ANNAI

அன்னை.

அன்பெனும் சிறையில் அகப்பட்ட இறையே  
ஈரைந்து மாதங்கள் எனக்கு உருதந்த உயிரே 
ஈரேழு உலகெங்கும் கிடைக்காத  பேறே .. இது 
நான் பெற்ற வரம்தானோ வேறென்ன கூற.

யாதொன்றும் கைம்மாறு உனக்கு நான் செய்யக்காண் 
ஈதுசெய்யேன்று இதுவரையில் கேளக்காண்..  தாயே !!
உயிரெல்லாம் உறைபோட்டு உனக்காக வைத்திருக்கேன்
அந்த உமையப்பன் வரம்நீட உனக்காக ஈந்துடுவேன் .

நான் வாழ நலம் காண தவமிருக்கும் நிலவே  
நீ என்றும் நலம் வாழ வேண்டுகின்றேன் இறையயை ..
உன் நினைவால் அன்பூற்று உள்ளொன்று கசிகிறது 
நீ என்றும் நலம் வாழ நெஞ்சமெல்லாம் பூக்கின்றது  

  தாயே வாழ்க!! 


  

Comments

Popular posts from this blog

AGALYAAVIN PARISU - 26 அகல்யாவின் பரிசு - 26

AGALYAAVIN PARISU - 25 அகல்யாவின் பரிசு - 25

PALLI PARUVAM