MANIDHAM
பேருந்து இருக்கை; இருந்தவன் ஈந்தபோது, சொர்க்கமாகியது
பேறு எதிர்கொள்ளவிருக்கும் பெண்ணிற்கு!!!!.
மனிதம் வாழ்ந்தது !!!.
பசித்த வயிறோடு பாதையோர நாய்
புசித்த திண்பண்டத்தை வீசினாள் தாய்
மனிதம் வாழ்ந்தது !!!.
அராஜக மாமியாரின் அடிமை மருமகள் அங்கப்பிரதட்சணம்
நழுவும் ஆடையை திருத்தி மானம் காத்த மென்மையில்
மனிதம் வாழ்ந்தது !!!.
உலகமே பார்க்கவேண்டி ஊழலில் களை கட்டியவனை
தளையிட்டு ஊமையாக்கி திரை மூடி முடித்தது சட்டம்.
மனிதம் வாழ்ந்தது !!!.
---------------------------------------------------------------------------------------------------------------------
இருக்கை தந்தவன் எழுந்துநின்றான் கம்பை ஊன்றியபடி
இருக்கையில் அமர்ந்தவள் இதயம் திருப்பிக்கொண்டாள்
மனிதம் வீழ்ந்தது !!!
திட்டிய கணவனின் தீஞ்சொல் காயத்தால்
உணவை வெறுத்து வெதும்பி விட்டெறிந்தாள்
மனிதம் வீழ்ந்தது !!
அன்புமகனை அண்டவிடாமல் மலடியாக்கினாள்
உண்மையை புறம்தள்ளி உருட்டி பார்க்கிறாள்
மனிதம் வீழ்ந்தது !!!
ஊழல் பணத்தில் உண்டுக்களித்தது அரங்கேறிடுமோ
திரை விரித்தது தன் முகத்திரைதனை மறைப்பதற்கோ ?
மனிதம் வீழ்ந்தது !!!
------------------------------------------------------------------------------------------------------------------
இதய போர்வையில் மிருகம் மறைந்து மனிதம் வாழ்கிறது !!!!!!!!!!
சத்யம் கொன்று சாதுர்யம் வென்று சாஹசம் புரிகிறது !!!!!!!!!!!!!!!!!
இதுவா இறைவா உன் கைவண்ணம் என்று உள்ளம் கொதிக்கிறது
புதியதாய் சிந்திக்கும் உலகொன்று அமைய உள்ளம் விரும்பிடுது
மாறுமா இந்த கேடுகெட்ட மனிதம்
மலருமா இங்குதெளிவு பெற்ற மானிடம் ?!!!!!!

Comments
Post a Comment