AGALYAAVIN PARISU - 11 அகல்யாவின் பரிசு - 11





                                       நாராயணசாமி பம்பாயில் வசிக்கும் தன் பால்ய நண்பரிடம் பேசி தேவையான வசதிகளை செய்துகொண்டார். புறப்படும் நாளும் வந்தது. முதலில் நாராயணசாமியும் , அகல்யாவும் பயணமானார்கள். ராஜலிங்கத்தின் ஆள் ஒருவனும் அவர்களுடன் அதே வண்டியில் பயணப்பட்டான் .ஒரு வாரம் கழித்து வரும்படி சீனுவிடம் கூறிவிட்டு கிளம்பி இருந்தார் நாராயணசாமி.  

                                        அகல்யா பாவாடை தாவணியில் பம்பாய் சென்றாள். அவள் தந்தையின் நண்பர் மகள் அவளை முழுவதுமாக மேற்கத்திய உடைகள் அணிய செய்து ஆளையே அடையாளம் காண முடியாத அளவு மாற்றிஇருந்தாள் தற்பொழுது. தந்தையும் மகளும் முதல் இரண்டு நாட்கள் நண்பர் குடும்பத்தோடு ஒரு சில இடங்கள் சென்று சுற்றி பார்த்தார்கள். ராஜலிங்கத்தின் ஆள் பின்தொடர்ந்து வந்து தகவல் அனுப்பிக்கொண்டிருந்தான். மூன்றாம் நாள், நாராயணசாமி அகல்யாவுடன் தனியாக சில இடங்களுக்கு சென்று வர முடிவெடுத்து கிளம்பினார்கள். இதை ராஜலிங்கத்தின் ஆள் அறிந்துகொண்டு தகவல் அனுப்பினான். உடனே அவனுக்கு ராஜலிங்கத்தின் நண்பர் ஏதோ சொல்ல எவனும் தொலைபேசியில் தலையாட்டினான். 

                                            அன்று மாலை 7 மணி அளவில் அகல்யாவும் அவள் தந்தையும் பிரசித்திபெற்ற  கேட் வே ஆப் இந்தியாவை பார்க்க வந்திருந்தார்கள். அப்பொழுது சீனுவிடம் இருந்து போன் வந்தது. சீனு தான் பம்பாய் வந்துவிட்டதாக கூறினான். அவர்கள் இருக்கும் இடம் கூறி அவனை அங்கே வரச்சொன்னார் நாராயணசாமி.தன் நண்பரின் உதவியாளரிடம். அவரும் சீனுவை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர்.
வெகு நேரமாக காத்திருந்து நாராயணசாமி ஒரு டாக்ஸியில் புறப்பட்டார்.. அவர்கள் புறப்படவும் சீனு அவர்களை காணவும் சரியாக இருந்தது. டாக்ஸி வேகமாக சென்றது. பின்னால் சீனு வந்து கொண்டிருந்தான். டாக்ஸி ஒரு இடுக்கான சந்தில் நுழைந்து  ஒரு இருளான இடத்தில நின்றது. டாக்ஸி ரிப்பேர் ஆகிவிட்டதாக டிரைவர் கூறி இருவரையும் இறங்கச்சொன்னான். சந்தேகத்தோடு இருவரும் இறங்கியபோது , ஒரு போலீஸ் ஜீப் வேகமாக வந்து அகல்யாவை பார்த்து நின்றது. ஹேய் யார் நீங்கள் , ஜீப்பில் ஏறுங்கள் என்று போலீஸ்க்காரன் அதட்டினான். இவர்கள் பேசும்போதே டாக்ஸி டிரைவர் மின்னல் வேகத்தில் கிளம்பி மறைந்துகொண்டான். நாராயணசாமி ஏதோ விபரீதம் என்று உணர்ந்தார்.ராஜலிங்கம் ஏற்பாட்டின்படி அவன் ஆள் நாடகத்தை நடத்திக்கொண்டிருந்தான். வாக்கு வாதங்களுக்கு பிறகு திடீரென போலீஸ்க்காரன் அகல்யாவிடம் வேகமாக நெருங்கி அவள் கை பிடிக்க முயன்றபோது,மின்னல் வேகத்தில் வந்த பைக்கில் இருந்து சீனு பாய்ந்து அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். அவன் சுதாரிப்பதற்குள் சீனு அகல்யாவையும், நாராயணசாமியையும் கையை பிடித்து இழுத்து சென்று டாக்ஸியில் ஏற்றினான். சீனுவோடு வந்தவன் காரை கிளப்பினான். சீனு தான் வந்த பைக்கில் பின்தொடர்ந்தான். ஒரு நிமிஷத்தில் என்னென்னவோ நடந்தது என்று நினைப்பதற்குள் கார் மெயின் ரோட்டில் வேகமாக சென்றது. சீனு தொடர்ந்தான். டாக்ஸி டிரைவர் வாயில் அடித்து கொண்டே போலீஸ் ஸ்டேஷன் நோக்கி ஓடினான். வாயில் வழிந்த ரத்தத்தை துடைத்துக்கொண்டே போலீஸ்க்காரன் ஜீப்பை கிளப்பினான்.. ராஜலிங்கத்தின் ஆள் அதிர்ச்சியில் உறைந்துபோனான். 

டாக்ஸி வீடு வந்து சேர்ந்தபோது அங்கே குப்பலாக போலீஸ் நின்றுகொண்டிருந்தது. போலீஸ் பட்டாளம் இருப்பதை உணர்ந்த சீனு பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு நடந்து சென்று தூரத்தில் இருந்து கூர்ந்து கவனித்தான். போலீஸ் அகல்யாவை கைது செய்ய வந்திருக்கிறது என்று நண்பர் கூறினார். நாராயணசாமிக்கு தலை சுற்றியது.அகல்யா ஏன் என்று காரணம் கேட்டாள் . நண்பர் நா கூச தயங்கியவாறே , நீங்கள் பாலியல் தொழில் செய்வதாக அவர்களுக்கு சந்தேகம் உள்ளதாம் , அதற்காக உங்களை விசாரிக்கணுமாம் என்று கூறினார். நாராயணசாமி மயங்கினார்.போலீஸ் அகல்யாவை அழைத்து செல்ல, நண்பர் வக்கீல் வீட்டை நோக்கி ஓடினார். சீனு போலீஸ் ஜீப்பை யாருக்கும் தெரியாமல் பின் தொடர்ந்தான்.

சற்று தூரம் சென்ற ஜீப் நின்றது. இருட்டில் வேறு யாரோ ஒருவன்                            ( ராஜலிங்கத்தின் ஆளால் அனுப்பப்பட்டவன் ) ஏதோ வந்து கூறினான். போலீஸ் உடனே அகல்யாவை ஜீப்பில் இருந்து கீழே இறக்கி அவனிடம் இவள் தானே நீ உல்லாசம் அனுபவித்த பெண் என்றான். அவன் ஆமாம் , ஆனால் இவள் என் மோதிரம் , செயின் மற்றும் ரொக்கத்தையும் திருடி விட்டாள் . நீங்கள் தான் திருப்பி வாங்கிக்கொடுக்க வேண்டும் என்றான். திகைத்துப்போனாள் அகல்யா. அவளுக்கு வார்த்தையே வரவில்லை. போலீஸ் ஜீப்பில் இருந்த மூன்று போலீசும் , அந்த புது ஆளும் அகல்யாவை தவறான பார்வையோடு நெருங்கினார்கள்.. உங்க அப்பாவை லாக்கப்ல போடா சொல்லியாச்சு , அவனை அங்கேயே போடற போட்ல நீயா எல்லாத்தையும் குடுத்துடுவே என்று அரைகுறை தமிழில் கொக்கரித்தான். சீனு இப்போது சற்று விஷயம் புரிந்தவனாய், நடக்கப்போவதை ஊகித்துக்கொண்டான். எதோ பெரிய சதி பின்னப்பட்டிருக்கிறது என்பதை மட்டும் உணர்ந்தான் . அகல்யாவை காப்பாற்ற முடிவெடுத்து , வேகமாக பைக்கை ஓட்டிவந்து மூன்று நான்கு சுற்று சுற்றி நின்றான்.அவனை பார்த்ததும் நால்வரும் திகைக்க , சீனு எல்லோரையும் கீழே தள்ளி அகல்யாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு , கண்மண் தெரியாமல் ஏதேதோ பாதையில் வண்டியை ஓட்டி மெயின் ரோடு வந்து சேர்ந்தான். போலீஸ் அவர்களை விரட்ட அவன் மிக வேகமாக அந்த ஹை வே யில் திக்கு தெரியாமல் மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருந்தான்.

தொடரும்   

       
                                                  





















Comments

Popular posts from this blog

AGALYAAVIN PARISU - 26 அகல்யாவின் பரிசு - 26

AGALYAAVIN PARISU - 25 அகல்யாவின் பரிசு - 25

PALLI PARUVAM