AGALYAAVIN PARISU - 14 அகல்யாவின் பரிசு - 14
அகல்யாவின் பரிசு - 14
வாழ்க்கை வாழும் நிலைமையை இப்படியும் புரட்டிபோடுப்படுமா? என்ன ஒரு பயங்கரம். அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத இந்த மனிதன், என்னவெல்லாம் கோட்டை கட்டுகிறான். எவ்வளவு ஆணவத்தை இறைத்து ஆட்டம் போடுகிறான். கண்ணீர் வற்றும் வரை அகல்யா கரைந்தாள். இனியென்ன செய்வது. எப்படி போவது. தந்தையின் நிலைமை என்ன ஆயிற்று, சீனு எப்போது நலமடைவான்? கேள்விகள் அணுகுண்டாய் மண்டையை குடைந்தது. மூன்று நாட்களுக்கு முன்பு எப்படி இருந்த வாழ்க்கை இப்போது எப்படி இப்படி ஓர் அதள பாதாளத்தில் வீழ்ந்தது. அகல்யாவிற்கு ஒரு கணம் நிகழ்வது கனவா அல்லது நனவா என்று கூட சந்தேகம் வந்தது . நனவுதான் என்பதை அவள் புத்தி ஏற்றுக்கொண்டாலும் இதயம் ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறியது.
ஏதோ சத்தம் கேட்க சிந்தனை கலைந்து அகல்யா திரும்பி பார்க்க, அங்கே ஒரு அதிகாரி பக்கத்துக்கு குடிலில் வசித்த இளைஞன் ஒருவனை ஒரு தஸ்தாவேஜுவில் கையொப்பம் போட வலியுறுத்திக்கொண்டிருந்தார் . அவரை சுற்றி படிக்க தெரியாத அந்த பாமர மக்கள் குய்யோ முறையோ என்று ஓலமிட்டுக்கொண்டிருந்தனர். அகல்யா மெல்ல எழுந்து அந்த கூட்டத்திடம் சென்றாள். கூட்டத்து பெண்மணி ஒருவள்
அந்த தஸ்தாவேஜுவை அவளிடம் கொடுக்க, ஆங்கிலத்தில் இருந்த அதை படித்த அகல்யா அதிர்ந்தாள். பத்து வருடங்களுக்கு பம்பாய் துறைமுகத்தில் கூலி வேலை செய்ய அந்த ஆடவன் இரண்டு வருடங்களுக்கு முன்பு கையொப்பமிட்ட உடன்படிக்கையது. அவன் உடல் நலம் குன்றி வேலை செய்ய முடியாமல் ஓடி வந்துவிட்டான் போலும். அதற்கு ஈடாக ருபாய் 10,000 கேட்டு நடந்த சர்ச்சை அது என்பது புரிந்தது.
துயரம் ஏற்பட்டாலும் அந்த நேரம் அகல்யாவிற்கு மனதைரியம் பெருகியிருந்தது. தந்தையின் வணிக நடவடிக்கைகளில் எத்தனையோ உடன்படிக்கைகளை பார்த்தவள், அது போலியென்று கண்டு கொள்ள வெகு நேரம் பிடிக்க வில்லை. ஒரு வெள்ளை பேப்பர்ஐ அவரிடம் இருந்து சட்டென்று எடுத்து அவர் மார்பில் இருந்த எழுதுகோலை பறித்து வேகமாக எழுதலானாள். பின்பு அதை அவரிடம் கொடுக்க அவர் அதை பார்த்து வாயடைத்துப்போனார். விட்டால் நம் ஏமாற்று வேலை வெளியில் தெரிந்துவிடும் என்று வந்த வழியே திரும்பி சென்றார்.
கூட்டம் ஆர்ப்பரித்தது. மகராசி என்று அவர்கள் மொழியில் கூறுவதை அவர்களின் கண்களின் ஈரத்தின் மூலம் அகல்யாவால் உணர முடிந்தது. சீனுவை காட்டி அவனை குணப்படுத்த வேண்டிக்கொண்டாள். பக்கத்துவீட்டு சீக்காளி ஓடி வந்து அவள் காலில் விழுந்து ஏதோ கூறினான். பிறகு விருட்டென்று எழுந்து வேகமாக ஓடியேப்போனான். அகல்யா விழிக்க குடில் பெண் அவளை சமாதானப்படுத்தினாள். ஓடியவன் சில நிமிடங்களுக்கு பின் சில மூலிகையோடு வந்து வேறு சில பொருள்களோடு அரைத்து சீனுவிற்கு பூசிவிட ஆரம்பித்தான். சில மணி நேரங்களுக்கு பிறகு சீனு நெளிய தொடங்கியது கண்டு அகல்யா ஆனந்த கண்ணீர் பூத்தாள். விடியும் திசை வசப்பட்டதுபோல் தோன்றிய அந்த வேளையில, பம்பாய் பத்திரிக்கை பலவற்றில் பாலியல் தொழில் செய்த பெண் போலீசாரை ஏமாற்றி வாடிக்கையாளரோடு ஓட்டம் என்று அகல்யாவின் போட்டோவோடு செய்தி வந்து இருந்தது. தென்காசிக்கு நாராயணசாமியை ரயில் ஏற்றிவிட்ட பின்பு அவர் நண்பர் அதை பார்க்க நேர்ந்தது. நல்ல வேலை நண்பன் கண்ணில் படவில்லை இச்செய்தி என்று கண்ணீர் மல்க அதை படிக்கலானார். அதே நேரம் ராஜலிங்கத்தின் ஆள் அந்த செய்தி தாள்களை தென்காசிக்கு கூரியர் செய்து கொண்டிருந்தான். நாராயணசாமியுடன் சேர்ந்து அவருக்கு தெரியாமலேயே அச்செய்தி அவருடன் பயணித்துக்கொண்டிருந்தது.
அதே நேரம் , அக்குக்கிராமத்திலிருந்து சென்ற அதிகாரி நாராயணசாமி நண்பரின் வக்கீலிடம் நடந்ததை சொல்ல, அங்கே இருப்பது சீனுவும்,அகல்யாவும்தான் என்று புரிந்துகொள்ள அவருக்கு வெகு நேரம் பிடிக்க வில்லை.
செய்தி கேட்ட வக்கீல் அதிகாரியை கட்டி அணைத்து " ஹாஹஹாஹாஹா "
என்று படு வக்கிரமாக சிரிக்க தொடங்கினான்.
தொடரும்
Comments
Post a Comment