AGALYAAVIN PARISU - 6 அகல்யாவின் பரிசு - 6

 அகல்யாவின் பரிசு - 6

                                                  குற்றாலத்தில் அமைந்திருந்தது அந்த திருமணம். அகல்யா பெண் வீட்டாரை சார்ந்தவள். மணப்பெண் வீட்டில் அகல்யாவும் அவள் அத்தையும் திட்டமிட்டபடியே இரண்டு நாட்கள் முன்பாக வந்து தங்கினார். கல்யாண வீடு. குதூகலத்திற்கு கேட்கவும் வேண்டுமோ? வீடே அல்லோலகல்லோலப்பட்டது கல்யாண  வேலைகள் பலப்பல இருந்தாலும் எல்லோரும் பகிர்ந்துகொண்டே சிரித்து , சந்தோஷமாய் செய்தார்கள். கூடவே கலகலப்பும் , குறும்பு பேச்சுகளுக்கும் ,  உற்சாகத்திற்கும் குறைவே இல்லை. அகல்யா துறுதுறு வென்று ஓடியாடி வேலை செய்வதிலாகட்டும், அழும் குழந்தையை சமாதானப்படுத்தி விளையாட வைத்ததிலாகட்டும், மணப்பெண்ணின் ஆடை அலங்காரங்களில் ஒப்பனை நிபுணர் போலே சிறப்பாக செயலாற்றியதில் ஆகட்டும், வயதில் மூத்தோரை பணிவன்புடன் கவனித்துக் கொள்ளுதலிலாகட்டும், கன்னி இள மான்களோடு சொற்ஜாலங்கள் செய்து அவர்களை மடக்குவதிலாகட்டும், அகல்யா எல்லோர் நினைவிலும் நிரம்பி இருந்தாள், அவளின் குணாதிசயங்களை ரசித்த அனைவர் மனத்திலும் அவள் நிறைய , அதோடு அவள் அழகையும் சேர்த்து ரசித்த அவனின் இதயத்திலும் அவள் முழுநிலவாய் நிறைந்திருந்தாள்.  


மணப்பெண் மைதிலியின் தாயார் பரபரப்பாக வந்தார். 

மைத்து சீக்கிரம் வாயேண்டி , கூரைப்புடவை , ஜாக்கெட் எல்லாம் தச்சி வந்தாச்சு. ஒரு வாட்டி போட்டுவிட்டு எப்படி இருக்குனு சொல்லுடி; சீக்கிரம் என்றாள் . 

மெரூன் கலர் கைத்தறி புடவையில் கட்டம் கட்டமாக கோடு போட்டிருந்தது. அதற்கு இணையாக அதே நிறத்தில் ஜாக்கெட்டும் இருந்தது. அகல்யா வாங்கிக்கொண்டு , வா மைத்து என்று அறைக்குள் அழைத்து சென்றாள். அகல்யா உள்ளே இருக்க , மணப்பெண் வெட்கப்பட்டாள். அகல் கொஞ்சம் திரும்பிக்கோடி என்றாள். அகல்யாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது. கலகலவென்று சிரித்துவிட்டாள்.  மைதிலி அர்த்தம் புரிந்துகொண்டு , உன்னோட பெரிய போராட்டமா இருக்கு , எப்போ பாத்தாலும் அந்த பேச்சுதான் பேசுவியோ? வேற வேலை இல்லையா உனக்கு என்றாள் நாணத்தோடு. சரிடி நாங்க வெறும் பேச்சு தாண்டி, நீ  தான் செயலில் எறங்கப்போற, எங்களுக்கு எல்லாத்தையும் ஒண்ணு  விடாம விவரமா பிறகு சொல்லணும் புரியுதா என்றாள் . மைதிலி முகம் கூட இப்பொழுது நாணி மெரூன் நிறத்திற்கு மாறியது. அகல் எனக்கு ரொம்ப பயமா இருக்குடி என்றாள். ஆமாண்டி எனக்கும் தான் என்றாள். மைதிலி புரியாமல் அவளை பார்க்க, அகல்யா விகல்பமில்லாமல் கலகலவென்று சிரித்துக்கொண்டே , இந்த புள்ளிமான் கிட்டே அந்த புலி என்ன பாடு படப்போகிறதோ என்றவாறே அவளை நெருங்கி அவள் ரவிக்கையை ஒழுங்கு படுத்தினாள். கொஞ்சம் லூசா இருக்கே பா  என்றாள் . கவலைப்படாதடி உங்க ஆள் கிட்ட சொல்லு , கரெக்ட் பண்ணிடுவாரு சீக்கிரமா என்றாள் அகல்யா.ச்சீய் என்ன பேச்சு பேசுற, அம்மாகிட்ட சொல்லு பா, டக்கு புடிக்கச்சொல்லி என்றால் மைத்து. 

அகல்யா மீண்டும் நமட்டு சிரிப்புடன் டக்கு இல்லடி டக்குனு புடிக்க சொல்றேன் போதுமா என்றால். மைதிலிக்கு கூசாத இடங்களில் எல்லாம் கூசத்தொடங்கியது. இவர்கள் சம்பாஷணையை கேட்டபடி வந்த மைதிலியின் அம்மா, இருக்கட்டும் விடுடி, கூரைப்புடவைதானே, கொஞ்ச நேரம் கட்டிட்டு அப்புறம் அவுத்துடப்போறே , சமாளிச்சிக்கோ, அந்த தையக்காரன் வேற போய்ட்டான்,  இப்படியே இருக்கட்டும் என்று கூற, அகல்யா சிரித்த சிரிப்பில் மைதிலி நாணி கோணி சிவந்து அவளை அடிக்க ஓடினாள்.

மைதிலியின் அம்மா புரிந்தும் புரியாமலும், வயசுப்பொண்ணுங்க என்னத்த நெனச்சுக்கிட்டு இப்படி சிரிக்குதுங்களோ   என்று முணுமுணுத்தபடி நகர்ந்து சென்றார்.

தொடரும்..









Comments

Popular posts from this blog

AGALYAAVIN PARISU - 26 அகல்யாவின் பரிசு - 26

AGALYAAVIN PARISU - 25 அகல்யாவின் பரிசு - 25

PALLI PARUVAM