AGALYAAVIN PARISU - 10 அகல்யாவின் பரிசு - 10
அகல்யாவின் பரிசு - 10
அகல்யா கல்யாண வீட்டில் மிகமிக சந்தோஷமாக உலா வந்தாள். பலவிதமான வேலைகளில் ஈடுபட்டதால் சீனுவை பற்றிய ஞாபகம் ஏதும் வராமல் இருந்தாள். மைதிலியின் கல்யாணமும் இனிதாய் நடந்து முடிந்தது. கல்யாணம் முடிந்து அகல்யா தன் வீட்டிற்கு புறப்படும் நேரமும் வந்தது. இப்போது தான் அகல்யாவின் மனதுக்குள் ஒரு விதமான சோகம் பரவுவதை உணர்ந்தாள். சீனுவை பிரியப்போகிறோம் என்பதே அதன் காரணமாக இருந்தது. அவனிடம் தன் காதலை உணர்த்த தவறியதற்காக தன்னை தானே நொந்துக்கொண்டாள். நாராயணசாமியும் அவளும் வீடு வந்து சேர்ந்தார்கள். மைதிலி தென்காசிக்கு வாழப்போனாள்.
நாட்கள் நகர்ந்தன . அகல்யா சீனுவை காணாமல் சோர்ந்துபோய் இருந்த நேரம் வாசலில் யாரோ கூப்பிடும் குரல் கேட்டு வெளியே வந்தாள் . அங்கே சீனு நின்று கொண்டிருந்தான்.
ஐயா இல்லிங்களா ?
இருக்கார் உள்ள வாங்க. உட்காருங்க . என்ன சாப்பிடுறீங்க ?
அப்பா இப்போ வந்திடுவார் என்று பொரிந்து தள்ளினாள்.

ஓ! அப்படியா !! சரிங்க எது இருக்கோ அதே போதும் என்றான். அகல்யா மிக சந்தோஷத்துடன் காபி போட்டு எடுத்துவந்தாள். அதற்குள் நாராயணசாமியும் வந்துவிட இருவரும் ஹாலில் உட்கார்ந்து பேசத்தொடங்கினார்.
அகல்யாவிற்கு அளவிலா ஆனந்தம். சீனுவை பார்த்ததும் பார்த்ததும் மனசு மிக லேசாக ஆனதாக உணர்ந்தாள்.
நாராயணசாமி செருமியவாறே சீனு, இது சரியாய் வரும், நீயென்ன பண்ணனும்னு நான் சொல்றேன், ஆனா நீ உன் மனச முழுமையா இதுல செலுத்தணும் , சரியா.
காபியோடு வந்த அகல்யா இருவருக்கும் கொடுக்க, நாராயணசாமி அகல்யாவிடம் திரும்பி, அம்மா, சீனுவை வைத்துக்கொண்டு நான் ஒரு புது பிசினஸ் ஆரம்பிக்கப்போகிறேன். அதற்குத்தான் வீட்டிற்கு பேச அழைத்தேன் என்றார். பரவாயில்லை அப்பா, நீங்க எது செய்தாலும் ஒரு காரணம் இருக்கும் என்றாள் சீனுவை கடைக்கண்ணால் பார்த்தவாறே.
ஐயா !! நீங்க எனக்கு தெய்வம் மாதிரி. எங்களை எல்லாரும் வெறுத்து ஓடஓட வெரட்டினப்போ நீங்கதானே ஐயா எங்களுக்கு ஒரு வாழ்க்கைய அமைச்சு குடுத்தீங்க.அதை நானும் என் அம்மாவும் என்னைக்குமே மறக்க மாட்டோம் ஐயா. நீங்க சொல்றமாதிரியே செய்யறேன் என்றான்.
பின்பு இருவரும் மிக உன்னிப்பாக ஏதோ விவாதித்தார்கள், பிறகு நாராயணசாமி சீனுவிடம், அப்போ சரி நாம் அடுத்த வாரம் சூரத் செல்வோம். நான் எல்லாத்தையும் பேசிட்டு சொல்லி அனுப்புறேன் என்றுகூறி அவனை அனுப்பிவைத்தார். அகல்யா ஜன்னல் வழியாக அவன் போவதை பார்த்து வேகமாக வெளியில் வர, நாராயணசாமி அவளிடம் , அம்மா அகல்யா, நான் புதுசா ஜவுளி வியாபாரம் தொடங்கப்போறேன். ரொம்ப நாளா உன்கிட்ட சொல்லிகிட்டே இருந்தேன் இல்லையா, ஒரு நல்ல நம்பிக்கையான ஆள் கிடைத்தால் ஆரம்பிச்சிடவேண்டியதுதான் என்று, இந்த சீனு இப்போ நல்ல வியாபார நுணுக்கமும், என் மேல நல்ல மரியாதையும் வச்சிருக்கான். இவனை விட சிறப்பான ஆள் கிடைப்பது கஷ்டம். அதனால இவனையே எனக்கு துணையா வச்சிக்கிட்டேன் என்றார். மொத்தமாக சூரத்தில் ஜவுளி எடுத்து இங்கு உள்ள கடைகளுக்கு சப்ளை செய்யலாம் என்று முடிவெடுத்து இருக்கேன். இங்கே ஒரு கோடௌன் பார்க்கோணும். அங்கே 60 நாட்கள் கடனில், நல்ல தரமான, நியாயமான விலையில் கொடுக்கும் வியாபாரிகளை கண்டு ஒப்பந்தம் செய்யணும்... இப்படி பல வேலைகள் இருக்குமா என்றார்.
அகல்யாவிற்கு மனசு குதூகலித்தது. அப்பா நீங்க அடுத்த வாரம் சூரத் போகும்போது என்னையும் அழைச்சுக்கிட்டு போங்கப்பா. நம்ம பாம்பேயெல்லாம் சுற்றி பார்த்துவிட்டு வரலாம் என்றாள். நான் வர ஒரு 15 நாட்கள் ஆகும் என்பதால், நானே உன்னை அழைத்துக்கொண்டு போக முடிவு செய்திருந்தேன் மா. இப்போ நீயே சொல்லிட்டே. கண்டிப்பா போலாம் என்றார். அகல்யா தனது வாழ்வையே திருப்பி போடப்போகும் அந்த பயணத்தின் பயங்கரம் அறியாமல் மிகவும் சந்தோஷப்பட்டாள்.
தொடரும்

Comments
Post a Comment