AGALYAAVIN PARISU - 16 அகல்யாவின் பரிசு - 16

அகல்யாவின் பரிசு - 16

                                        பத்து நாட்கள் கடந்தன. சீனு இன்னமும் படுத்த படுக்கையிலேயே இருந்தான். அகல்யாவிற்கு இப்போது பரவாயில்லை, பழைய நிலைமைக்கு வந்துவிட்டாள். சீனுவிற்கு விஷம் மூளையை தாக்கியதால் அவனுக்கு இப்படி ஓர் நிலைமை. ஆனால் இப்போது கை, கால்களை அசைக்கிறான். அகல்யாவிற்கு நம்பிக்கை துளிர் விட்டது. விரோதிகள் யாரும் அங்கே வராதது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. பாவம் அவள். அது வக்கீலின் நாடகம் என்பது அவளுக்கு புரியவில்லை. ஆம், வக்கீல் தனது போலீஸ் கைக்கூலி, கமிஷனர் அகல்யாவை விரைவில் கண்டுபிடுக்க சொல்லியதை போனில் கூறியஉடனே, ஆட்களை அனுப்பி சீனு சென்ற பைக்கை தேடி , அதை மறைத்து வைக்க சொன்னார். பிறகு  அகல்யாவும் , சீனுவும் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் அந்த கிராமத்திலேயே இருக்கும்படி பார்த்துக்கொண்டார். நாராயணசாமிக்கு ருபாய் 50,000 அனுப்பும்படி தந்தி அடித்துவிட்டு காத்திருந்தார். பாவம் நாராயணசாமி இறந்தது தெரியாமல் இலவு காத்த கிளி போல் காத்துக்கிடந்து, கடைசியில் பதில் வராததால் பொறுமை இழந்து தவித்தார்.

                              10 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு தந்தி அடிக்க, அது திரும்பி வந்தது. தனது திட்டம் செயல்படாமல் போனதால், அகல்யாவை கடத்திவந்து தனது மேற்பார்வையில் வைத்துக்கொள்ள திட்டமிட்டார். அதற்கு ஒரு சில ஆட்களை ஏவிவிட்டார். அந்த கும்பலில் அகல்யாவை அடைய நினைத்த காமுகனும் இருந்தான்.

                                       சீனுவின் தாயார் நாராயணசாமியை காணாது மீண்டும் கமிஷனர் ஆபீஸ் சென்று முறையிட்டார். விஷயம் விபரீதம் ஆகிப்போவதை உணர்ந்த அவர், உடனே ஒரு குழு அமைத்து சீனுவின் தாயாரையும் அந்த குழுவையும், மராத்திய போலீஸ் உதவியோடு தேட உத்தரவு பிறப்பித்தார். சீனுவின் தாயாரும் அந்த குழுவும் பம்பாய் பயணமானார்கள்.

                                  நாராயணசாமி காணாமல் போனது ராஜலிங்கத்திற்கு அலாதி சந்தோஷத்தை கொடுத்தது. அதற்காக ஒரு விருந்து கொடுத்து தன் நண்பர்களை கௌரவித்தார். மதுவும் , மாதுவும் கொடுத்த உச்சகட்ட இன்பத்தை அனுபவித்து கொண்டிருந்த அவர் நண்பர்களை கமிஷனர் மற்றும் போலீஸ் படை சூழ்ந்து கைது செய்தது. ராஜலிங்கத்திற்கு மராத்திய நாளேடுகள் எப்படி கிடைத்தன என்பதிலிருந்து விசாரணை ஆரம்பமானது. ராஜலிங்கம் பதறிப்போனார். தனக்கு ஏதும் தெரியாது என்று கூறி சமாளிக்க, கமிஷனர் மாயாண்டியை நோக்கி தனது கூறிய பார்வையை செலுத்தினார். மாயாண்டி பயத்தில் வியர்த்துபோனான். எப்படி விசாரணையை மற்றும் விஷயத்தை திசை திருப்புவது என்பதை அவன் மனம் அதற்குள் யூகித்து வைத்துவிட்டிருந்தது.

                                கிராமத்து சிறார்களுக்கு பாடம் சொல்லி கொடுத்தபடி , சீனுவை கவனித்தபடி அகல்யா நாட்களை கடத்திக்கொண்டிருந்தாள். சீனு சீக்கிரம் குணம் அடைய வேண்டி நித்தமும் இறைவனை வேண்டிக்கொண்டிருந்தாள் . ஆனால் இறைவன் வேறு கணக்கு போட்டிருப்பது அவளுக்கு அப்போது தெரிய நியாயமில்லைதான்.

                                               சீனுவின் தாயாரும் , தமிழக போலீஸ் குழுவும் பம்பாய் வருவதை தெரிந்து கொண்ட வக்கீல் , சீனு வந்த பைக்ஐ ஆட்கள் மூலம் பம்பாய் - குஜராத் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் " சில்வாசா " என்ற தொழிற்பேட்டைகள் நிறைந்த பகுதியில் கிடத்திவிட்டு   போலீஸ்ஐ திசைதிருப்பி விட்டார். அது முற்றிலும் சீனு சென்ற திசைக்கு எதிர் திசை.

                                       அகல்யா தற்பொழுது அந்த கிராம மக்களின் பாஷையை ஓரளவு கற்றுக்கொண்டிருந்தாள். அதை வைத்து சீனுவை பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்க அவர்களிடம் மன்றாடி கேட்டுக்கொண்டிருந்தாள் . அவர்களுக்கு புரிந்து இன்னும் இரண்டு நாட்கள் பார்க்கலாம், சரியாகவில்லை என்றால் ஆஸ்பத்திரிக்கு செல்லலாம் என்று கூறினார்.  


                                           அன்று இரவு, கும்மிருட்டு , விளக்கு இல்லாத அந்த குடிலில் அகல்யா உறங்கிக்கொண்டிருக்க, அந்த உருவம் மெதுவாக  ஓசைப்படாமல் அந்த குடிலை நெருங்கிக்கொண்டிருந்தது. குளிர் வாட்டிய  அந்த இரவு நேரத்தில், அகல்யா அரை தூக்கத்தில் புரண்டு படுக்க , உருவம் சீனு இருந்த குடிலுக்குள் நுழைந்தது. பிறகு சமிக்ஞை செய்து தன அடியாட்களை வரவழைத்தது. அதில் அந்த காமுகனும் இருந்தான். சீனுவை அந்த கும்பல் கட்டிலோடு ஒரு பிணத்தை தூக்குவது போல் தூக்கிக்கொண்டு வேகமாக பக்கத்தில் இருந்த சுனையின் பக்கம் சென்றது.

                                                       சீனுவை ஒரு மறைவில் வைத்து பலமாக அடிக்க தொடங்கியது. சீனு வலி தாங்காமல் முனகிய சத்தம் அகல்யாவை உறக்கத்தில் இருந்து எழுப்பியது. பதறிப்போன அகல்யா , கொட்டும் மழையும் பொருட்படுத்தாது சத்தம் வந்த திசையில் ஓடினாள்.  அக்கம் பக்கம் யாரும் மழையின் காரணமாக வராத நிலையில் அவள் ஒருவள் தனியாக சுனையின் பக்கம் ஓடினாள். இரண்டு பர்லாங் தூரம் ஓடியபின் , அந்த ஏற்றமான பகுதி முற்று பெற , அதை தாண்டி ஒரு பெரிய மலைச்சரிவு தென்பட்டது. சுனை ஒன்று ஒட்டியபடி இருந்தது. அது மிகவும் கற்பாறைகள் நிறைந்த பகுதியாக இருந்தது, அகல்யாவின் சத்தம் கேட்டு அந்த கும்பல் சீனுவை ஒரு பாறையின் மறைவில் கிடத்திவிட்டு காத்திருக்க, அகல்யா நெருங்கிய அந்த நேரம் அவளை அப்படியே வளைத்து பிடித்தது. அகல்யா அலற , காமுகன் அவள் வாயை பொத்தினான். தர தர வென்று அகல்யாவை இழுத்து சென்று ஒரு பாறை மறைவிற்கு சென்றான். அங்கே அகல்யாவின் மேலாடையை சற்றும் எதிர்பாராமல் உருவிட அகல்யா நாணி குறுகி கீழே அமர்ந்து, அவனை நோக்கி தன்னை விட்டு விடும்படி கைகூப்பினால். காமுகன் அலட்சியமாக சிரித்தவாறே அவளை நெருங்கி அவளை தன் பலத்தால் பணியவைத்து அவள் பெண்மையை சூறையாட தொடங்கினான். அவனுக்கு பிறகு அவன் உடன் வந்தவர்களும் அவளை அடைய , வலி தாங்கமாட்டாமல் அகல்யா " ஆ" வென்று எழுப்பிய அந்த அழுகுரல் அந்த கொட்டும் மழையிலும் , மலை முகடுகளில் பட்டு எதிரொலித்தது. 
                                         
தொடரும்...



















































                             

Comments

Popular posts from this blog

AGALYAAVIN PARISU - 26 அகல்யாவின் பரிசு - 26

AGALYAAVIN PARISU - 25 அகல்யாவின் பரிசு - 25

PALLI PARUVAM