AGALYAAVIN PARISU - 3 - அகல்யாவின் பரிசு - 3
சீர்மிகு தென்காசிபட்டினம். பச்சைப்பசேலென்ற பசுமை ஆடையை போர்த்தி கொண்டு பாசமிகு மக்களை தாங்கி வாழும் பிராந்தியம். வணிகம் பிரதானமான தொழில். விவசாயமும், வணிகமும் இழைந்து வசதியான வாழ்க்கை முறையை பறைசாற்றும் வல்லமை படைத்த மண்டலம். வசதி இருக்கும் இடம் வாய்மை பொய்த்து போகும் நிகழ்வுகள் நடப்பதை நாம் கண்கூடாக பலரது வாழ்வில் கண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட ஓர் மாயவலையில் வீழ்ந்து பொய்த்திரை போர்த்திய மனிதர்களால் புண்பட்டு சிக்கி சிதிலமடைந்துப்போன ஒரு பாவப்பட்ட பெண் ஆத்மாவின் கதை இது.
15 வருடங்கள் முன்பு ஒரு நாள், மாலை 7 மணி, கிருஷ்ணா அவன் தந்தை கோகுலநாதனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தான் . தென்காசியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலை. ஆள் அரவம் குறைந்து இருந்த வேலை. வசந்தம் ஆஸ்பத்திரியை தாண்டி கருப்பண்ண ஸ்வாமி கோவில் அருகே ஒரு இருட்டிய வளைவில் போய்க்கொண்டிருந்த வண்டியின் மேல் யாரோ வேகமாக ஓடி வந்து விழ, கோகுலநாதன் நிலை தடுமாறி பிறகு சமாளித்து நிலை நிறுத்தினான். கோபத்தோடு திரும்பியவன் அதிர்ந்தான். அங்கே இருபத்தியைந்து வயது இளைய மயிலாக நின்றிருந்தாள் அகல்யா.
எதிர்பாராத சந்திப்பு. எத்தனை வருடங்கள் ஓடிவிட்டது. இப்போது எதற்கு வந்தாள். ஏதாவது பிரச்சனையா? இல்லை இவளை இப்படியே விடக்கூடாது என்று மனதுக்குள் கருவிக்கொண்டான். சுட்டு விடும் விழிகளோடு அகல்யாவை மேலும் கீழும் பார்த்தவாறே அவளை நெருங்கி வந்து அவள் கூந்தலை பிடித்து " சொல்லுடி எங்கே வந்தே " என்று அதட்டினான்.
அகல்யா- இருபத்தியைந்து இளைய மங்கை. முகம் பொலிவோடு பணக்கார களை வீசியது. வாளிப்பான உடல். நேர்த்தியாக உடுத்திய சேலை அவள் அழகை இன்னும் கூட்டி காட்டியது . ஓடி வந்த வேகத்தில் வியர்த்திருந்தாள். மூச்சிரைப்பில் அவள் நெஞ்சு ஏறிஇறங்கி பேச எத்தனிக்கும் அவளை பேச விடாமல் செய்தது.
" கோகுல் , விடு என்னை , என்னை அதிகாரம் பண்ணவோ , கேள்வி கேட்கவோ உனக்கு உரிமை இல்லை. மரியாதையாக நகர்ந்து போய்விடு" என்று எச்சரித்தாள் .
கோகுல் அதிர்ந்தான். என்ன ஒரு பெண் இவள். எவ்வளவு வலியை தந்தாலும் தாங்குகிறாளே, என்னையே எச்சரிக்கின்ற அளவுக்கு இன்னும் உறுதியோடும், மனதைரியத்தோடும் இருக்கிறாள். உண்மையிலேயே இவள் ஒரு தைரியமான பெண் தான் என்று நினைத்து கொண்டாள்.
" அடச்சீ , உனக்கு அப்படி எல்லாம் கூட ஒரு எண்ணம் இருக்கா என்ன, உன்ன ஒண்ணும் நன்றிக்கடனுக்காக புடிக்கலடி, கண்ணுல தூசி விழுந்தா தட்டி விட தொட்டு விடற மாதிரி டி இது. சொல்லு இங்கே எதுக்கு வந்தே. எதாவுது பிரச்சினை பண்ண வந்தியா, சொல்லு? என்றான் கோகுல் கோபமாக.
அகல்யா விரக்தியாய் சிரித்தாள். இல்லை. உங்க எல்லோருடைய கண் பார்வையிலிருந்தே போய் விடத்தான் முயற்சி செய்கிறேன் , ஆனால் முடியவில்லை என்றாள்.
கோகுல் மனதுக்குள் சிறிது சமாதானமாகி , இங்க என்ன பண்றே ? என்றான்.
எனக்கு யார் பிரச்சினை என்று உனக்கு தெரியும் அல்லவா, அவர்கள் துரத்துகிறார்கள் என்றாள்.
கோகுல் சற்று யோசித்துவிட்டு, சரி இங்கே மறைந்துகொள் என்று கூறிவிட்டு
அகல்யா வந்த திசையில் நோக்கினான்.
அகல்யா சொன்னது உண்மை. தூரத்தில் அவளை தேடிக்கொண்டு மோட்டார் வண்டியில் நான்கு நபர்கள் வேகமாக வ்ருவது தெரிந்தது...
கோகுல் மனதுக்குள் ஒரு குரூர எண்ணம் முளை விட துவங்கியது..
தொடரும்

Comments
Post a Comment