரிசு - 26


அகல்யாவின் பரிசு - 26.

மறுநாள் கண்ணன் வேலைநிமித்தமாக வெளியே சென்றான். கோகுல்நாத் தூங்கி எழுந்து வெளியே வந்தவருக்கு அதிர்ச்சி. பாரு தேம்பி தேம்பி அழுத வண்ணம் இருந்ததை கண்டு என்னம்மா ஆச்சு என்றார். மாமா !! உங்க பிரச்சினையில் என்னை மிகவும் கடிந்து கொண்டுவிட்டு கோபமாக வெளியே சென்று விட்டார். என்ன உங்கள் பிரச்சினை என்பதை தயவுசெய்து சொல்லிவிடுங்கள் என்று மீண்டும் அழ தொடங்கினாள்.கோகுல்நாத் மெல்ல அவள் அருகில் வந்து, அம்மா இதோ பார் அந்த அசிங்க கதையெல்லாம் நீயும் கேட்காதே, அவனையும் கேட்க முயற்சிக்க வேண்டாம் என்று  தடுத்து விடு, அதை தெரிந்து கொண்டால் உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. மேலும்  அந்த உண்மைகளை தெரிந்துகொள்ள ஆசைப்பட்டால் நான் எனது சொத்து எல்லாவற்றையும் அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வைத்துவிட்டு தற்கொலை செயது கொள்ள வேண்டியதுதான். இதுதான் உங்கள் ஆசை என்றால் தாராளமாக நீங்கள் கேளுங்கள் என்றார். இது என்னடா பிள்ளையார் பிடிக்க குரங்கு முளைத்த கதையாகிறதே என்று நினைத்த பாரு , இல்லை இல்லை வேண்டாம் , வேண்டாம், எங்களுக்கு நீங்கள் தான் முக்கியம் என்று கூறிவிட்டு கண்ணைத்துடைத்துக்கொண்டு கோகுல்நாத்திடம்   , இதோ பாருங்க மாமா , என்னால இவரு பண்ற டார்ச்சரையெல்லாம் தாங்க முடியாது, நீங்களே சட்டுபுட்டுனு இந்த பிரச்சினையை முடிச்சுவையுங்க என்று கூறிவிட்டு விடுவிடுவென வீட்டுக்கு உள்ளேயே சென்று மறைந்தாள்.

  கோகுல்நாத் மனதுக்குள் ஒரு கணக்கு போட்டார். இன்று நிறைவேற்றிவிடவேண்டியதுதான் என்று மனதுக்குள் கருவிக்கொண்டார். 


மறுநாள் கோகுல்நாத் வீட்டிற்கு அந்தவூரின் சிறந்த பைனான்சியர் வந்து கோகுல்நாத் செட்டப் செய்தபடி ஒரு இக்கட்டு ஏற்பட்டு இருப்பதனால் அவரும் கோகுல்நாத்தும் சேர்ந்து செய்த பிசினெஸ்ஸை தொடர முடியாதென்றும் தனது பணத்திக்கு ஏற்பாடு செய்யும்படி நெருக்கடி கொடுத்து சென்றார். இதையெல்லாம் கண்ணன் கவனித்துக்கொண்டிருந்தான் , பிறகு கவலையை மறைக்க முடியாமல் சோகமாய் இருந்த கோகுல்நாத்திடம் பணத்திற்கு என்ன பண்ண முடியும் என்று கேட்க, போடா பொய் உங்க அம்மா அம்மானு உருகுறியே அவங்க கிட்டப்போய் கேளு போ என்று பொறிந்து தள்ளினார். கண்ணனிற்கு சட்டென்று ஒரு பொறி தட்டியது. இதையே சாக்காக வைத்து அம்மாவை பார்க்க ஒரு வழி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தான்.

அப்பா உங்க பணக்கஷ்டத்தை நான் தீர்க்கிறேன் என்று கூறினான். அவன் எதை நினைத்து இப்படி சொல்கிறான் என்பதை உணர்ந்துகொண்ட கோகுல்நாத் மனதுக்குள் சிரித்துக்கொண்டே அதெல்லாம் வேணாம்பா , என்ன பிரச்சினையை நானே பார்த்துக்கிறேன் என்றார். இல்ல பா நான் முடிவெடுத்துட்டேன் , இப்போவே நான் சென்னை சென்று அதற்கு வழி செய்கிறேன் என்று கூறி பதில் எதிர்பாராமல் அங்கிருந்தகன்று சென்றான்.என் பிள்ளையை இருந்தால் இவ்வளவு மக்காகவா இருப்பான் என்று கண்ணனை நோக்கியவாறே நமட்டுச்சிரிப்பொன்று உதிர்த்தவாறே தன்  அறைக்கு சென்றார்.

கண்ணன் அகல்யா முன் நின்றுருந்தான். அகல்யா கண்களில் நீர் ஆர்ப்பரித்தது. அம்மா நான் தான் உங்க மகன் கண்ணன் , என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா என்றான். அகல்யா வாஞ்சையோடு அவன் தோள்களை தடவியவாறே என்னப்பா இது கேள்வி, நீ என் மகன் என்று எனக்கு என்னைக்குமே தெரியும் ஆனால் உனக்கு தான் நான் அம்மாவென்று  இப்போது தெரிந்திருக்கிறது. அம்மா என்று பாசத்தோடு கூப்பிட்டு கொண்டே நெருங்கிய கண்ணன், அம்மா நீங்களும் நானும் பிரிந்து ஏன் வாழ வேண்டும், உங்களுக்கும் அப்பாவுக்கும் என்ன பிரச்சினை என்றதை கேட்ட மறுகணம் அகல்யா நாணி குறுகினாள்.

 ஐயோ எப்படி சொல்வேன் இதற்க்கு பதிலை!!. கேட்கக்கூடாக கேள்வியை கேட்டுவிட்டானே...  அகல்யா நிலைகுலைந்தாள்..

தான் வாழ்வில் சொன்ன ஒரே பொய் எப்படி வளர்ந்து வந்து தன்னனுக்கே இப்படி கேள்விகேட்கிறதே!!இவனுக்கு என்ன பதில் சொல்வது என்பதை யோசிக்க தொடங்கினாள்.

தொடரும் ....







































































Comments

Popular posts from this blog

AGALYAAVIN PARISU - 25 அகல்யாவின் பரிசு - 25

PALLI PARUVAM