AGALYAAVIN PARISU - 15 அகல்யாவின் பரிசு - 15
அகல்யாவின் பரிசு - 15.
ராஜலிங்கத்தின் கண்கள் வியப்பால் விரிந்தன. சந்தோஷத்தில் அவருக்கு நெஞ்சமே நின்றுவிடும் போல் ஆகிவிட்டது அகல்யாவின் புகைப்படத்துடன் கூடிய செய்தியை படித்தவுடன். ஆனாலும் , " மாப்ள, அப்பாவைத்தானே குறி வைக்க சொன்னேன் , அந்த பொண்ண பலியாக்கிடீங்களே, என்னப்பா இது , பாவம் அந்த பொண்ணு, பொம்பள பாவம் பொல்லாதது." என்றார். " இதுதான் மாப்ள ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்ங்கறது " என்று ஆணவமாய் சிரித்தான். இப்போ நாராயணசாமி எங்கே? என்றார் ராஜலிங்கம். " ஆள் தென்காசிக்கு வந்தாச்சு. இனி நம்ம வேலைய பாருங்க, உசுர மட்டும் விட்டுவிட்டு மற்றதையெல்லாம் எப்படி உருவி எடுக்கிறேன் பாருங்க என்று கொக்கரித்தான். ராஜலிங்கம் தொண்டையை செருமிக்கொண்டே " என்னவோ மாப்ள, என்னோட நீண்ட நாள் ஆசையும் பழி வாங்க வேண்டும் என்ற வெறியும் இப்போதான் அடங்கியது. அவனை இந்த ஊரை விட்டு எப்படியாவுது துரத்திடு போதும் " என்றார்.
நாராயணசாமி வந்ததை அறிந்து சீனுவின் தாயார் அவரை பார்க்க வந்தார். அவர் எல்லா விவரங்களையும் கூறி கண்ணீர் விட்டு தேம்பி அழுகலானார். , ஐயோ அண்ணே !!!, என்னணே! இப்படி சொல்றீங்க. வாங்கண்ணே எங்க தூரத்து உறவினர் ஒருவர் கமிஷனராக இருக்கிறார். அவரை போய் பார்த்து புகார் அளிக்கலாம் என்று துரிதப்படுத்த , அதுவும் சரியென அவருக்கு பட்டது. உடனே இருவரும் கமிஷனர் ஆபீஸ்க்கு கிளம்பினர்.
அப்போது கடை பையன் வந்தான். ஐயா கமிட்டி மீட்டிங் கூட்டியிருக்காங்க. உங்கள வரசொன்னாங்க. என்றான். ஏம்ப்பா என்ன விஷயம், கமிட்டியை கூட்ற உரிமை தலைவருக்கு மட்டும் தானே உண்டு என்றார். அதற்கு அவன் " ஐயா உங்கள தலைவர் பதவியில் இருந்து நீக்க பேச்சு நடக்கு , வேற சரியாய் விவரம் தெரியல " என்றான். நாராயணசாமிக்கு எல்லாம் விளங்கியது. ஓ !! இது திட்டமிட்டு செய்த சதிதான் என்பது புரிந்தது.. எல்லாவற்றிற்கும் காரணம் ராஜலிங்கம் என்பதும் பட்டவர்த்தனமாக தெரிந்தது. போலீசிற்கு போவதற்கு முன்பு அவரை பார்க்கலாம் என்று அவருக்கு தோன்றியது.
ராஜலிங்கம் வீட்டில் ஹாலில் நாளேடு படித்தபடி உட்கார்ந்திருக்க, நாராயணசாமியும், சீனுவின் தாயாரும் வந்தார்கள்.
ந.சாமி : ராஜலிங்கம் உள்ள வரலாமா ?
ராஜ : வா நண்பா !! எப்படி இருக்கே . இந்த குசேலனை பாக்க இப்போதான்
நாராயணனுக்கு நேரம் கெடச்சது போல. என்னடி தங்கச்சி நீயும் என்ன
கூட வந்திருக்க , என்ன விஷயம் என்றார் ஒரு அலட்சியத்தோடு.
ந.சாமி: லிங்கம், தெரிஞ்சோ தெரியாமலோ நான் ஏதாவது தப்பு
செய்திருந்தால் என்ன மன்னிச்சிடுப்பா, தயவுசெய்து என் பொண்ண
என் கிட்ட சேர்த்துடு (சீனுவின் தாயும் கதறினார்)
ராஜ: " ஹாஹாஹாஹாஹாஹாஹா " இது என்னப்பா கதை. உள்ளூர்ல
வெலபோகாத உன்பொண்ணை வெளியூர்ல வெச்சு தொழில்
பண்றியாமே , எப்படி நடக்கு இந்த தொழில். நீதான் தொழில்ல
கில்லாடி ஆச்சே, கூடவே ஒரு மாமா பய வேற " என்று வக்கிரமாக
சிரித்தார்.
ந.சாமி : ராஜலிங்கம் , வார்த்தையை அளந்து பேசு, இன்னொரு வார்த்தை என்
பொண்ண பத்தி தப்பா பேசுனா, உன் உடம்புல தல இருக்காது என்று
கர்ஜித்தார்.
ராஜ : நான் சொல்லல நண்பா, நாளேடு சொல்லுது பாரு என்று பேப்பர்ஐ
காட்ட நாராயணசாமி அதிர்ந்துபோனார். கண்ணீர் வழிந்தோட
ராஜலிங்கத்தை கைகூப்பி , வேண்டினார்.
ந.சாமி : ராஜலிங்கம், நம்ம பழைய ஸ்நேகிதத்துமேல கேட்கிறேன்,
தயவுசெய்து என் பொண்ணை காப்பாத்திக்குடு என்றார்.
ராஜ : உன்னாலே நான் பட்ட அவமானம் கொஞ்சமா நஞ்சமா. இதோ
இருக்காளே என் தங்கச்சி, இவ முன்னால நான் தலை குனிந்து என்
குடும்பத்துல மரியாதை இழந்து எவ்ளோ கஷ்டப்பட்டேன்
தெரியுமா. அந்த வலி உனக்கும் புரியட்டும் . என் கிட்ட எந்த உதவியும்
எதிர்பார்க்காதே . உன்ன ஊர விட்டு தொரத்தாம நான் ஓயமாட்டேன்
மரியாதையா வெளியே போய்விடு என்று கூச்சலிட்டார்.
நாராயணசாமி விரைவாக கமிஷனர் ஆபீஸ் போக எத்தனித்தபோது கமிட்டி ஆட்கள் அவரை போக விடாமல் தடுத்து ஆபீஸ்க்கு வர சொல்ல, கோபத்தால் கொதித்துப்போன நாராயணசாமி அவர்களை எல்லாரையும் தள்ளிவிட்டு வேகமாக சீனு அம்மாவை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் ஏறிச்சென்றார்.
கமிட்டி ஆட்களில் ஒருவன், இனிமே இந்த ஆளை கமிட்டி ஆபீஸ்ல பார்த்தா அங்கேயே கண்டதுண்டமா வெட்டி போட்ரனும் என்று கூவினான். இதை கேட்ட நாராயணசாமி சட்டை செய்யாமல், மனதுக்குள் ஒரு முடிவுக்கு வந்தார்.
கமிஷனர், புருவத்தை உயர்த்தி தீவிர ஆலோசனை செய்தார் , நாராயணசாமி சொன்ன புகாரின் மேல். கமிஷனர் ஒரு முடிவுக்கு வந்தார். இது மாயாண்டியோட வேலையாதான் இருக்கும் . ( மாயாண்டி ராஜலிங்கத்தின் நண்பன்). அவனோட நெட்ஒர்க் எல்லாம் எனக்கு தெரியும் . நீங்க கவலைப்படாதீங்க , நான் இப்போவே மும்பை போலீஸ்க்கு தகவல் அனுப்பி தேட சொல்றேன் . கண்டுபிடிச்சவுடன் நாம போய் கூட்டிகிட்டு வரலாம். என்றார்.
கமிஷனர் உடனே பம்பாய்க்கு தொலைபேசியில் பேசினார். ஏதோ தகவல் சொல்ல, மறுமுனையில் கேட்ட உருவம் ரிசீவர்ஐ வைத்துவிட்டு பலமாக சிரித்தது. பிறகு நாராயணசாமி நண்பரின் வக்கீலுக்கு போன் செய்தது.
நாராயணசாமி கமிஷனர் ஆபீஸ்ல் இருந்து நிம்மதி பெருமூச்சுடன் கிளம்பி கமிட்டி ஆபீஸ்க்கு வர, அங்கே அகல்யாவின் நாளேடு செய்தி நோட்டீஸ் போர்டில் மாட்டப்பட்டிருந்தது. அங்கத்தினர் எல்லோரும் வெளியே வந்து நாராயணசாமியை ஏளனமாக பார்த்து சிரித்தார்கள். " ஐயா நாராயணசாமி இப்படி எல்லாம் தொழில் பண்ணி தான் நீ பெரிய மனுஷனா ஆயிடியா , உன்ன போய் நாங்க தலைவனா ஏத்துக்கிட்டோமே என்று நினைக்கும்போது உடம்பே கூசுதையா , உன்னை தலைவர் பதவியில் இருந்தும் தூக்கியாச்சு, அடிப்படை உறுப்பினர் என்பதையும் விலக்கியாச்சு,,இனிமே இந்த கமிட்டி பக்கம் கால் எடுத்து வெச்சே , உனக்கு மரியாதை இல்ல , போய்டு " என்று ஒருவன் கூற, நாராயணசாமி ஏதும் பேசாமல் தள்ளாடியபடியே வீட்டை நோக்கி நடந்தார்.
அசிங்கமும் , அவமானமும் பிடுங்கி தின்ன, வக்கீல் வீட்டிற்கு சென்று தன் சொத்தை எல்லாம் அகல்யா பெயர்க்கு எழுதிவைத்துவிட்டு , வீடு செல்ல மனமில்லாமல் சென்னை செல்லும் ரயிலில் ஏறிஅமர்ந்தார்.
ஏற்றம் இறைக்கும் நீரை போல் , சிந்தனைகள் நடந்த நினைவுகளை அழுத்தி அழுத்தி; சந்தித்த அவமானத்தையும் , மானக்கேடயும் நீர் போல் இறைக்க , மகளின் நிலைமை வேறு பயத்தை உண்டாக்க , ஊண் , உறக்கமும் இல்லாமல் நொந்து நூலாகிருந்த தேகமும் மனதும், நிம்மதியை தேடி நிரந்தர விடை பெற்றது.
நாராயணசாமி உட்கார்ந்த நிலையிலேயே , ரயிலில் தன் கடைசி மூச்சை விட்டார். எத்தனையோ பேர்களுக்கு அடையாளமும் , அட்ரஸ்ம் ஏற்படுத்திக்கொடுத்த அந்த உன்னத உள்ளம், அடையாளம் காணப்படமுடியாமல் அனாதை பிணமாக ரயில்வே போலீஸால் அடக்கமும் செய்யப்பெற்றது .
மகள் இருக்கும் திசையை நோக்கி அந்த ஆத்மா பயணித்தது.......
தொடரும்...
Comments
Post a Comment