PAYANAM


பயணம்

கருவறை யினின்று தொடங்கிய பயணம்
காரணம் யாதென்று யாருரைப்பர்

இலக்கு இல்லாத ஒரே பயணம்

தாய்க்கும் தெரியாது தந்தைக்கும் புரியாது

உன் பயணம் என்னவென்று.

வென்றுவரவா அல்லது வெந்து மடியவா.

வெற்றிகள் பூக்கவா அல்லது வேதனையை தேக்கவா?

ஜனித்த ஆன்மா எங்கிருந்து வந்தது? யாரிட்ட விசை?
திசை தெரியாமல் செலுத்தியது யார்?

மின்மினிப்பூச்சி செலுத்தும் மினுக்கைபோல் உடல் கடத்தும் ஆன்மா.

காரணம் என்ன? காரணி என்ன

வெல்ல வா என்று வரவேற்றனரா
வெட்டிவா என்று வீசியெறிந்தனரா.

துடிக்கும் துடிப்புகள் யாரிட்ட விசை.
துடிக்காமல் போனால் அது யாரின் பிழை.

அண்டஞ்சுற்றி வரும் ஆன்மா
இடித்து,தெறித்து, துகல்களாய் சிதறுமா
பெருகும் ஜனத்தொகைகேற்று

வேண்டாததை விருப்பதும் வேண்டியதை வெறுப்பதும் யாரிட்ட சூத்திரம்.
யாருக்கும்தெரியாது எதற்கென்றும் புரியாது

தொடங்கிய பயனம் தொடரட்டும்

ஆயிரம் உறவுகள் மலரட்டும்





Comments

Popular posts from this blog

AGALYAAVIN PARISU - 26 அகல்யாவின் பரிசு - 26

AGALYAAVIN PARISU - 25 அகல்யாவின் பரிசு - 25

PALLI PARUVAM