நட்பு
வெவ்வேறு அன்னையர்க்கு
வெண்முத்தாய் விதைந்தெழுந்தோம்
ஈரேழு வருடங்கள் அன்றில் பறவையென
அன்போடு கலந்திருந்தோம்
அறிவினை வளர்த்து அன்பினை இழைத்து
நட்பெரிக்கும் அணையா தீபமானோம்
ஆனந்தித்தோம், ஆராதித்தோம் அலைகடல் ஓயா
ஆனந்த அலைகளானோம்
வாழ்வியல் விரித்த வஞ்சக வலையில்
வாஞ்சையுடன் வீழலானோம்
வாழ்க்கையை வளர்தெடுக்க, எங்கெங்கோ
பறந்தோம் , அங்கேயே தொலைந்தோம்.
மழைத்துளி தூரிகையில் ஆதவனின்
சித்திரமோ வானவில்
சிந்தைத்தூரிகையின் சிதறிய மனச்சித்திரமோ
நட்பெனும் வானவில்
விழிமா நகர் சிங்கங்களே ! விலை மதிப்பில்லா தங்கங்களே !!
பணத்தாகம், பதவித்தாகம் தீர்ந்திடினும்
வெள்ளை உள்ளங்களே ! வெள்ளந்தி நெஞ்சங்களே !!
மனத்தாகம், மழலைத்தாகம் தீராதெனினும்
நயன் ஈக்கும் நல்லுள்ளங்களே ! நட்பின் இலக்கணங்களே
நட்பெனும் நறுமணம் நாளும் பேணுவோம்
ஒரு கொடியின் மலர்களே ! மலர்களின் இதழ்களே!!
ஆதவனாய், அடர்படர் அருகாய் என்றென்றும் நிலைத்திருப்போம்.
வடிவேலு
வெவ்வேறு அன்னையர்க்கு
வெண்முத்தாய் விதைந்தெழுந்தோம்
ஈரேழு வருடங்கள் அன்றில் பறவையென
அன்போடு கலந்திருந்தோம்
அறிவினை வளர்த்து அன்பினை இழைத்து
நட்பெரிக்கும் அணையா தீபமானோம்
ஆனந்தித்தோம், ஆராதித்தோம் அலைகடல் ஓயா
ஆனந்த அலைகளானோம்
வாழ்வியல் விரித்த வஞ்சக வலையில்
வாஞ்சையுடன் வீழலானோம்
வாழ்க்கையை வளர்தெடுக்க, எங்கெங்கோ
பறந்தோம் , அங்கேயே தொலைந்தோம்.
மழைத்துளி தூரிகையில் ஆதவனின்
சித்திரமோ வானவில்
சிந்தைத்தூரிகையின் சிதறிய மனச்சித்திரமோ
நட்பெனும் வானவில்
விழிமா நகர் சிங்கங்களே ! விலை மதிப்பில்லா தங்கங்களே !!
பணத்தாகம், பதவித்தாகம் தீர்ந்திடினும்
வெள்ளை உள்ளங்களே ! வெள்ளந்தி நெஞ்சங்களே !!
மனத்தாகம், மழலைத்தாகம் தீராதெனினும்
நயன் ஈக்கும் நல்லுள்ளங்களே ! நட்பின் இலக்கணங்களே
நட்பெனும் நறுமணம் நாளும் பேணுவோம்
ஒரு கொடியின் மலர்களே ! மலர்களின் இதழ்களே!!
ஆதவனாய், அடர்படர் அருகாய் என்றென்றும் நிலைத்திருப்போம்.
வடிவேலு
Comments
Post a Comment