அகல்யாவின் பரிசு - 7


அகல்யாவின் பரிசு - 7

குதூகலமும் கொண்டாட்டமுமாக நாட்கள் நகர்ந்தன. மறுநாள் அவர்கள் வழக்கப்படி தாய் தந்தையர்க்கு மணப்பெண் பாதபூஜை செய்து நன்றி தெரிவிக்கும் சடங்கு. அதற்கு நாராயணசாமியும் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. அகல்யா அப்பாவின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தாள். 

நாராயணசாமி அன்று காலை தனது கடைக்கு வந்து அன்றைய அலுவல்களை சீக்கிரம் முடித்துவிட்டு கிளம்ப முடிவெடுத்து துரித கதியில் இயங்கிக்கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீநிவாசன், தன் தாய் கொடுத்ததாக கூறி ஒரு தொகையை நாராயணசாமி வசம் ஒப்படைத்தான்.

ஸ்ரீனிவாசன், மண்ணின் மைந்தர்களுக்கே உரித்தான மாநிறம் கொண்டவன். கலையான முகம். எப்போதும் சிரிப்பு தவழும் உதடுகள். நல்ல கட்டுமஸ்தான உடம்பு. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன். ஆனால் பகுத்தறிவாளன். நல்ல ரசனை உள்ளவன். கவிதை, கலைகளில் ஈடுபாடு கொண்டவன். நம் கதை நாயகன். 

"என்ன சீனு, வீட்ல எப்படி நிலவரம்"என்றார் நாராயணசாமி. " ஐயா இப்போ ஒண்ணும் தொந்தரவு இல்ல, சுமுகமா தொழில் நடக்குதுங்க"என்றான். நல்லதுப்பா, ராஜலிங்கத்தால இனிமே ஏதும் பிரச்சினை வராது, எல்லாம் நல்லாவே நடக்கும் என்றார்.

ஸ்ரீனிவாசனின் தாயும், ராஜலிங்கமும் அண்ணன்  தங்கை. ராஜலிங்கம் அந்த ஊரில் முன்னாள் வணிகர் கூட்டமைப்பு சங்க தலைவர். நாராயணசாமியும் , ராஜலிங்கமும் ஒன்றாக ஒரு காலத்தில் தொழில் செய்தவர்கள். ஒரு கால கட்டத்தில், ராஜலிங்கத்தைவிட நாராயணசாமி ஊரில் மற்றும் வணிக வட்டாரத்தில் மிகவும் நல்ல பெயரையும், செல்வாக்கையும் தனது நாணயத்தினாலும், நற்பண்புகளாலும் பெற்றிருந்தார். இது ராஜலிங்கத்திற்கு பிடிக்க வில்லை. ஆனாலும் வெளி காட்டிக்கொள்ளாமல்ஒன்றாக தொழில் செய்தனர்.ராஜலிங்கம் பரம்பரை பணக்காரர். சொத்து ஏராளம். ஒரே தங்கை. தங்கையின் கணவர் ஒரு விபத்தில் இறந்து விட, அவர் தன் மகனுடன் ராஜலிங்கத்தின் வீட்டிலேயே வாழ்ந்து வந்தார். ராஜலிங்கம் தனது தங்கையை ஓர் அடிமையை போல் நடத்தி வந்தார். இதற்கு அவரின் தந்தை மற்றும் மனைவி எல்லோரும் ஆதரவு கொடுத்தனர். அவர்கள் வீட்டிற்கு வந்து சகஜமாக பழகும் ஒரே உரிமை பெற்ற நபர் நாராயணசாமி மட்டுமே. ஒரு கால கட்டத்தில் வணிகர் சங்க தலைவர் பொறுப்பு ராஜலிங்கத்திடமிருந்து நாராயணசாமி வசம் வந்தது. அன்றிலிருந்து ராஜலிங்கம் நாராயணசாமியை வெறுக்க ஆரம்பித்தார்.

அப்படி ஒரு நேரத்தில், ராஜலிங்கத்தின் தந்தை இறந்துவிட, ராஜலிங்கம் தங்கைக்கு சொத்து ஏதும் கொடுக்காமல் எல்லாவற்றையும் தன் பெயருக்கே மாற்றிக்கொண்டார். அவரின் தங்கை நாராயணசாமியிடம் முறையிட , நாராயணசாமி சட்டப்படி அவருக்கு சேரவேண்டிய சொத்துக்களை அவருக்கு வாங்கி கொடுத்து உதவினார். காரணம் ஒன்றே ஒன்று தான். அத்தனை வசதி படைத்தும், ராஜலிங்கம் தன் தங்கை மகன் ஸ்ரீனிவாசனை பள்ளிக்கு அனுப்பவேயில்லை. அவனின் எதிர்காலம் கருதி அவர்களுக்கு உதவினார். ஸ்ரீனிவாசனின் தாய் வாழ ஒரு கடை பிடித்து அங்கே அரிசி மண்டி ஒன்று அமைத்து அவர் வாழ்க்கைக்கு ஒரு அடித்தளம் அமைத்துக்கொடுத்தார். அவரும் நிலைமை அறிந்து நன்றாக உழைத்து இன்று ஒரு நல்ல நிலையில் இருந்தார். அன்று முதல் ராஜலிங்கம் நாராயணசாமியை தன் ஜென்ம எதிரியாக நினைக்கலானார்.

சொத்தும், செல்வாக்கும் நாராயணசாமியால் இழந்தார் ராஜலிங்கம். தனது செல்வாக்கு மீண்டும் உயர வேண்டுமாயின் நாராயணசாமி ஒழியவேண்டும் என்று முடிவெடுத்தார்.

சரிப்பா சீனு, நான் குற்றாலம் வரைக்கும் போகணும், கிளம்பறேன், கணக்கு பிள்ளையிடம் வரவு வைத்து விட்டு போப்பா என்றார். ஐயா இருங்க நானும் கூட குற்றாலம் தான் போகிறேன், என் கூடவே வாங்க, வண்டியில போயிடலாம் என்றான். ஓ!! நீயும் மைதிலி கல்யாணத்திற்கு போகிறாயா என்றார். ஆமாம் ஐயா, ஆனால் நான் அம்மாவை பார்த்துவிட்டு கடைக்கு திரும்பிவிடுவேன் என்றான். சரிப்பா நல்லதாக போயிற்று. வா போகலாம் என்றார். எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்தை உணராமல் இருவரும்  குற்றாலத்திற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர்.


ராஜலிங்கம் தனது நபர்களோடு முழு போதையில் இருந்தார். அவருக்கு கடையில் உள்ள பையன் போன் செய்தான். நாராயணசாமி வண்டியில் குற்றாலம் போவதை தெரிவித்தான். ராஜலிங்கம் போனை வைத்துவிட்டு கோபத்தால் முகம் சிவந்தார்." என்ன பணம் இருந்து என்ன பயன். ஒரு ஆளை என் வாழ்க்கையில இருந்து விரட்ட முடியவில்லையே" என்று ஆதங்கப்பட்டார் தன் நண்பர்களிடம். போதை ஏற்றிய வலிமையில், உலகம் தன் காலடியில் உள்ளது போல் உணர்ந்த அவர் நண்பர்கள் , ஏய் நீ வேற, நம்ம பவர் தெரியாம பேசறியேப்பா. சொன்னவன் கொலை செய்ய அஞ்சாதவன். பல பேரை அடித்தும், கொலை செய்தும் போலீசில் மாட்டாமல் தப்பி உலாவிக்கொண்டிருப்பவன். அவனை உற்று நோக்கிய  ராஜலிங்கத்தின் முகம்  சட்டென்று பிரகாசமானது. " உன்னால் முடியுமா", இப்போவே முடியுமா என்று கேட்டார். என்ன செய்யவேணும் சொல்லு செய்திடலாம் என்றான் எதிரில் இருந்தவன். முடிச்சிடு என்றார் ராஜலிங்கம். செலவை நான் பாத்துக்கிறேன் என்றார். சரி என்ற அவன், யாருக்கோ போன் செய்து தகவல்களை கொடுத்தான.


Comments

Popular posts from this blog

AGALYAAVIN PARISU - 26 அகல்யாவின் பரிசு - 26

AGALYAAVIN PARISU - 25 அகல்யாவின் பரிசு - 25

PALLI PARUVAM