MUDHUMAI KAADHAL
முதுமை காதல்..
நீ பொழிந்த பாசமெல்லாம் அன்பாக ஆச்சுதே
நீ சொரிந்த காதலெல்லாம்ல் கருவிட்டு பூத்ததே
என் நெஞ்சு கூடு கூட உன் ஸ்வாசம் தேடுதே
உன் நெஞ்சில் என் நாமம் ஜதியாகி போனதே.
என் வலி எனக்கு முன்னே உன்னை தாக்கி போகுதே
உனை சுமந்த என் நெஞ்சில் சுகக்காற்று வீசுதே .
என் உடல் விட்டு உயிர் போயின் உன்னுள்ளே சிறையாகுமே
உன் குவிந்த காதலுக்குள் வித்தாகிப்போகுமே
உன் சொந்தம் விட்டுவந்து என் சொந்தம் அமைத்தவளே
நான் சுட்ட போதெல்லாம் சங்காகி சிரித்தவளே
விதை தாங்கும் நிலம் போலெ எனை தாங்கி நின்றவளே
கண்ணே ! ஈரேழு ஜென்மம் மட்டும் உன் இமை போலெ பிறப்பேனே
வி .என் வடிவேலு
Comments
Post a Comment