AGALYAAVIN PARISU - 4 - அகல்யாவின் பரிசு - 4





                               ங்கு இருப்பது அத்தனை உத்தமம் என்று அகல்யாவிற்கு தோணவில்லை. மெதுவாக அங்கிருந்து முட்புதர்கள் மண்டிக்கிடந்த சாலையோர பரப்பில் வேகமாக யார் கண்ணிலும் படாமல் ஓடிப்போனாள். அவள் போவதை கிருஷ்ணா பார்த்துக்கொண்டே இருந்தான். அவள் நிலைமையை கண்டு ஏனோ அவனுக்கு கோகுலிடம் சொல்ல மனம் வரவில்லை போலும், அமைதியாக இருந்துவிட்டான்.?


விரட்டி வந்த நான்கு பேரும் கோகுலிடம் " இந்த பக்கம் ஒரு பொண்ணு போனாளா ? "  என்று வினவினர்? கோகுல் மனதுக்குள் அந்த வேளை ஓர் எண்ண ஓட்டம் ஓடி ஓய்ந்திருந்தது. தனது ரகசியம் தெரிந்த ஒரே நபர் அகல்யா மட்டுமே. அவள் அழிந்தால் தனக்கு நிரந்தர மனஅமைதி கிடைக்கும் என்ற காரணத்தால் அவளை அவர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்திருந்தான். 

" அமாம் , பார்த்தேன். " என்றான். எங்கே என்ற அவர்களிடம் , எதற்கு அந்த பெண்ணை தேடுகிறீர்கள்? அவள் எனக்கு ஒரு வகையில் தெரிந்தவர் தான் என்றான். ஓ !! அப்போ உனக்கு அவ இருக்கிற இடம் தெரியும் இல்ல? என்றவாறே " பளார்" என்று ஒரு அறை விட்டான் அவன் கன்னத்தில். கோகுல் அடிவாங்குவதை கண்ட கிருஷ்ணா அழ ஆரம்பித்தான். கோகுல் " சரி , சரி , வாங்க காட்றேன் என்று அங்கு அகல்யா மறைந்த பாறை பிளவிற்கு அவர்களை அழைத்து சென்றான். 

" இங்க தான் இருக்கிறா தேடுங்க " என்றவன்  அதிர்ந்தான். காரணம் அங்கே பாறையின் மேல் ரத்தக்கறை படிந்த துணியும் அதோடு ஒரு அரிவாளும் கிடந்தது. இவர்கள் சம்பாஷித்துக்கொண்டிருந்த வேளையில் அகல்யா தென்காசி பஸ்ஸில் ஏறி போய்க்கொண்டிருந்தாள். அவள் கண்ணில் தாரை தாரையாக நீர்  வழிந்துகொண்டிருந்தது.

அதே நேரம் அகல்யாவையும் அவள் குடும்பத்தையும் நாசமாக்கிய ராஜலிங்கத்தின் உயிரற்ற உடல், கருப்பசாமி கோயில் பின்புறமுள்ள பாதாள சாக்கடையில் மெள்ள மூழ்க  ஆரம்பித்தது.

நான்கு ரௌடிகளும் கோகுலை கொத்தாக காலரை பிடித்து " என்னடா இது" எங்கேடா அவ , சொல்லு, வீணா உயிரை விட்றாத என்றார்கள்" கோகுல் நிலைகுலைந்துபோனான். அண்ணே !!  நான் சிவனேன்னு தென்காசியில ஜோலிய முடிச்சிகிட்டு என் மகனோட வீட்டுக்கு போய்  கொண்டிருக்கேன் . அவளா வந்து என் மேல மோதினா. எனக்கு அவ்ளோ தான் தெரியும். எனக்கு அவளோடு பழைய பகை இருந்தது அவ்ளோதான். மத்தபடி அவளை நான் ஒளிச்சி வைக்கவில்லை என்றான். அப்போது கிருஷ்ணா " அப்பா அந்த ஆண்ட்டி இந்த பக்க ஓடிபோய்ட்டாங்க , நான் பார்த்தேன் என்றான்.

பொடியன் பொய் சொல்ல மாட்டான் என்று அந்த நால்வரும் யோசித்தவாறு அவர்களின் தலைவன் ராஜலிங்கத்திற்கு கைபேசியில் அழைக்கலானார்கள். எங்கோ ஒரு புதர் மறைவில், அவர்கள் அழைத்த கைபேசியின் ரீங்கார ஒலி கேட்டு அவர்கள் திகைத்து போனார்கள்.

மறுநாள் செய்தித்தாள்களில் கொட்டை எழுத்துகளில் தலைப்பு செய்தியாக ...

தமிழர் வாழ்வுரிமை கட்சி மாநில செயலாளர் ராஜலிங்கம் மாயம்!!
கொலையா ? கடத்தலா  ? போலீஸ் விசாரணை. 



தொடரும் 


Comments

Popular posts from this blog

AGALYAAVIN PARISU - 26 அகல்யாவின் பரிசு - 26

AGALYAAVIN PARISU - 25 அகல்யாவின் பரிசு - 25

PALLI PARUVAM