நெற்றியடி
நெற்றியடி
சிலநேரம் வெள்ளையரில் என்னஉண்டென்று வியந்ததுண்டு
அவர்களது சீரும் சிறப்போ, பாத்தியதையோ, சலுகையோ அல்லது அதிகாரமோ !!
எதுவாயினும் எல்லாமே ஏதுவானது அவர்களுக்கு.
பொலிவிழந்து போராடவோ, வாளேந்தி போரிடவோ தேவையிருந்ததில்லை!!!
வரலாறு - அது எப்போதோ ஒருமுறை சரியாக எழுதப்படுகிறது!!
மூண்ட போரும், பெற்ற வெற்றிகளும் மின்னலாம் ஆனால் அவை பொன்னல்ல,
அவை உண்மையுமல்ல,
இன்னும் பல,,
சாவின் முத்தம், சர்வாதிகாரம், என்று
எத்தனையோ வெற்றிகள் வெள்ளையரை பலமாக்கும் ஊக்கிகள்.
எதிர்ப்போருக்கு நீடிக்கும் நீண்ட , கடின போருக்கான சவால்கள்.
நானும் வெள்ளையனே , இந்த ஒரு வீச்சத்தில்,
என் மனை பெண்டிற்க்கு அவர்களை விடவும் வலிமையில்.
இயற்கையின் சலுகையால் அடைந்த ஆணாதிக்க பலத்தின் வேகம்
என் மனை பெண்டிரை அவர்தம் நியாயஉரிமைக்கும் போரிடவைக்கும்.
நானும் ஒரு ஆயுதமாய் ஆகிப்போனேன் !!
அடிக்க, வளைக்க, நசுக்க , பொடிப்பொடியாக்கவென்று.
என் பெண்டிற்கு துயரிழைக்கும் இவ்வெள்ளையனை முதலில் கொன்று
பின்னரே போரிட்டு வாகை சூட வேண்டும் வெள்ளையனை வென்று.

Comments
Post a Comment