AGALYAAVIN PARISU - 2 - அகல்யாவின் பரிசு - 2


அகல்யாவின் பரிசு - 2

          தூரத்தில் சென்று கொண்டிருந்த அகல்யாவை கண்ட அவனுக்கு மனதில் பலப்பல எண்ண ஓட்டங்கள். எப்படி இருந்த மங்கை , வாழ்க்கை இவர்களை இப்படி புரட்டிப் போட்டு விட்டதே!! இறைவா இது நியாயமா? உலகில் யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது கடவுளே. எங்கே இருந்தார்கள் இவ்வளவு நாட்கள். வந்துவிட்டார்கள் என்று மகிழ்சியும் படமுடியவில்லை, வராமல் தொலைந்த நாட்களில் வருந்தாமலும் இருக்க முடியவில்லையே. என்ன கொடுமை இது. இருதலை கொள்ளி எறும்பாக என்னை ஏன் இப்படி அலைக்கழிக்கிறாய் இறைவா!!! .  


வேகமாக நடையை துரிதப்படுத்தி அவளை அடைந்தான். அம்மா!! என்னம்மா இது கோலம் . ஏன் இப்படி இருக்கிறீர்கள்? . உடம்புக்கு ஒன்றும் இல்லையே ? நலமாக தானே இருக்கிறீர்கள்? மூச்சு விடாமல் பல கேள்விகளை கேட்டவன் , யாவதிற்கும் பதில் எதிர்பாராது , வாங்கம்மா வீட்டுக்கு போகலாம் என்று அழைத்துக்கொண்டிருந்த அந்த கணம் ......


" கிருஷ்ணா " நல்லா இருக்கியாப்பா என்றவாறே மயங்கி தரையில் சாய்ந்தாள் அகல்யா. சாய்ந்தவளை பிடித்து தாங்கி கொண்டு போய் அருகில் இருந்த மரத்தடியில் உட்காரவைத்து ஆசுவாசப்படுத்தினான் அவன்.

அகல்யா சுயநினைவற்று மயங்கியே போயிருந்தாள். கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்த அவன் கவனம் பக்கத்தில் வந்து நின்ற நிழல் பட்டு கலைந்தது. நிமிர்ந்து பார்த்தான். சிவந்த விழிகளோடு , எரித்து விடும் பார்வையால் அவன் நோக்கிக்கொண்டிருந்தாள் அவன் மனைவி பிருந்தா.


நல்லா  இருக்கு !!  ரொம்ப நல்லா  இருக்குங்க !! உங்க  நாடகம். எத்தனை நாளாக நடத்துறீங்க  இந்த நாடகத்தை.  அதுக்கு மேல உங்க அம்மா. என்னம்மா நடிக்கிறாங்க!!?? என்றாள். அவள் பின்னாடி நின்று கொண்டிருந்த அந்த முதியவரின் கண்ணில் கோபம் கொப்பளித்தது. நரைத்த , அடர்த்தியான மீசையை முறுக்கியவாறே அதட்டினார். வாடா போலாம். உனக்கு என்ன கரிசனம். ஆடு பகை குட்டி உறவு என்பது நடக்காத ஒன்று. அவளை வீட்டுக்கு அழைத்து வந்தே அவ்ளோதான் என்று கர்ஜித்தார். 


இதோ பாருங்க உங்களுக்கு ஒண்ணு  சொல்லிட்டேன் , உங்க அம்மாவை கூட்டிவந்தீங்கன்னா நான் என் அம்மா வீட்டிற்கு போய்விடுவேன் என்றவள் வாய் மூடும் முன்பு " பொளேர்" என்று அவள் கன்னத்திலொரு அறை கொடுத்தான் அவள் கணவன். 

கலங்கிப்போன அவள் முதியவரை நோக்கி, பார்த்துட்டு சும்மா இருக்கீங்களே, இப்படி என்ன உயிரோட சித்திரவதை செய்யறதுக்கு என்ன பேசாம கொன்னுடுங்க என்றாள்  அழுதுகொண்டே ..

பொறு . எங்க அடிச்சா இவனுக்கு வலிக்குமோ அங்கே அடிக்கிறேன் பாரு என்றவாறே மயங்கி கிடந்த அகல்யாவை தனது கால்களால் அவள் மார்பிலும் , வயிற்றிலும் எட்டி உதைக்கலானார்.

பதறிப்போன அவன் , அப்பா வேண்டாம்,  வேண்டாம், அவங்களை ஒண்ணும் செய்யாதீங்க நான் உங்க கூட வரேன் என்று சொல்லிவிட்டு, தனது மனைவியை கேவலமாக ஒரு பார்வை பார்த்து விட்டு அழுதுக்கொண்டே வீட்டை நோக்கி கனத்த இதயத்துடன் நடந்தான்.

அவன் கண்ணில் தாரை தாரையாக நீர் வழிந்தது. அம்மா உங்களோட இந்த நிலைமைக்கு நானும் அல்லவா  காரணம் , என்னை மன்னிச்சிடுங்கம்மா என்று மானசீகமாக மன்றாடிக்கொண்டிருந்தான்.

அவன் மனதில் பழைய நினைவுகள் எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி போல் பளிச்சென்று விரிய ஆரம்பித்தது.

15 வருடங்களுக்கு முன்பு .....................................


தொடரும் 
  








Comments

Popular posts from this blog

AGALYAAVIN PARISU - 26 அகல்யாவின் பரிசு - 26

AGALYAAVIN PARISU - 25 அகல்யாவின் பரிசு - 25

PALLI PARUVAM