AGALYAAVIN PARISU - 30 அகல்யாவின் பரிசு - 30


அகல்யாவின் பரிசு -30

 மறுநாள் பொழுது விடிந்தது.

இரவு முழுவதும் அழுததால் வீங்கி போன கன்னத்துடனும், சிவந்த கண்களும், அகல்யா இறுக்கமான முகத்துடனும், தீர்மானமான ஓர் முடிவுடனும், கடவுளின் சன்னிதானத்தில் மனசாந்திபெறலாம் என்ற எண்ணத்துடன் கிளம்பினாள்.

அகத்தியர் அருவிக்கு பரிசலில் செல்ல வேண்டும். பரிசலில் ஏறும் முன்பு கண்ணனுக்கு சொல்லிஅனுப்பிவிட்டு பரிசலில் ஏறினாள்.

  • பெற்றால் தான் பிள்ளையா, இல்லை!! என்பதை நிரூபித்து கண்ணனுக்காகவே வாழ்ந்த கோகுலநாதனின் மனைவியின் பெருமை காப்பாற்றப்படவேண்டும்.
  • தனது குழந்தை தான் என்று நம்பும் சீனுவிற்கு தான் சீர்கெட்டுஅழிந்ததை கூறி, அவன் இல்லை அப்பன் என்று கூறாமல் அவன் மனநிம்மதியை காக்கவேண்டும் 
  • கோகுல்நாத்துக்கு அவரது வரட்டு கௌரவம் காக்கப்படவேண்டும்.
  • தான் கூறப்போகும் உண்மையால் கண்ணன் -- கோகுல்நாத் உறவு பாதிக்கப்படக்கூடாது.
  • தன் பிறப்பில் உள்ள அசிங்கத்தை அறிந்து கண்ணன் வேதனையோ தற்கொலையோ செய்துகொள்ளும் எண்ணம் உருவாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.



இத்தனை வேண்டுதல்களுக்கும் ஒரு விடை வேண்டும் இறைவா என்று மானசீகமாக அந்த திருச்செந்தூர் முருகனை வேண்டிக்கொண்டு கண்திறந்தவளுக்கு எதிரே ஹோவென்று விழும் அருவி கண்ணில் பட்டது.

அருவியை ஆயிரம் பேர் சுற்றி நின்று அதன் ரம்யத்தை ரசித்து ஆனந்தப்பட்டாலும், அது பாறைகளில் முட்டி மோதி துடிக்கும் வலியையும் வேதனையையும் யாரும் அறிவதில்லை. அந்த அருவியை போல் அகல்யாவும் தன்னை சுற்றி இருப்போருக்கு தனது வேதனையையும், வெறுமையையும் மறைத்து எல்லோருக்கும் ஆனந்தத்தை அளிக்க வேண்டும் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டாள். தூரத்தில் பரிசலில் கண்ணன் வருவது தெரிந்தது.

தீர்மானத்துடன் எழுந்தாள் அகல்யா. பரிசலில் ஏறினாள். அருவியின் அபாயகரமான பகுதிக்கு சென்றால் அகல்யா. கண்ணன் பதறியபடியே , அம்மா அங்கே போக வேண்டாம் , ஆபத்து என்று கத்தினான். கூப்பிடு தொலைவில் வந்த கண்ணணை சைகையால் நிற்கும்படி கூறிவிட்டு, ஹோவென்று இரைச்சலோடு கொட்டும் அருவியின் முன்புறத்தில் நின்று கொண்டு பேச தொடங்கினாள்.


கண்ணா !!! உன்ன மகனா பெற்றெடுக்க நான் கண்டிப்பா தவம் செய்திருக்கிறேன், ஆனா நீ அப்படி செய்திருகியான்னு எனக்கு சரியா சொல்ல தெரியவில்லை, ஒரு அம்மாவா உனக்கு ஒரு கதை சொல்ல கூடிய சந்தர்ப்பம் கூட கிடைக்காத எனக்கு, நடந்த கதை என்னனு கேட்டு நிக்கற உன்கிட்ட இப்போ அந்த கதையை சொல்ல கூடிய இடத்துல அந்த ஆண்டவன் என்னை நிறுத்தல.

அகல்யா மெல்ல தன் பரிசலுக்கு முட்டு கொடுத்த தடுப்பு கல்லை மெல்ல துடுப்பினால் விலக்கினாள்..

கோபுரம் எத்தனையோ இடியையும், மின்னலையும், வலியையும், வடுவினையும் தாங்கிகிட்டு , கர்பகிரகத்துல இருக்கிற தெய்வத்தை காப்பாத்துது, அது அந்த கடவுளுக்கும் தெரியும், ஆனா அதை எந்த ஆண்டவனும் கோபுரத்திடம் கேட்பதில்லை, கோபுரமும் தெய்வம் கேட்குமா என்று எதிர்பார்ப்பதில்லை, அதுபோல் தான் கண்ணா நீயும் நானும்.

பரிசல் மெல்ல அருவியின் முகத்துவாரத்தை நோக்கி நகர ஆரம்பித்தது.

 அம்மா !!! அம்மா!!! ஆபத்து அங்கே போகாதீங்க , அதுக்கும் மேல போன திரும்ப முடியாது, தண்ணீரின் வேகம் அதிகமாயிடும், நில்லுங்க மா என்று கத்தினான்.


நானும் உனக்கு தாயாக என்னால் முடிந்ததை செய்துஇருக்கிறேன் நீ கேட்காமல், அதற்கு மேல் நீயும் எதுவும் கேட்கவேண்டாம் கண்ணா!! என்னை மன்னிச்சுடு, நான் போறேன், அடுத்த ஜென்மத்துல உனக்கு கூடவே இருந்து உன்னை வளர்க்கிற பாக்கியம் படைத்த அம்மாவா பிறக்கணும்னு நான் ஆண்டவனை வேண்டுகிறேன், இன்னைக்கு உண்மைன்னு ஒரு பரிசை இந்த அகல்யா உனக்கு குடுக்கப்போறேன்.


அம்மா !!. எதுவா இருந்தாலும் பரவாயில்லை. நீங்க நில்லுங்க. இதுக்கு மேல போகாதீங்க  என்று கத்தினான்.


 தலைக்கு மேல வெள்ளம் போயிருச்சு கண்ணா. நான் சொல்ல போற உண்மைதான் என்னோட பரிசு உனக்கு. ஆமாம் கண்ணா, நம்ம குடும்ப பகை காரணமாக உன் பிறப்பில் சில மர்மங்கள் இருந்தது. அது ஒரு சில பேருக்கு மட்டுமே தெரியும். உன் அம்மாவுக்கு எப்படி தெரிஞ்சுது என்பது தெரியவில்லை. இதுல என்ன கொடுமைனா உங்க அம்மா பெத்த உன்னையே, என் குழந்தை என்று கூறி என்னிடம் கொடுத்து பின்பு ஓரிரு மாதங்களில் தத்து எடுத்தது போல் மீண்டும் உன் அம்மாவிடம் உன்னை சேர்த்துவிட்டார்கள் பெரியவர்கள். அந்த காரணங்கள் யாருக்கும் தெரியவேண்டாம்.. ஆனால் இனிமேல் என்னை பற்றிய நினைவுகளை மறந்து, எப்போதும் போல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இதுதான் என் ஆசை.கண்ணா. நான் போறேன் கண்ணா.. போறேன்... 

 பரிசல் வேகமெடுத்து சுழல ஆரம்பித்தது.

இனிமே என்ன அம்மாவா நினைக்காம இதனை நாள் யாரை அம்மாவை நினைச்சியோ, அவங்களையே உன்ன பெத்த அம்மாவா நினைச்சுகிட்டு, கோகுல்நாத்தையே உன் அப்பானு ஏத்துக்கிட்டு நீ வாழனும் கண்ணா!!! நீ வாழனும் !!இது தான் இந்த அகல்யாவின் பரிசு,அகல்யாவின் பரிசு !! அகல்யாவின் பரிசு !! அகல்யாவின் பரிசு !!
அகல்யாவின் குரல் அந்த மலைகளின் முகடுகளில் பட்டு எதிரொலியை தெறிக்க. அம்மா, அம்மா , அம்மா என்று கதறிக்கொண்டே பார்த்துக்கொண்டிருக்க, பரிசலோடு அகல்யா அழுதாலும் முகமலர்ச்சியோடு கை அசைத்தபடியே தனது முடிவை அரவணைத்துக்கொண்டிருந்தாள்

முற்றும்

Comments

Popular posts from this blog

AGALYAAVIN PARISU - 26 அகல்யாவின் பரிசு - 26

AGALYAAVIN PARISU - 25 அகல்யாவின் பரிசு - 25

PALLI PARUVAM