Posts

  நட்பு வெவ்வேறு அன்னையர்க்கு                             வெண்முத்தாய் விதைந்தெழுந்தோம்  ஈரேழு வருடங்கள் அன்றில் பறவையென                                                  அன்போடு கலந்திருந்தோம்  அறிவினை வளர்த்து அன்பினை இழைத்து                                                நட்பெரிக்கும்  அணையா தீபமானோம்  ஆனந்தித்தோம், ஆராதித்தோம் அலைகடல் ஓயா                                                ஆனந்த அலைகளானோம்  வாழ்வியல் விரித்த வஞ்சக வலையில்                    ...

மழையோடு ஓர் உரையாடல்.

மழையோடு ஓர் உரையாடல். உறக்கம் கலைந்தது! அதிகாலை 4 மணி.!! அத்துணை உயிர்களும் ஆழ்நித்திரையில்!! சடசடவென ஓர் சத்தம்!!! கதவுகளின் இதய துடிப்போ அது! யாரின் அழைப்பு இது!! கதவைத்திறந்தேன் அல்ல கனவுகள் திறந்தேன்!! வெளியில் மழையோ மழை. அழைத்தாயோ மழையே!! என்றேன் "கொட்டி நான் தீரும்முன்பே - கண்  கொட்டாமல் உரையாடிவிடு என்னே!!" ஏற்கப்பட்டது மழையின் அழைப்பு. ************************************* எங்கள் உயிரே! என் உற்சாகமே! ஜீவ நதியே! நதியின் மூலமே!! எங்கிருந்து வருகிறாய் என்றே ஏகினேன்                      உலகெலாம் உணர்ந்தவன்!    ஓதற்கு அரியவன் !!                      தலைபிறந்து வருகிறேன், வளம்போற்ற வருகிறேன்! ஜோதிப்பிழம்பாம் எங்கள் ஈசன், அச்ஜோதியில் எங்கனம் நீர் பிறந்ததென சொல்வாயோ மென்மழையே!                      அணுவுக்குள் உலகம் உண்டு !! கல்லுக்குள் ஈரமும் உண்டு       ...

malarum ninavalai

பொங்கும் பூம்புனல் நெஞ்சுக்குள்                         பூபாளம் இசைக்குதடி! தங்குமோர் பனிச்சுழல் தம்தம்முள்          தனிமைக்கும் துணையானதடி! உலகெங்கும் உதிர்ந்திடினும் நட்பகத்துள்                       ஓர்தனிஉலகம்  சுழலுதடி! தாங்கும் நினைவுகள் நம்மில்                                       தாலாட்டு பாடுதடி ! வண்ணங்கள் சேர்வதினால் இது  வானவில்லோ ! வார்த்தைகளை கூடுவதால் இது கவிகளஞ்சியமோ! வாலிபத்தை தக்கவைக்கும் வாழ்வியலோ !! அனுபவத்தை பகிர்வதால் இது அறிவுக்கழகமோ! அத்தனைக்கும் சேர்ந்தபெயர்தான் இம் " மலரும் நினைவுகளோ"!!

AGALYAAVIN PARISU - 30 அகல்யாவின் பரிசு - 30

அகல்யாவின் பரிசு -30  மறுநாள் பொழுது விடிந்தது. இரவு முழுவதும் அழுததால் வீங்கி போன கன்னத்துடனும், சிவந்த கண்களும், அகல்யா இறுக்கமான முகத்துடனும், தீர்மானமான ஓர் முடிவுடனும், கடவுளின் சன்னிதானத்தில் மனசாந்திபெறலாம் என்ற எண்ணத்துடன் கிளம்பினாள். அகத்தியர் அருவிக்கு பரிசலில் செல்ல வேண்டும். பரிசலில் ஏறும் முன்பு கண்ணனுக்கு சொல்லிஅனுப்பிவிட்டு பரிசலில் ஏறினாள். பெற்றால் தான் பிள்ளையா, இல்லை!! என்பதை நிரூபித்து கண்ணனுக்காகவே வாழ்ந்த கோகுலநாதனின் மனைவியின் பெருமை காப்பாற்றப்படவேண்டும். தனது குழந்தை தான் என்று நம்பும் சீனுவிற்கு தான் சீர்கெட்டுஅழிந்ததை கூறி, அவன் இல்லை அப்பன் என்று கூறாமல் அவன் மனநிம்மதியை காக்கவேண்டும்  கோகுல்நாத்துக்கு அவரது வரட்டு கௌரவம் காக்கப்படவேண்டும். தான் கூறப்போகும் உண்மையால் கண்ணன் -- கோகுல்நாத் உறவு பாதிக்கப்படக்கூடாது. தன் பிறப்பில் உள்ள அசிங்கத்தை அறிந்து கண்ணன் வேதனையோ தற்கொலையோ செய்துகொள்ளும் எண்ணம் உருவாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இத்தனை வேண்டுதல்களுக்கும் ஒரு விடை வேண்டும் இறைவா என்று மானசீகமாக அந்த திருச்செந்த...

AGALYAAVIN PARISU - 29 அகல்யாவின் பரிசு - 29

அகல்யாவின் பரிசு - 29 கண்ணனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. சீனுவிற்கு செய்தி அனுப்பி அவனை மறுநாள் அம்பாசமுத்ரத்திற்கு வரச்சொல்லிருந்தான். தீவிர மருத்துவ சிகிச்சைக்குப்பின் அகல்யா ஓரளவு தெம்புற்றிருந்தாள். கண் விழித்த அவளை சுற்றி சீனு, கண்ணன் , பாரிஜாதம், மைதிலி , கோகுல்நாத் , ஆருஷி (விஜய்யின் தாயார்) மற்றும் கண்ணனுக்கு வேண்டப்பட்ட நண்பர்கள் இருவர் அவளை சுற்றி நின்றிருந்தனர்.  முதலில் அகல்யா ஆருஷிக்கு வணக்கம் சொல்லி , விஜய் எப்படி இருக்கிறார் என்று கேட்க , கால் வீக்கத்தால் நடக்க முடியாதலால் அவன் வரவில்லை, மற்றபடி ஏதும் அபாயம் இல்லை, நான் மட்டும் வந்தேன் உன்னை பார்க்க என்றார். அகல்யாவிற்கு தர்மசங்கடமாக இருந்தது. கண்ணனிடம் ஆருஷி என்ன சொல்லியிருப்பார், நினைக்கவே அவளுக்கு சற்று உறுத்தியது கோகுல்நாத் கனைத்தவாறே கண்ணா புறப்படு கோவிலுக்கு என்று கூற, கண்ணன் அகல்யாவை பார்க்க, அகல்யா சீனுவை பார்க்க, சீனு , அகல்யாவிடம் பயப்படாமே வந்து உண்மையா சொல்லு அகல்யா. இப்போ எல்லாரும் பெரியவங்க ஆயிட்டாங்க , புரிஞ்சிப்பாங்க என்றான் விட்டேத்தியாய். ஐயோ இது சத்தியம் அல்லவா, என்னவெ...

AGALYAAVIN PARISU - 28 அகல்யாவின் பரிசு - 28

அகல்யாவின் பரிசு - 28 அ கல்யா அந்த நீண்ட நெடிய மாளிகையின் வாயிற்கதவருகே தள்ளாடி தள்ளாடி வந்து நின்றாள். முகத்தில் களைப்பு. பசித்த வயிறு. பாசம் பொங்கும் கண்கள். நரைத்த கீற்று ஆங்காங்கே, முதுமை முளை விட்டிருப்பதை பறைசாற்றியது. டக் ...டக் ...டக். வாயிற்கதவை தட்டினாள். காவற்காரன் கதவிடுக்கின் வழியே திறந்து பார்த்து, யாரம்மா என்ன வேணும் என்று கேட்டான்.இப்போது இதோ அகல்யா அரை மயக்கத்தில் இருக்க கோகுல்நாத் காவலாளி கையில் இருந்த பத்திரத்தை பிடுங்கி படிக்கலானார். அதில் ருபாய் 2 கோடிக்கான கொடை பத்திரமும், தென்காசியில் உள்ள சொத்துக்களையும் கண்ணன் பெயரில் எழுதி வைத்து இருந்தது கண்டு ஆனந்தம் கொண்டார். ஆனால் வெளியே காட்டிக்கொள்ளாமல் அவளை அடிக்க மீதும் போக, வேகமாக குறுக்கிட்ட கண்ணன் அவரிடம் இருந்த பத்திரத்தை பிடுங்கி வெறிகொண்டவனாக கத்தினான். அப்பா அங்கேயே நில்லுங்க. இன்னொரு அடி அவங்கமேல விழுந்தா இந்த பத்திரத்தைகிழித்து போட்டுவிடுவேன் என்றதும், கோகுல்நாத் அவரையும் அறியாமல் நின்றுவிட்டார். அவர் இதை எதிர்பார்கவில்லை. ஹூம் நம்ப ரத்தமா இருந்தா இவ்ளோ முட்டாளா இருப்பானா? என்று மீத...

AGALYAAVIN PARISU - 27 அகல்யாவின் பரிசு - 27

அகல்யாவின் பரிசு - 27  கண்ணா நீ தயவு செய்து இந்த விஷயத்தை பத்தி கேட்காதே. அப்பறம் சொல்றேன் . அதுக்கும் ஒரு நேரம் வரும். அதனாலே இப்போ நீ என்ன பாக்க வந்த சந்தோஷத்தை கொண்டாடுவோம். உன்னை பெற்று எடுத்தேனே தவிர , சில மாதங்கள் பிறகு நீ பிரிந்து விட்டாய். உனக்கு ஒரு வாய் சோறு கூட செய்து கொடுக்கல. அதனாலே உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுப்பா , அதை செய்து தருகிறேன் என்றாள்.கண்ணன் அழுதவாறே அம்மா , அம்மா என்று தேம்பினான். நீண்ட உரையாடல்களின் பின்னே, கண்ணன் அம்மா , அப்பா இப்போது பெரிய பணக்கஷ்டத்தில் இருக்கிறார். உங்கள் டிரஸ்ட் மூலம் கடனாக கொடுத்து உதவ முடிந்தால் பெருமை உங்களோடு சேர்ந்து எனக்கும். கட்டாயம் இல்லை. பணத்துக்காக நான் உங்களை பார்க்க வரவில்லை, அதனால் தப்பாக நினைக்கவேண்டாம் . அகல்யா அவனை ஏறிட்டு பார்த்தாள். கண்ணன் வெகுளி. கோகுல்நாத்தை போல் கயவன் அல்ல என்று உணர்ந்ததே அவளுக்கு சந்தோஷமாய் இருந்தது.   மறுநாள் அகல்யா கண்ணனிடம் , கண்ணா நீ ஊருக்கு போ, நான் ரெண்டு நாள் கழிச்சி என் நண்பர்  திரு விஜய் அவர்களுடன் உங்கள் ஊருக்கு வந்து அங்கே தரேன் என்ற...