Posts

Showing posts from April, 2018

AGALYAAVIN PARISU - 1 - அகல்யாவின் பரிசு - 1

அகல்யாவின் பரிசு  அ கல்யா அந்த நீண்ட நெடிய மாளிகையின் வாயிற்கதவருகே தள்ளாடி தள்ளாடி வந்து நின்றாள். முகத்தில் களைப்பு. பசித்த வயிறு. பாசம் பொங்கும் கண்கள். நரைத்த கீற்று ஆங்காங்கே, முதுமை முளை விட்டிருப்பதை பறைசாற்றியது. டக் ...டக் ...டக். வாயிற்கதவை தட்டினாள். காவற்காரன் கதவிடுக்கின் வழியே திறந்து பார்த்து, யாரம்மா என்ன வேணும் என்று கேட்டான். ஐயாவை பார்க்கணும்பா என்றாள் தயங்கியவாறே. நீ என்ன வேணும்மா அவருக்கு என்றான். எளிதாக கேட்டு விட்டான். என்னவென்று பதில் சொல்வது . ஐயோ இறைவா இது என்ன சோதனை. உண்மையை சொல்வதா அல்லது பொய்யுரைப்பதா? உண்மையை சொன்னால் உள்ளே இன்ப வாழ்வை அனுபவித்து கொண்டிருப்பவன் விரும்புவானா? அல்லது வெறுப்பானா?. அவன் சந்தோஷத்திற்காகத்தானே எல்லாம் செய்தோம், ஆதலால் இப்போதும் அவன் சந்தோஷப்படும்படி பொய்யே சொல்வோம் சென்று தீர்மானித்தாள். அய்யா எனக்கு தூரத்து சொந்தம், அவரை வந்து பார்க்கச்சொன்னதாக எனக்கு வந்து சொல்லி இருந்தாக , அதான் வந்தேன். போய் அகல்யா வந்திருக்காங்க என்று சொல்லப்பா. வரச்சொன்னா உள்ளாறே போறேன்; இல்லனா இப்படியே போய்டறேன், ரொம்ப களைப்பா...

MANIDHAM

  மனிதம்  பேருந்து இருக்கை; இருந்தவன் ஈந்தபோது,  சொர்க்கமாகியது பேறு எதிர்கொள்ளவிருக்கும்  பெண்ணிற்கு!!!!.                                                                                                               மனிதம் வாழ்ந்தது !!!. பசித்த வயிறோடு பாதையோர நாய் புசித்த திண்பண்டத்தை வீசினாள்  தாய்                                                                                                               ...

MUDHUMAI KAADHAL

முதுமை காதல்..  நீ பொழிந்த பாசமெல்லாம் அன்பாக ஆச்சுதே நீ சொரிந்த காதலெல்லாம்ல் கருவிட்டு பூத்ததே என் நெஞ்சு கூடு கூட உன் ஸ்வாசம் தேடுதே உன் நெஞ்சில் என் நாமம் ஜதியாகி போனதே.  என் வலி எனக்கு முன்னே உன்னை தாக்கி போகுதே  உனை சுமந்த என் நெஞ்சில் சுகக்காற்று வீசுதே .  என் உடல் விட்டு உயிர் போயின் உன்னுள்ளே  சிறையாகுமே  உன் குவிந்த காதலுக்குள் வித்தாகிப்போகுமே உன் சொந்தம் விட்டுவந்து என் சொந்தம் அமைத்தவளே நான் சுட்ட போதெல்லாம் சங்காகி சிரித்தவளே விதை தாங்கும் நிலம் போலெ எனை தாங்கி நின்றவளே கண்ணே ! ஈரேழு ஜென்மம் மட்டும் உன் இமை போலெ பிறப்பேனே வி .என் வடிவேலு 

TRAVEL

TRAVEL I am on quest since birth Dont know its worth It is all beyond my imagination Know no rhyme or reason or even destination Mama could not help Papa did not know But I am anyways on the go Who knows if I will  win Or lose to the sin will I hold the door for the flood of joy Or will I be crushed under sorrow's ploy Oh the spirit in me the blessed spirit in me Who set it in motion In to this world of commotion What is the direction Where was the inspiration The spirit in me pushes me forward Like a firefly burning itself way onward Was I blessed for victory or cursed for success Who cares I have that energy in excess If it all works I get the name If not who takes the blame A day may come when I may disappear Or will I manifest in multiple bodies on this sphere Why do I like what I should not Why do I hate whats good for my lot Who put this into my head Can I get over all this instead Still,  I am on the go .. I am on the go Come join me....

PALLI PARUVAM

பள்ளிப் பருவம்  பகல் நிலவு போல் வசந்த கால மலர்கள் கொட்டிய பருவம் . மூன்றாம் பிறை போல் வளர்சி ந்தனை   துளிர்த்த  பருவம் . ஜல்லிக்கட்டுக்கடங்கா துள்ளிய முரட்டுக்காளை பருவம்.. என்னே ஒரு தருணம் எப்பேற்பட்ட பருவம்  பார்த்தால் பரவசம் கொண்டு ஒருதலை ராகமாக கண்ட புது புது அர்த்தங்கள் இன்றும் உள்ளம் கவர் கள்வனாய் உள்ளத்து ஊஞ்சலில்   இளமை ஊஞ்சலாட முதல் மரியாதை செய்து கொண்டிருக்கிறது

PAYANAM

பயணம் கருவறை யினின்று தொடங்கிய பயணம் காரணம் யாதென்று யாருரைப்பர் இலக்கு இல்லாத ஒரே பயணம் தாய்க்கும் தெரியாது தந்தைக்கும் புரியாது உன் பயணம் என்னவென்று . வென்றுவரவா அல்லது வெந்து மடியவா . வெற்றிகள் பூக்கவா அல்லது வேதனையை தேக்கவா ? ஜனித்த ஆன்மா எங்கிருந்து வந்தது ? யாரிட்ட விசை ? திசை தெரியாமல் செலுத்தியது யார் ? மின்மினிப்பூச்சி செலுத்தும் மினுக்கைபோல் உடல் கடத்தும் ஆன்மா . காரணம் என்ன ? காரணி என்ன வெல்ல வா என்று வரவேற்றனரா வெட்டிவா என்று வீசியெறிந்தனரா . துடிக்கும் துடிப்புகள் யாரிட்ட விசை . துடிக்காமல் போனால் அது யாரின் பிழை . அண்டஞ்சுற்றி வரும் ஆன்மா இடித்து , தெறித்து, துகல்களாய் சிதறுமா பெருகும் ஜனத்தொகைகேற்று வேண்டாததை விருப்பதும் வேண்டியதை வெறுப்பதும் யாரிட்ட சூத்திரம் . யாருக்கும்தெரியாது எதற்கென்றும் புரியாது தொடங்கிய பயனம் தொடரட்டும் ஆயிரம் உறவுகள் மலரட்டும்

MAALAI NERATHU MAYAKKAM

மாலை நேரத்து மயக்கம் - I  கம்மனஹள்ளி மெயின் ரோட். மாலை 4 மணி. " ரஃப்ள்ஸ் " ரெஸ்டாரெண்டில் சினேகா காத்துகொண்டிருந்தாள். மஞ்சள் நிற மேனியில் கருப்பு டாப்ஸ் அவளை எடுப்பாகக் காட்டியது. கண்களில் கூலிங்க்ளாஸ் அணிந்திருந்தாள். முகத்தில் . பதற்றம் தெரிந்தது. ரெஸ்டாரெண்டில் அதிக கூட்டமில்லை. பலவித சிந்தனைகள் மனதில் ஓட  பதற்றம் இன்னும் அதிகமானது. விவேக் வருவானா மாட்டானா? என்ன சொல்லுவான்? எப்படி பேசுவது? சே என்ன மனசு இது. எத்தனை  வாய்ப்பு கொடுத்தான். எல்லாவற்றையும் கெடுத்து கொண்டு விட்டோமே என்று தன்னையே கடிந்து கொண்டாள். விவேக். வாட்ட சாட்டமான இளைஞன் . சினேகாவோடு வேலை செய்யும் சகநண்பன் . எப்போதோ ஒரு முறை பேசுவான். மற்றபடி எப்போதும் பார்த்தபடியே இருப்பான். சினேகாவுக்கு எரிச்சல் எரிச்சலாக வரும். என்ன மனுஷன் இவன்.புடிச்சா   நேரே  சொல்லிவிட்டு  மற்ற விஷயதுக்கு போவாம இப்படியே பார்த்துக்கொண்டே இருக்கானே. சுத்த டுயுப்லைட் என்று எண்ணி சிரித்து  கொண்டாள். அவளுக்கும்   அவன் மீது ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்தது. அனால் அவளால் சொல்ல முடி...