AGALYAAVIN PARISU - 1 - அகல்யாவின் பரிசு - 1
அகல்யாவின் பரிசு
அகல்யா அந்த நீண்ட நெடிய மாளிகையின் வாயிற்கதவருகே தள்ளாடி தள்ளாடி வந்து நின்றாள். முகத்தில் களைப்பு. பசித்த வயிறு. பாசம் பொங்கும் கண்கள். நரைத்த கீற்று ஆங்காங்கே, முதுமை முளை விட்டிருப்பதை பறைசாற்றியது.
டக் ...டக் ...டக். வாயிற்கதவை தட்டினாள். காவற்காரன் கதவிடுக்கின் வழியே திறந்து பார்த்து, யாரம்மா என்ன வேணும் என்று கேட்டான். ஐயாவை பார்க்கணும்பா என்றாள் தயங்கியவாறே. நீ என்ன வேணும்மா அவருக்கு என்றான்.
எளிதாக கேட்டு விட்டான். என்னவென்று பதில் சொல்வது . ஐயோ இறைவா இது என்ன சோதனை. உண்மையை சொல்வதா அல்லது பொய்யுரைப்பதா? உண்மையை சொன்னால் உள்ளே இன்ப வாழ்வை அனுபவித்து கொண்டிருப்பவன் விரும்புவானா? அல்லது வெறுப்பானா?. அவன் சந்தோஷத்திற்காகத்தானே எல்லாம் செய்தோம், ஆதலால் இப்போதும் அவன் சந்தோஷப்படும்படி பொய்யே சொல்வோம் சென்று தீர்மானித்தாள். அய்யா எனக்கு தூரத்து சொந்தம், அவரை வந்து பார்க்கச்சொன்னதாக எனக்கு வந்து சொல்லி இருந்தாக , அதான் வந்தேன். போய் அகல்யா வந்திருக்காங்க என்று சொல்லப்பா. வரச்சொன்னா உள்ளாறே போறேன்; இல்லனா இப்படியே போய்டறேன், ரொம்ப களைப்பா இருக்குப்பா என்றாள்.
அவள் பரிதாப நிலையை கண்ட காவல்காரன் மேலும் கேள்வி கேட்காமல் சரி இங்கயே இருங்கம்மா நான் வந்துடறேன் என்று கூறி விட்டு இண்டர்காம்ல் தொடர்பு கொண்டான்.
சார் !! வணக்கம், இங்க உங்கள பாக்க அகல்யான்னு ஒரு அம்மா வந்திருக்காங்க. கேட்டா நீங்க தான் வரச்சொன்னதா சொல்றாங்க . உள்ளே அனுப்பட்டுங்களா ?
அப்படியா ? என்ற அவன் முதலாளியிடமிருந்து நிசப்தம்... தொடர்ந்து மௌனம்,.... பிறகு கைபேசி வைக்கும் ஒலி கேட்டது.
காவல்காரன் சொன்னான் , அம்மா நீங்க போய்டுங்க , ஐயா எதுவும் சொல்லாமல் வச்சுட்டார். அதனாலே என்னாலே உங்கள உள்ளே அனுப்ப முடியாது என்றான். சரியப்பா கொஞ்சம் தண்ணீர் மட்டும் குடுப்பா குடிச்சிட்டுப்போறேன் என்றாள் சோர்ந்த உள்ளத்துடன். தண்ணீர் வாங்கி குடித்து விட்டு ஒரு நான்கு அடி நடந்து போய் இருப்பாள் , காவல்காரன் பரிதாபத்தோடு பார்த்து விட்டு கதவை மூடி திரும்பிய உடன் அதிர்ந்தான்.
எங்கே அவங்க , எங்கே அவங்க, என்று சட்டையை அணிந்தும் அணியாமலும் அந்த " ஐயா " பரபரப்புடன் வந்து கொண்டிருந்தார். எங்கே, எங்கே என்றவரிடம், ஐயா அவங்க இப்ப தான் வெளிய போனாங்க என்றான்.
சுட்டு விடும் விழியால் காவல்காரனை ஏறிற்று கதவை திற சீக்கிரம் என்றார்.
கதவை திறந்து விட்ட நொடியில் காலணி அணியாத அந்த குபேரன் ரோட்டில் ஓடிச்சென்றார் அகல்யாவை தேடி.
தனது 10 வருட அனுபவத்தில், இப்படி ஒரு செய்கையை கண்டிராத காவல்காரன் திகிலுற்றான். ஏதாவது தப்பு செய்துவிட்டோமோ? வேலைக்கு எதாவது பிரச்னை ஏற்படுமோ என்று சிந்தித்து அவர் பின்னாடியே ஓடலானான்.
ஐயா !! ஐயா!! நீங்க இருங்க நான் போய் பார்த்து கூப்பிட்டு வரேன் என்றான்.
கோபமாக வெறித்து பார்த்த அவன் முதலாளி , நீ முதலில் வீட்டுக்கு போ என்று உறுமி விட்டு வேகமாக நடக்கலானான்.
காவல் காரன் வியப்புற்று நோக்க , தூரத்தில் அகல்யா தள்ளாடி தள்ளாடி செல்வது தெரிந்தது.
ஏறி இறங்கிய இதய துடிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு அவன் முதலாளி கத்தினான் .
நில்லுங்க !! போகாதீங்க நில்லுங்க!!
அம்மா!!!!!!!!!!!!!!!! நில்லுங்க ..........................................
Comments
Post a Comment