MAALAI NERATHU MAYAKKAM


மாலை நேரத்து மயக்கம் - I 

கம்மனஹள்ளி மெயின் ரோட். மாலை 4 மணி. " ரஃப்ள்ஸ் " ரெஸ்டாரெண்டில் சினேகா காத்துகொண்டிருந்தாள்.மஞ்சள் நிற மேனியில் கருப்பு டாப்ஸ் அவளை எடுப்பாகக் காட்டியது. கண்களில் கூலிங்க்ளாஸ் அணிந்திருந்தாள். முகத்தில் .பதற்றம் தெரிந்தது. ரெஸ்டாரெண்டில் அதிக கூட்டமில்லை. பலவித சிந்தனைகள் மனதில் ஓட பதற்றம் இன்னும் அதிகமானது.

விவேக் வருவானா மாட்டானா? என்ன சொல்லுவான்? எப்படி பேசுவது? சே என்ன மனசு இது. எத்தனை வாய்ப்பு கொடுத்தான். எல்லாவற்றையும் கெடுத்து கொண்டு விட்டோமே என்று தன்னையே கடிந்து கொண்டாள்.


விவேக். வாட்ட சாட்டமான இளைஞன் . சினேகாவோடு வேலை செய்யும் சகநண்பன் . எப்போதோ ஒரு முறை பேசுவான்.மற்றபடி எப்போதும் பார்த்தபடியே இருப்பான். சினேகாவுக்கு எரிச்சல் எரிச்சலாக வரும். என்ன மனுஷன் இவன்.புடிச்சா  நேரே சொல்லிவிட்டு மற்ற விஷயதுக்கு போவாம இப்படியே பார்த்துக்கொண்டே இருக்கானே. சுத்த டுயுப்லைட் என்று எண்ணி சிரித்து கொண்டாள். அவளுக்கும்  அவன் மீது ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்தது. அனால் அவளால் சொல்ல முடியவில்லை. பெண்மை தடுக்க வேறு வழியின்றி காத்திருந்தாள். இப்படி ஓர் கால கட்டத்தில் தான் அவளிடம் விவேக் ஒரு நாள் நெருங்கி வந்து பேசினான்.

எப்போதும் ஆபிஸ் வேலையை பற்றி மட்டுமே  பேசும் அவன் அன்று அவளிடம்,சினேகா உங்க சுடிதார் ரொம்ப நல்லா இருக்கு என்றான். ஒரு உரிமையோடு பேசினான். சினேகாவிற்கு  ஷாக். என்னடா இவன் இவ்வளவு தைரியம் பெற்றுவிட்டானே என்று. அவனுக்கும் தன் மேல் ஓர் ஈர்ப்பு இருப்பதை உணர்ந்தாள்.


அன்று முதல் அவன் அருகில் வரும் போதெல்லம் அவளுக்கு நெஞ்சில் ஒரு துடிதுடிப்பு. சொல்வானா? மாட்டானா?, சொல்வானா ? மாட்டானா? என்ற ஒரு போராட்டம். ஹ்ம்ம் மனுஷன் இன்னும் மௌனம் காக்க பொறுக்கமுடியாமல், இந்த வாரம் அவன் சொல்ல வில்லை எனில் தானே ப்ரொபோஸ் செய்வது என்று முடிவெடுத்தாள். இப்படி ஒரு காலகட்டத்தில் விவேக்  அவளீடம் வந்து, சினேகா, உங்க கூட தனியாக ஒரு  விஷயம் முடிவு செய்ய வேண்டும், ஆதலால் ஒரு 1 மணி நேரம் என்னோடு வெளீயில் வர முடியுமா என்றான். சினேகாவுக்கு சந்தோஷம். ஆயினும் இல்லை நான் வர முடியாது என்றள். விவேக், இல்லை, இல்லை, ரொம்ப அவசரம். அதனால பக்கத்துல இருக்கிற ரெஸ்டாரெண்ட்ல வெயிட் பண்ணுங்க நான் வந்துட்றேன் ப்ளீஸ் என்று கைகூப்பினான். 

சினேகாவுக்கு உள் மனதில் குதூகலம். சரி நான் முன்னால் போகிறேன் நீங்கள் சிறிது நேரம் கழித்து வாருங்கள் என்று கூறினாள். ஆபீசில் யாருக்கும் ஏதும் தப்பாக எண்ணக்கூடாது என்பதற்காக அப்படி கூறினாள் .

என்ன பேசுவான்? என்ன விஷயமாக இருக்கும். என்ன முடிவு எடுக்க வேண்டும்? மனசுக்குள் பல கேள்விகள் . சரி வந்தாயிற்று என்ன தான் பேசுகிறான் என்று பார்ப்போம் என்று எண்ணி கொண்டு காத்திருக்கலானாள்.. சிறிது தாமதமாயிற்று.. அவள் பொறுமையிழந்தபோது இதோ வந்துவிட்டான். விவேக் வரும் கார் சத்தம் கேட்டது. மனசு பட் பட்டென்று அடித்துக் கொண்டது

ஆவலோடு திரும்பி பார்த்தவள் அப்படியே உறைந்து போனாள்.

அங்கே அவனோடு 

அவள்.....                                                                                                            




தொடரும்.....





மாலை நேரத்து மயக்கம் - II  

முன்கதை சுருக்கம் : சினேகா விவேகின் மேல் காதல் வசப்பட்டாள் . ஒரு நாள், அவனுக்காக காத்திருந்த வேலையில் அவன் வேறு ஒரு பெண்ணோடு வந்தான்.


அவள்

வைஷாலி !!!

சந்தன உடல். சங்கீதம் பாடும் விழி.எடுப்பான நாசி . வெடிக்க துடிக்கும் மாதுளையின் உதடுகள் . கொடைகானலின் வனப்பை கொத்தி போட்ட மார்புகள்.  துவண்ட இடை துவளாத நடை. ஆர்ப்பரிக்கும் அலையை அடக்கிப்போடும் கரை போல் அவள் வனப்புகளை அழகாக அணிந்த ரோஜா கலர் டி -ஷர்ட் மற்றும் கருப்பு நிற ஜீன்ஸ் மறைத்திருந்தது .

சினேகாவிற்கே அவள்  அழகு கண்டு ஆசை வந்தது. பிறகு பயம் வந்தது.

அவள் யார்? ஏன் விவேக்கோடு ?  இதற்கு முன் அவனோடு பார்த்ததில்லையே . அவன் காதலியா ? ஓ!!  நெஞ்சு வலித்தது அவளுக்கு..இவன் எனக்கு இல்லை, அவன் கிடைக்கமாட்டான் , கிடைக்கமாட்டான் என்று தருமி போல் பொறுமியது மனம்.


விவேக்கும் அவளும் சினேகாவின் டேபிளில் வந்து அமர்ந்தனர். கலங்கிய  கண்களை கண்ணாடியால் மறைத்து புன்னகைத்தாள் சினேகா.

விவேக் : சாரி சினேகா ! கொஞ்சம் லேட்டா ஆயிருச்சு. இவங்க பேர் வைஷாலி. நான் ஷாலு என்று பிரியமா அழைப்பேன். எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். ஒரு சிக்கலில் இப்போது மாட்டிக்கொண்டார்.  அதனை தீர்க்க வேண்டியது என் பொறுப்பு. அதை பற்றி பேசத்தான் இங்கே கூட்டி வந்தேன்.

சினேகா: பட் என்னிடம் பேச என்ன இருக்கு .  பை தி வே ஷாலு, ஐ ஆம் சினேகா . கை குலுக்கிக்கொண்டனர் .

விவேக்: இல்லை உங்களால் ஒரு உதவி ஆகவேண்டி இருக்கிறது . அதற்கு தான் ஷாலு உங்களை பார்க்க வந்திருக்கிறாள்

சினேகா: அவன் ஒருமையில் பேசியது சிநேகாவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியது . ஓ இவன் காதலி தான் இவள். ஓடி போய்  கல்யாணம் செய்ய சாட்சி கையெழுத்து போட என்னை கூப்பிட போகிறார்கள் போல . ஈஸ்வரா என்ன கொடுமையப்பா என்று பொருமினாள் . என்ன உதவி செய்யவேண்டும்?

விவேக்: இவள் அப்பா பெரிய புள்ளி இங்கே. அவரை மீறி ஷாலு கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை . அவள் அப்பா எல்லா இடத்திலும் இவளை பற்றி செய்தி அனுப்பி இவள் எங்கேயும் கல்யாணம் செய்து கொள்ள முடியாதபடி தடுத்துவிட்டார் . இவள் எங்கே போனாலும் கண்டுபிடித்து விடுகிறார்.இந்த முறை பக்காவாக பிளான் பண்ணி  முடிவு எடுத்து .இருக்கிறோம், அவருக்கு தெரியாத இடத்தில இன்று ஒரு நாள்  இருக்க வேண்டும் . நாளை திருமணம் என்றான்.

சினேகா: ஓ கங்கிராட்ஸ் . நான் என்ன செய்ய வேண்டும் உங்கள் மேரேஜ்க்கு என்று  கேட்டாள் .

விவேக்: ஒன்றும் இல்லை சினேகா , உங்கள் வீட்டில் (ரூமில்) இன்று ஒரு இரவு தங்க ஹெல்ப் செய்ய வேண்டும் என்று வேண்டினான்.உங்களை நான் பல நாள் வாட்ச் செய்த பின் தான் ,உங்களை ஹெல்ப் கேட்பதென்று முடிவு செய்தேன். உங்கள் வீடு/ரூம் வெகு அருகில் உள்ளது.  உங்களுடன் இப்போது யாரும் இல்லை. திருமணமே செய்து கொள்ளாத உங்கள் அக்கா இப்பொழுது ஆபீஸ் வேலையாக வெளியூர் சென்று உள்ளார். ஆகையால் உங்கள் வீடு ரொம்ப பாதுகாப்பு . ஆதலால் ஒரு நாள் உங்கள் கஸ்டடியில் ஷாலுவை வைத்து கொள்ளுங்கள் என்று கெஞ்சினான்.


வைஷாலி: மெல்ல எழுந்து எதுவும் பேசாமல் சினேகாவின் கையை  பற்றினாள். அவள் கண்ணில் நீர் வழிந்தது. 

சினேகா: சரி சரி. நான் கண்டிப்பாக செய்கிறேன் . ப்ளீஸ் அழ வேண்டாம் என்றாள். இதற்கு தான் என்னை அடிக்கடி பார்த்துக்கொண்டே இருந்தானா இவன்? ஹும் .

விவேக்: சினேகா உடனே நாம் உங்கள் வீட்டிற்கு போய் விட வேண்டும். இங்கே அவ்வளவு பாதுகாப்பு இல்லை , வாருங்கள் என்றான்.


மூவரும் சினேகாவின் வீட்டிற்கு வந்தனர். விஸ்தாரமான ஹால். ஆங்காங்கே புக்ஸ், உடைகள் சிதறி கிடந்தன ஒழுங்கு படுத்தினாள். உட்காருங்கள் நான் காபி எடுத்து வருகிறேன் என்றாள் அப்போது விவேக்கிற்கு போன் வந்தது . விவேக்  அதிர்ந்தான் . என்ன? அப்படியா? ஓடிப்போய் ஜன்னல் வழியாக வெளியில் பார்த்தான் .

அங்கே  ரஞ்சித்  கலக்கத்தோடு கை  அசைப்பதை கண்டு பதறினான் ..




தொடரும்



             மாலை நேரத்து மயக்கம் - III

ரஞ்சித் , விவேக்கின் நண்பன். ஐ டி யில் பணிபுரியும் ஒரு ஆணழகன். சாதாரண மத்திய வகுப்பு குடும்பத்தை சேர்ந்தவன் . 

ஷாலுவின் தந்தை ஒரு தேர்ந்த அரசியல்வாதி. எளிதில் ஏமாற்ற முடியாது என்று தெரியும். ஆதலால் சமயோசிதமாக திட்டம் போட்டு திருமண ஏற்பாட்டில் இறங்கி இருந்தான்.

ஷாலுவை அவள் தந்தை சுதந்திரமாக எல்லா இடத்துக்கும் அனுப்பும் வழக்கத்தை கையாண்டார் . மகள் காதலிப்பதால் அடக்கி வீட்டுக்குள் பூட்டும் தவறை அவர் செய்யவில்லை. ஆனால் மகள் தவறான முடிவுக்கு செல்ல எத்தனித்தாள் அவள் விரும்பும் பையனை இல்லாமல் செய்துவிடுவேன் என்று மிரட்டி வைத்திருந்தார். ஆதலால் ஷாலு ஓடிப்போய் திருமணம் செய்யும் எண்ணத்தை இரண்டு வருடங்களாக தள்ளி வைத்தாள் , ஆனால் இப்போது அவள் தந்தை அவளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய வேலைகளை தொடங்கி விட்ட படியால் , வேறு வழியின்றி ஒப்புக்கொண்டாள்.


விவேக் மற்றும் ரஞ்சித்தின் திட்டம் ஒன்றும் புதியது இல்லை. ரொம்பவும் சாதாரணமானதுதான்.முதலில் ஷாலுவின் அப்பாவிற்கு தகவல் தெரிய படுத்தும் அத்துணை நபர்களையும் குழப்ப முடிவு செய்தார்கள். 

மொத்தம் ஆறு  இடங்களை தெரிவு செய்து ஐந்து இடத்தில்  தனது அலுவலகத்தில் பணிபுரியும் ஷாலுவின் ஒத்த உருவமுடைய ஐந்து சக நண்பிகளை கெஞ்சி கூத்தாடி தங்க வைத்தார்கள் . 

தூரத்தில் இருந்து கண்காணிக்கும் ஒற்றர்கள் ஷாலு அவள் நண்பிகளுடன் இருப்பது போன்ற பிரமை ஏற்படுத்தினார்கள். யாருக்கும்  சந்தேகம் வராதவாறு பார்த்து கொண்டார்கள். 

அன்று ஒரு பெண் மட்டும் ஷாலுவை போல் ஒரே மாதிரியான ரோஜா நிற டாப்சும் , கருப்பு  நிற பேண்டும் அணிந்து பார்க்க ஒரே மாதிரியாக காணும்படி இருந்தாள்.

ஒரே கலரில் முகத்திரை , தலை கவசம் , சப்பல் என்று அனைத்தும் ஒரே மாதிரியாக  தேர்வு செய்து அவர்களை மாற்றி மாற்றி மற்ற நான்கு நண்பிகளும்  ஸ்கூட்டியில்  கூட்டிக்கொண்டு வலம் வந்தார்கள்.  

கடைசியாக ஒரு வீட்டில் ஷாலுவை ஒத்த பெண்ணும் அவள்  நண்பியும்  எல்லோரும் காணும் படியாக மொட்டை மாடியில் நின்று பேசிக்கொண்டிருக்க , பின்புறவழியாக ஷாலு அந்த வீட்டில் இருந்து மாற்று உடையில், ஒரு சேலையை அணிந்து கொண்டு விவேக்குடன் காரில் புறப்பட்டு " ரஃப்ள்ஸ் " வந்து சேர்ந்தாள்.

திட்டப்படி ஷாலு நண்பியின் வீட்டில் அன்று தங்குவதாக அவள் தந்தையிடம் கூறி இருந்தாள். அவள் தந்தையும் அரசியல் வேலையாக வெளியூர் சென்றதால் சரி என்று கூறிவிட்டு தன் உளவாளர்களை மிகவும் ஜாக்கிரதையாக கண்காணிக்க சொல்லிவிட்டு போனார்.

நாளை காலை வரவேண்டிய ரஞ்சித் இன்றே வந்தது இருவருக்கும் திகிலை ஏற்படுத்தியது.

தொடரும் .........................


 மாலை நேரத்து மயக்கம் - iv 


விவேக்கும் , ஷாலுவும் ரஞ்சித்திடம் ஓடி போய் நின்றனர். ரஞ்சித் நடந்ததை விவரிக்கலானான் . ஷாலுவை போல் டிரஸ் அணிந்த பெண்ணும் அவள் நண்பியும் வெகு நேரம் உளவாளிகளை ஏமாற்ற முடியவில்லை. அவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள் .அவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்து வண்டியில் வேகமாக செல்ல, உளவாளிகள் தங்கள் காரில் வந்து அவர்களை மடக்கி ஷாலு இருக்கும் இடம் அறிந்துகொண்டார்கள். இவர்களை கண்காணித்த ரஞ்சித் நண்பன் ரஞ்சித்திற்கு செய்தி சொல்ல , ரஞ்சித் இப்பொழுது ஷாலு முன்னே நின்று கொண்டு இருந்தான்.

ரஞ்சித் பதற்றத்தோடு சொன்னான் ,  "  விவேக் இந்த இடத்தையும் கண்டு பிடித்து விடுவார்களோ என்று பயம். ஆதலால் இன்றே ரெஜிஸ்ட்ரார் ஆபீசில் கல்யாணம் முடிவு செய்து விட்டேன். எனது காரில் நீயும் உன் நண்பியும் செல்லுங்கள் , நம் திட்டப்படி, என்று ஒரு செட் டிரஸ் கொடுத்தான். விவேக் சரி என்று விட்டு விறு விறு வென சினேகாவிடம் வந்து கவரை நீட்டினான். அதில் ஷாலு அணிந்த அதே மாதிரியான டிரஸ் இருந்தது. விவேக் சினேகாவிற்கு உடனே ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ் போக வேண்டிய நிலையை விளக்கி  அவளை ஷாலு போலே அதே நிற ட்ரெஸ்ஸை  அணிந்து கொண்டு காரில் வரும்படி கேட்டுக்கொண்டான்.


ஷாலு தான் வைத்திருந்த புடவை ஒன்றை அணிந்து கொண்டு ரஞ்சித்தின் நண்பனோடு பின்புற வழியாக ஒரு பைக்கில் ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ் சென்றாள். சினேகா சோகமான முகத்தோடு விவேக்குடன் காரில் ஏறினாள். ரஞ்சித்தும் அதில் இருந்தான்.  அவனை பைக்கில் மூன்று பேர் கண்காணித்து விட்டு சென்று விட்டனர். சரியாக மாலை 5 மணி. ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ் மூடும் நேரம் . விவேக் காரை நிரசாமர்தியமாக ஒட்டி உளவாளிகள் கண்ணில் படாதவாறு ரஞ்சித்தை இறக்கி விட்டு மீண்டும் வேகமாக காரை ஸ்டார்ட் செய்தான்.

வேகமாக ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ் உள்ளே வந்த  ரஞ்சித்தை அவன் நண்பர் , நண்பிகள்  நான்கு பேர் வரவேற்று , மாலை கொடுத்து ரெஜிஸ்ட்ரார் முன்னிலையில் ரெடியாக இருந்த தாலியை கட்டி திருமணத்தை முடித்தனர். எல்லோர் முகமும் சந்தாஷத்தில் திளைத்தது.



விவேக் சினேகாவிடம் கூறினான், சினேகா எப்படியோ ஷாலு கல்யாணம் நல்ல படியாக நடக்க வேண்டும். இன்றே அதுவும் நடந்து விட்டால் நமக்கு டென்ஷன் இல்லை என்றான். 


நீ இல்லாமல் எப்படி ஷாலு கல்யாணம் நடக்கும் விவேக் என்று கேட்டாள் சினேகா. 


விவேக் அதற்கு கூறிய பதில் அவளை வானத்தில் பறக்க வைத்தது.. இல்லை சினேகா நீங்க நினைக்கிறது தப்பு. ரஞ்சித் தான் ஷாலுவின் காதலன் என்றான்.


சிநேகாவிற்கு சந்தோசம் தாள முடியவில்லை . பின்னே! விவேக் வைஷாலியை காதலிக்கவில்லை என்ற உண்மையே அவளை எங்கோ வானத்தில் ஏற்றி வட்ட மிட வைத்தது.


இருவரும்  காரில்  பயணித்தனர். நிசப்தம் !!!. யாரும் பேசி கொள்ளவில்லை.!!
சிநேகாவிற்கு ஆனந்தம்.இளையராஜா ஹம்மிங் நெஞ்சுக்குள் கேட்பது போல் ஒரு உணர்வு.

விவேக்கிற்கு படபடப்பு . அவனுக்குள் பல யோசனை . இது தான் நல்ல            சந்தர்ப்பம் .  இப்போது காதலை சொல்லிவிட வேண்டியது தான் என்று முடிவு செய்தான்.


சினேகா !!என்னை பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன என்று சொல்ல முடியுமா ?

உங்களை பற்றி அபிப்ராயம் சொல்ல நான் யார். நீங்கள் ஒரு நல்ல நண்பர் என்பது ரஞ்சித்திற்கு உதவி செய்ததில் புரிந்தது. 

நீங்கள் முதலில் ஷாலு என் காதலி என்று தானே நினைத்தீர்கள்.? என்றான்.

அ .. அ.. அது வந்து இல்லையே , அப்படி நான் நினைக்கலையே என்றாள் . இல்ல சினேகா நீங்க பேசும்போது உங்க கல்யாணத்திற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டீர்கள் என்றான். சினேகா , அப்படியா , நினைவில்லை என்றாள் .

சிநேகாவிற்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. இன்றாவது , இப்பொழுதாவது ,இவன் தன்  காதலை வெளிப்படுத்த வேண்டும் இறைவா!!!!  என்று வேண்டினாள். 


சினேகா!!  உங்களிடம்ஒன்று சொல்ல வேண்டும்  என்று ரொம்ப நாளாக முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை. இன்று தான் சரியான சமயம் கிடைத்திருக்கிறது , ஆதலால் சொல்லிவிடுகிறேன் என்றான்.

சிநேகாவிற்கு இதயம் XL சைஸுக்கு பெருத்து அடிவயிற்றில் ஒரு அமில மாற்றம் ஏற்படுத்தியது. சொல்லுங்கள் விவேக் என்றாள் ஆர்வத்தை வெளியில் காட்டிக்கொள்ளாது


நானும் ஒரு பெண்ணை நீண்ட நாட்களாக காதலிக்கிறேன் சினேகா. அதை சொல்லத்தான் முடியவில்லை என்றான்.

நான் எதாவுது உதவி செய்ய வேண்டுமா என்று ஏதும் அறியாதவள் போல் சினேகா கேட்டாள்.

இல்லை சினேகா , அது வேறு யாரும் இல்லை சாட்சாத் நீங்கள் தான் என்று -கூறிய நேரத்தில் அவன் இதயம்  தரையில் இட்ட மீனாக துடித்தது.


தொடரும் 


மாலை நேரத்து மயக்கம் - v  

.ஆஹா இன்று ஒரு எதிர்பாராத இனிய பொன்நாள் , என்ன செய்வது. எப்படி கையாள்வது இந்த நொடியை . 

ஆசை பட்ட மனதுக்கு அது நிறைவேறும் தருணம் உண்மையில் ஆனந்தம் மட்டும் இல்லை இன்பமான வலியையும் கொடுக்கும் என்று அன்று அவள் உணர்ந்தாள்.

ஆனால் சற்று அவனை அலைக்கழித்து பிறகு ஒத்துக்கொள்ள வேண்டும் என்று மனதில் தீர்மானித்தாள்

----------
சினேகாவின் வீட்டிற்கு வந்த உளவாளிகள், யாரும் அங்கு இல்லாததை கண்டு, உடனே எல்லோரிடமும் பேசினார்கள். ஏதோ சந்தேகம் பொறி தட்ட இரண்டு பேர் ரெஜிஸ்திரார் ஆபீஸ் நோக்கி சென்றனர் .

இப்பொழு விவேக்கின் காரை இரண்டு பேர் பின்தொடர்ந்தனர்.

ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ் விட்டு ரஞ்சித் வேகமாக நடந்தான்.

கண்காணிப்பாளர்கள் அவனை இரு திசையிலும் கடந்து போனார்கள்.

வேகமாக சென்ற ரஞ்சித் பேருந்து நிறுத்தம் சென்றடைந்தான். விமான நிலையம் செல்லும் பேருந்தில் விரைந்து ஏறினான்.

இதை சற்றும் எதிர்பாராத கண்காணிப்பாளர்கள் மற்றவர்களோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு ஷாலுவை பற்றி விசாரித்தார்கள். விவேக்கின் காரை தொடர்ந்த கண்காணிப்பாளர்கள் ஷாலு இருப்பதாக உறுதி செய்தார்கள். இதை கேட்ட மற்றவர்கள் ரஞ்சித்தை தொடர்வதை நிறுத்திக்கொண்டனர்.

அந்த நேரத்தில் ஷாலுவை ரஞ்சித்தின் நண்பன் விமான நிலையத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்தான்



YES SNEHA I love you  என்றான். பதற்றத்தில் காரை தாறு மாறாக ஓட்டினான்.

சினேகா உள்ளுக்குள் சந்தோஷித்து கல கலவென்று சிரித்தாள்.விவேக் ஜோக் அடிக்காதீர்கள். உங்களுக்கு தெரியாதா நான் "  காதலுக்கு எதிரி "  என்றாள் .

ஆபீஸில் எல்லோருக்கும் தெரியுமே உங்களுக்கு தெரியாதா  என்று அவன் படும் அவஸ்த்தையை ரசித்தாள்.

சினேகா !!  காதல் என்பது மேகம் மாதிரி. அது எப்போ எங்கே பொழியும்னு யாருக்கும் தெரியாது.

மேகம் வேணா மண் மேல பொழியலாம் விவேக் ஆனால் நான் பெண். என்னோட சம்மதம் இல்லாமல் என் வாழ்க்கையில் யாராலயும் இணையமுடியாது என்றாள்.

எந்த மண்ணுமே  தேடிவர நீரை வெறுப்பதில்லையே சினேகா, உறவும் அப்படிதான் , உன்னை தேடி வர என்னை எதற்காக தவிர்க்கணும்.

மண் போல மென்மையான மனசு இருந்தா நான் கூட உங்களை ஏற்றுக்குவேன் விவேக், ஆனால் என் மனசு இறுகிப்போன பாறை விவேக். அதுல எந்த மேகம் மோதினாலும் , மழை பொழிந்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லையே.

இளக வேண்டிய மனம் இறுகிப்போன என்ன காரணம் சினேகா.

அது உங்க தவறு இல்ல விவேக். என் அக்கா ஒருவனை காதலித்தாள். அவனால் ஏமாற்றப்பட்டாள். அந்த அவளது வலியை கூடவே இருந்து பார்த்துப்பார்த்து என் இதயம் பாறையாகிப்போனது விவேக். என் வாழ்வில் காதலும் இல்லை , கல்யாணமும் இல்லை . என்னை மன்னித்து விடுங்கள் விவேக்.

மழை பொழிஞ்சா பொழிஞ்சதுதான் சினேகா. திரும்ப பெற முடியாது. உங்கள சாகும்வரை என்னால மறக்கமுடியாது என்றான் துவண்ட முகத்தோடு. அவன் கண்கள் கலங்கியிருந்தன.

நீங்க எத்தனை முயற்சி செய்தாலும் வானும் மண்ணும் சேரவே சேராது விவேக்.


உங்கள மறந்து வாழ எனக்கு வழி தெரியல சினேகா. நான் மண்ணோட மழையாய் சேர முடியலைனாலும் மண்ணோடு மண்ணாகி போக யாரும் தடுக்க முடியாது சினேகா. எப்படியும் , ஏதாவது ரூபத்துல  நான் உங்களோட இணைந்திருப்பேன்.

சிநேகாவிற்கு உண்மையில் கண்ணில் நீர் முட்டியது. வெளிகாட்டிக் கொள்ளாமல் சொன்னாள், விவேக் உங்களுக்கு என்னை விட நல்ல பெண் மனைவியாக கிடைப்பாள் கவலைப்படாமல் என்னை மறந்து வேறு ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து சந்தோஷமாக வாழுங்கள் என்றாள்.

இல்லை சிநேகா ஒரு முறை ஆதவனை பார்த்து பூத்த பூ பூத்ததுதான் . மறுபடியும் அது பூக்க இயலாது. உன்னை மறக்க எனக்கு முடியல. என்னை நினைக்க உனக்கு முடியல.

இந்த பாறையும் ஒரு நாள் உருகும். அன்னைக்கு உங்கள கல்யாணம் பண்ணிகொள்பவர்  ரொம்ப அதிர்ஷ்டக்காரராக  இருப்பார் சினேகா .

நீங்க தான் விவேக் அதிஷ்டக்காரர் ; அப்படி ஒரு நிலை வந்தால். ஆனா அதுக்கு சாத்தியமே இல்லை.

இது தான் உங்க முடிவா சினேகா .

இது முடிவு மட்டும் அல்ல விவேக் என்னோட ஆரம்பம். நம்மளோட ஆரம்பம்
ஆண்டவன் விதிச்ச பாதையில இனி வாழ்க்கையை ஆரம்பிங்க.

இப்போ என்னை வீட்டில் இறக்கி விட்ருங்க ப்ளீஸ் என்றாள் .


மன்னிச்சிடுங்க, இப்பவே உங்களை உங்கள் வீட்டில் சேர்த்து விடுகிறேன் என்று வேகமாக திரும்பி சினேகா வீட்டை அடைந்தான்.

சினேகா !!  இனி ஒரு முறை உங்களோடு இப்படி பேச சந்தர்ப்பம் அமையுமா என்று தெரிய வில்லை, ஆதலால் உங்கள் ஞாபகம் இருக்கும்படி உங்கள் கையால் ஒரு நல்ல காபி கொடுப்பீர்களா? என் நெஞ்சில் என்று நீங்காத நினைவாக  நிலைத்திருக்க!!

சினேகா அவனின் சோக முடிவை , முகத்தை பார்த்து ரொம்பவே பாவப்பட்டாள் . போகட்டும் காபி கொடுக்கும் போது உண்மையை கூறிவிடலாம் என்று தீர்மானித்தாள் .

நீங்க உட்காருங்க விவேக் நான் இப்போ வரேன்.

விவேக் காத்திருந்த வேளையில் அங்கிருந்த மேஜையில் இருந்த ஒரு புத்தகத்தை புரட்டினான்.

அவன் முகம் பிரகாசமாக ஒளிர்ந்தது . அது விவேக்கிற்காக சினேகா உருகி உருகி எழுதிய கவிதை தொகுப்பு.

என் மீது நேசம் கொண்டவனே !!
எப்போது என் மீது உன் நேசத்தை வாசிக்கப்போகிறாய்.
நீறுபூத்த நெருப்பை அணைக்க வந்தவனே !
எப்போது உன் நிழல் இறைத்து சுகம் விதைக்கப்போகிறாய்
விவேகத்திற்கு பெயர் பெற்றவனே !!
எப்போது உன் விழிக்கணை  ஏவி என் பெண்மையை உயிர்பிக்கப்போகிறாய்.


இப்படி போகின்ற பல கவிதைகளை படித்திருந்த விவேக்கை கண்டு காபி டம்ளருடன் வந்த சினேகா  அதிர்ந்தாள். போச்சு நாம சரியாக மாட்டிகிட்டோம் என்று உணர்ந்து அசடு வழிந்தாள் 


அடிக்கள்ளி !!  என் மேல் இத்தனை ஆசை வைத்துக்கொண்டு என்ன பேச்சு பேசினாய் என்று செல்லமாக அடிக்க முனைந்தான். என்னை விளையாட்டாய் செத்து பிழைக்கவைத்துவிட்டாயே, உன்னை என்ன செய்தால் தகும் என்று அவளை பிடிக்க ஓடினான்.

விவேக் மெல்ல மெல்ல காபி கொட்டிவிடப்போகுது என்று ஓடஎத்தனித்தாள் .

காபியை வாங்கி மேஜையில் வைத்த விவேக் அவளை இழுக்க , மாலை நேரத்து உன்மத்தத்தில் மயங்கிய சினேகா,  அவன்  மார்பில் சாய்ந்தாள். விவேக் சினேகாவை இறுக்கி அணைத்து அவள் முகம் உயர்த்தி இதழோடு இதழ்பதிக்கலானான்


                                                                                    சுபம் !!























Comments

Popular posts from this blog

AGALYAAVIN PARISU - 26 அகல்யாவின் பரிசு - 26

AGALYAAVIN PARISU - 25 அகல்யாவின் பரிசு - 25

PALLI PARUVAM